|
||||||||
தக்காளி ஆம்லட் (tomato hamblate) |
||||||||
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம் தக்காளி - 250 கிராம் மிளகாய் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பாட்டு சோடா - அரை டீஸ்பூன் எண்ணெய் - 100 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் பொடி, உப்பு ஆகியவற்றைப் போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு போல் கரைத்துக் கொள்ளுங்கள். 2.தக்காளியை கொதிக்கும் தண்ணீரை விட்டு தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் உப்பு போட்டுநன்றாகப் பிசையுங்கள். 3.பிறகு தோசைக் கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணய் விடுங்கள். கடலை மாவை ஒரு கரண்டி எடுத்து தோசை போல் பரவலாக விடுங்கள். 4.அதன் மீது தக்காளியை ஒரு ஸ்பூன் எடுத்து விடுங்கள். 5.மறுபடியும் ஒரு ஸ்பூன் கடலை மாவை அதன் மீது விட வேண்டும். 6.கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயைச் சுற்றிலும் விட்டு பொறிந்து வெந்ததும் திருப்பிப் போட்டு சிவந்ததும் பரிமாறவும். |
||||||||
by on 01 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|