|
||||||||
டோக்ளா (tokla) |
||||||||
தேவையானவை: கடலை மாவு -100 கிராம் தயிர்- 80 கிராம் தண்ணீர்- 25 மில்லி கடுகு, மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன் உப்பு -தேவையான அளவு பெருங்காயம் -அரை டீஸ்பூன் இஞ்சி விழுது -ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் -1 தேங்காய் துருவல்- 2 டீஸ்பூன் கொத்தமல்லி- சிறிதளவு வெங்காயம்- 2 செய்முறை : 1.முதலில் பாத்திரத்தில் கடலை மாவு, தயிர், தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு இதை நன்றாக சேர்த்து, கலந்து கொள்ளவும். 2.பிறகு இஞ்சி விழுது, வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றை கடுகோடு சேர்த்து, தாளித்து, தனியே வைக்கவும். 3.கலந்து வைத்த மாவில் கொத்தமல்லி, தேங்காய் துருவலை கலந்து, குக்கரில் வேக வைக்கவும். 4.பிறகு சின்ன, சின்ன துண்டுகளாக நறுக்கி, தனியாக தாளித்து வைத்த பொருட்களை துண்டுகளுடன் சேர்க்கவும் |
||||||||
by on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|