LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- மூலம் (Piles)

பெளத்திர நோய்க்கு ஆயுர்வேதத்தில் மருந்து

பசி எனும் தீயை கெடுக்கும் உணவும் பானகங்களும் பெளத்திர நோயை ஏற்படுத்துகின்றன. இவை நேரடியான காரணங்கள். நேரடியில்லாத வேறு சில காரணங்காளாலும் பசி மந்தமாகி, பெளத்திரம் வரலாம். ஒரே இருக்கையில் அதிக நேரம் அமர்ந்திருத்தல், மலம், சிறுநீர், குடல்வாயு ஆகியவற்றை அடக்குதல், அதிகமான உடலுறவு, எண்ணெய்ப் பண்டங்களை அதிகமாய் சாப்பிடுதல், காரம், புளி மிகுந்த உணவு, மனதில் அடிக்கடி ஏற்படும் தாபம், சோகம் போன்ற காரணங்களால் குடலில் வெளியேற வேண்டிய மலாம்சம் தடையுற்று ஜீரணம் கெட்டு விடுகிறது. அஜீரண நிலையில் பதனழிந்த உணவின் சாரம் இரத்தத்துடன் கலந்து தாதுக்களில் பரவும்போது அதன் சத்து உறிஞ்சப்படாமல் ஆஸன வாயின் வெளிப்பகுதியில் ஒன்று இரண்டு அங்குல தூர இடைவெளியில் கட்டியை உண்டாக்குகிறது. முதலில் உளுந்து போன்று சிறிதாகவே வெளியில் தோன்றும். வாய் இல்லாமல் சிறுமுண்டாகவே இருக்கும். ஆனால் நாளடைவில் ஆஸனவாயின் உட்புறம் நோக்கி குறுக்காகவோ நெடுக்காகவோ உள் குழாய் உண்டு பண்ணிக்கொண்டு புரை ஓடத் தொடங்கும். இந்தப் புரைப்புண் குழாய், ஆஸனவாயைத் துளைத்துக்கொண்டு அதனுள்ளேயும் பரவும். வெளியே முதலில் தோன்றிய கட்டியின் வாய் திறந்து சிறிய பிளவு ஏற்படும். இந்தப் பிளவுக்கும் ஆஸனவாய்க்கும் சுரங்கம் போல் தொடர்பு ஏற்படும். இதை பெளத்திர நாடீ வ்ரணம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இந்தப் பிளவையிலிருந்துதான் தங்களுக்கு சீழ்போல் வந்து கொண்டிருக்கிறது.

ஆயுர்வேத மருந்துகளில் சிரிவில்வாதி கஷாயம் 200 மிலி கிடைக்கும். 3 ஸ்பூன்  கஷாயம்,2 ஸ்பூன்  சூடான தண்ணீர்,சிட்டிகை இந்துப்பு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். மாலையில் துஸ்பர்ஸகாதி கஷாயம் காலை மருந்தின் அதே அளவில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். குக்குலுபஞ்ச பல சூர்ணம் அரை ஸ்பூன். ஒரு ஸ்பூன் தேனுடன் குழைத்து காலை இரவு உணவிற்கு 1 மணிநேரம் முன்பாக நக்கிச் சாப்பிடவும். திரிபலா சூர்ணம் 10 கிராம் அளவில் கருங்காலிக் கட்டை 5 கிராமுடன் சிறுதுண்டுகளாக வெட்டிச் சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்கவிட்டு வடிக்கட்டி, வெதுவெதுப்பாக இரவில் படுக்கும்முன் புண்ணைக் கழுவப் பயன்படுத்தவும்.

by Swathi   on 08 Dec 2012  2 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சித்தமருத்துவக் குறிப்புகள்   சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி சித்தமருத்துவக் குறிப்புகள் சித்தமருத்துவர் கோ.அன்புக்கணபதி
மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி? Healer Baskar
சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை சித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை
தூக்கம் -Healer Baskar தூக்கம் -Healer Baskar
சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha சித்த மருத்துவத்தின் சிறப்புக்கள் | Maruthachala Adigal speech, Ulaga Siddhar Marabhu Thiruvizha
சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி சித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி
டான்சில்ஸ், Healer Baskar டான்சில்ஸ், Healer Baskar
இனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம - 2/3 இனிமையான வாழ்க்கைக்கு சித்தர்கள் தரும் நெறிகள் - முனைவர் திரு. அழகர் இராமனுஜம - 2/3
கருத்துகள்
13-Jul-2017 19:49:44 suresh said : Report Abuse
ப்ளஸ் ஹெல்ப் மீ போர் பௌத்ரம் கட்டி பைந் ஹொவ் டு ரெட்டிப்பிய தி ப்ரோப்லேம்
 
01-Apr-2015 03:58:16 ranjit said : Report Abuse
Ponthiram eanna sapitalamunnu sollave illaye pls sollunga
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.