LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்லின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவு !!

தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்லின் தமிழ் பணியை பெருமைப்படுத்தும் வகையில், அவரது 200வது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 


தமிழறிஞர் கால்டுவெல் அவர்கள் 7.5.1814-இல் அயர்லாந்தில் பிறந்து 1891-ல் தமது 77-ஆவது வயதில் தமிழ்நாட்டில் கொடைக்கானல் மலையில் உயிர் துறந்தார். அவரது உடல் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் அவர் எழுப்பிய திருச்சபை ஆலயத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.


தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்கள் ஸ்காட்லாந்தில் கல்வி பயின்று 23-ஆவது வயதில் சமயப் பணிபுரிவதற்காகத் தமிழகம் வந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் இடையன் குடியை இருப்பிடமாகக் கொண்டு தமிழ்ப்பணி ஆற்றி வந்த இவர் இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, ஜெர்மன், பிரஞ்சு போன்ற மேலைநாட்டு மொழிகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற தென்னக மொழிகளிலும் போற்றத்தக்கப் புலமை பெற்றிருந்தார். அதன் பயனாக "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் ஒப்பிலா உயர் தமிழ் மொழியில் ஆய்வு நூல் ஒன்றை எழுதினார். தனித்து இயங்கக் கூடியது தமிழ் எனத் தக்க சான்று காட்டித் தருக்க முறையில் அறுதியிட்டு கூறியவர் தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல்.


இந்நூலே, தமிழ் மொழியின் மொழியியல் ஆய்வுக்கு முன்னோடியாக அமைகிறது. திராவிட மொழிகள் ஒரு தனியினம், அவற்றிற்குத் தாய் தமிழே என விலக்கி உலகுக்கு உணர்த்தி மொழியியல் ஆராய்ச்சியில் நமக்கு வழிகாட்டிய விடிவெள்ளி ஆவார். திராவிட மொழிகட்குப் புத்துயிர் அளித்தவர். இவரது ஒப்பிலக்கண ஆய்வு பணியைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகமும், இராயல் ஏசியாடிக் சொசைட்டியும் அவருக்கு இலக்கிய வேந்தர், வேத விற்பன்னர் என்ற பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்தின,. எத்தனையோ பேர் கூடிச் செய்ய இயலாப் பெரும்பணியை, எத்தனையோ பிறவி எடுத்துச் செய்யும் தமிழ்த் தொண்டினை ஒரு பிறவியில் ஒருவராகவே இருந்து செய்து, செந்தமிழை உலகறியச் செய்தார்.


தமிழ்மொழி நூல் ஆய்வுக்கு முன்னோடியாக இருந்த தமிழறிஞர் கால்டுவெல் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது இருநூற்றாண்டை சிறப்பிக்கும் வகையிலும் அவரின் இருநூற்றாண்டு நினைவு நாளான 7-5-2014 அன்று காலை 9.00 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் இடையான்குடியில் அமைந்துள்ள நினைவில்லத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலையணிவித்து பெருமைப்படுத்தவும், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து பெருமைப்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. 

by Swathi   on 06 May 2014  0 Comments
Tags: Robert Caldwell   Robert Caldwell Tamil   Tamil Robert Caldwell   Tamil Arignar   தமிழ் அறிஞர்   ராபர்ட் கால்டுவெல்     
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழறிஞர்க்கு பத்மஸ்ரீ விருது..! அமெரிக்கத் தமிழறிஞர்க்கு பத்மஸ்ரீ விருது..!
தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்லின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவு !! தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல்லின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.