LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரயிலில் டிக்கெட் எடுக்கதவர்களை காப்பாற்ற புதிய இன்சுரன்ஸ் திட்டம் !!

ரயில்களில் மக்கள் கூட்டம் இருந்தும் போதிய வருவாய் வருவதில்லை என அரசு கவலை பட்டுவரும் நிலையில், வட மாநிலங்களில் ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்வோரைக் காப்பாற்ற நூதன முறையில் மோசடிகள் அரங்கேறத் துவங்கியுள்ளன.

 

ரயில்வே துறையின் வருவாயை பெருக்க, மத்திய அரசு, புதிய ரயில்கள், புதிய ரயில்வே வழித்தடங்கள் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த புதிய திட்டங்களுக்கு ஏற்ப பணியாளர்களை நியமிப்பதில்லை என பலதரப்பில் இருந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ரயில்வே துறையில் வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் குறைவான ரயில்களில் அதிகமான வருவாய் கிடைக்கிறது. இதற்கு காரணம் வட மாநிலங்களில் ரயிலில் பயணிப்போர் சிலர் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயனிப்பதேயாகும். 

 

மும்பை போன்ற பெருநகரங்களில் பயணச்சீட்டு எடுக்காமல் செல்வோரைக் காப்பாற்றுவதற்கென்றே பல நூதன முறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன, இவற்றில் ஒன்றுதான், இன்சூரன்ஸ் முறை. இந்த முறைப்படி, தினமும் பயணம் செய்யும் ரயிலில், முன் பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பில் பயணம் செல்வோர், டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை; அதற்கு செலவாகும் தொகையில், பாதிக்கும் குறைவான தொகையை இன்சூரன்ஸ் கும்பலுக்கு தவணையாக ஆகச் செலுத்த வேண்டும்; அதன்பின், அந்த ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்யலாம். டிக்கெட் பரிசோதகர் யாரிடம் அந்த பாலிசிதாரர் சிக்கினாலும் கவலைப்பட வேண்டியதில்லை; டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை இன்சூரன்ஸ் கும்பல் செலுத்தி விடும்; இல்லாவிடில், அந்தத் தொகையை செலுத்தி விட்டு, அந்த ரசீதைக் காண்பித்தால், அபராதத்தொகையை இன்சூரன்ஸ் கும்பல் வழங்கி விடும். டிக்கெட் பரிசோதகர்களின் எண்ணிக்கை குறைவே இவர்களின் தொழில் முதலீடாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வட மாநிலங்களில் பிரபலமடைந்த இந்த இன்சுரன்ஸ் கும்பல் தற்போது தென் மாநிலங்களிலும் காலடி எடுத்துவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

by Swathi   on 31 Oct 2013  0 Comments
Tags: Insurance Scheme   With out Ticket   இன்சுரன்ஸ் திட்டம்   பயணச்சீட்டு   ரயில்வே துறை        
 தொடர்புடையவை-Related Articles
இந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்... இந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்...
ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
ரயிலில் டிக்கெட் எடுக்கதவர்களை காப்பாற்ற புதிய இன்சுரன்ஸ் திட்டம் !! ரயிலில் டிக்கெட் எடுக்கதவர்களை காப்பாற்ற புதிய இன்சுரன்ஸ் திட்டம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.