LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- கால் பராமரிப்பு (Foot Care)

பித்த வெடிப்பு மறைய 10 டிப்ஸ் !!

பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பாத பிரச்சனைகளுள் மிக முக்கியமானது பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்ளும் பெண்களோ ஏராளம். 


பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…


வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வந்தால், பித்தவெடிப்பு விரைவில் குணமாகும்.


மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.


பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு மறையும்.


வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.


விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.


கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.


இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வரலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.


குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.


தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

by Swathi   on 01 Mar 2014  13 Comments
Tags: Foot Crack   Natural Foot Crack   Foot Crack Treatments   பித்த வெடிப்பு   பித்த வெடிப்பு மறைய   Pitha Vedippu     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பித்த வெடிப்பு மறைய 10 டிப்ஸ் !! பித்த வெடிப்பு மறைய 10 டிப்ஸ் !!
பாத வெடிப்பிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ் !! பாத வெடிப்பிலிருந்து விடுதலை பெற சில டிப்ஸ் !!
கருத்துகள்
16-Jan-2017 08:10:05 saral said : Report Abuse
Super
 
27-Dec-2016 21:57:54 துர்கா said : Report Abuse
சூப்பர்தோழி
 
05-Nov-2015 13:19:32 supas said : Report Abuse
Thank You for your information
 
17-Oct-2015 22:38:32 jeeva said : Report Abuse
அம்மா கு ரொம்ப நாலா இந்த ப்ரொப்லெம் இருக்கு இனிமே இது சரியாகிடும் நு நெனைக்குறேன். சூப்பர் டிப்ஸ்
 
20-May-2014 07:42:27 aruna said : Report Abuse
பாதத்தின் நடுவில் வெடிப்பு உள்ளது. குணமாக வழி சொல்லுங்கள். ப்ளீஸ்.
 
23-Apr-2014 02:46:17 veeramani said : Report Abuse
Most useful tips, thanks
 
01-Apr-2014 00:16:40 த.எலிசபெத் said : Report Abuse
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
 
31-Mar-2014 09:21:31 kamatchi said : Report Abuse
நல்ல பயனுள்ள குறிப்புகள்
 
29-Mar-2014 03:25:17 சாந்தி said : Report Abuse
மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி
 
21-Mar-2014 01:48:25 umabathy said : Report Abuse
fine fact inta fact miga arumai
 
20-Mar-2014 23:34:30 வ. அன்புக்கரசி said : Report Abuse
ரொம்பவும் பயனுள்ள தாக இருக்கிறது. மிகவும் நன்றி
 
20-Mar-2014 23:34:30 வ. அன்புக்கரசி said : Report Abuse
ரொம்பவும் பயனுள்ள தாக இருக்கிறது. மிகவும் நன்றி
 
01-Mar-2014 04:17:57 ர.அன்பரசி said : Report Abuse
சூப்பர்.........
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.