LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

பொன்னாங்கண்ணி கீரையின் பொக்கிஷமான 10 பயன்கள் !!

பொன்னாங்கண்ணி கீரை உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சாதாரணமாக காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும், எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது. எங்கும் வளரும் தன்மை கொண்டது. இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. பொன்னாங்கண்ணி கீரையில் இரண்டு வகை உண்டு, அவை,  சீமை பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி ஆகும் இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. நாட்டு பொன்னாங்கண்ணியை தான் பெரும்பாலும் மருத்துவத்திற்கும், சமையலுக்கும் பயன்படுத்துவார்கள். நாட்டு பொன்னாங்கண்ணி பல அறிய மருத்துவ குணங்களை கொண்டது.பொன்னாங்கண்ணி கீரையின் முக்கியமான 10 பயன்கள் பற்றி இங்கு காண்போம்,


பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர, கண் பார்வை நன்றாக தெரியும். 


இந்த கீரை கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி, கண்ணில் நீர்வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்களை குணமாக்கும் தன்மைகொண்டது. 


பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு, உப்பு சேர்த்து, கடைந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். இதையே துவரம் பருப்பு, நெய்யுடன் சாப்பிட்டால் உடல் எடை கூடும்.


வாய் நாற்றம், வாய்ப்புண் ஆகியவையும் குணப்படுத்தும்.


சொறி, சிரங்குகளுக்கு சிறந்த மருந்து.


இந்த கீரையில் கல்சியம் அதிக அளவில் இருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் ரொம்பவே முக்கியம்.


பொன்னாங்கண்ணி கீரையுடன், பாசிபருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுதூள் ஆகியவற்றை சேர்த்து கடைந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். மேலும் உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.


500 கிராம் பொன்னாங்காணி கீரையுடன், 100 கிராம் வெங்காயம் 6 பல் பூண்டுடன் சமைத்து சாப்பிட்டால் மூலம் நோய் குறையும்.


ஆண்களின் விந்து உற்பத்திக்கு இந்த கீரை மிகவும் உபயோகமாக இருக்கும்.


கூந்தல் நன்றாக வளர பொன்னாங்கண்ணிச் சாற்றை தேங்காய் எண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தைலமாக பயன்படுத்தலாம். 

by Swathi   on 09 Nov 2013  5 Comments
Tags: Ponnanganni Keerai   Ponnanganni Spinach   பொன்னாங்கண்ணி   பொன்னாங்கண்ணி கீரை           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பொன்னாங்கண்ணி கீரையின் பொக்கிஷமான 10 பயன்கள் !! பொன்னாங்கண்ணி கீரையின் பொக்கிஷமான 10 பயன்கள் !!
கருத்துகள்
09-Sep-2016 10:36:33 Muthuramalingam pazhanimuthu said : Report Abuse
பல நல்ல மருத்துவ குணங்களை பகிர்ந்தமைக்கு நன்றி, அருமை.
 
12-Apr-2016 12:00:09 கு.சின்மயானந்தன் said : Report Abuse
தகவலுக்கு நன்றி எனக்கு தெரிந்த ஒரு பழமொழி, "போன கண்ணும் திரும்பும் பொண்ணாங்கன்னி கீரையிலே"
 
24-Dec-2015 20:42:16 எ.RAVU said : Report Abuse
ரொம்ப நன்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆசை / பயனுள்ள தகவல் மிக்க நன்றி .
 
11-Feb-2015 07:01:33 paulraj said : Report Abuse
ரொம்ப நன்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆசை .
 
06-Aug-2014 20:55:58 chidambaram said : Report Abuse
பயனுள்ள தகவல் மிக்க நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.