LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

சாலையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை !

1. மத்திய வேளைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.


2. சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.


3. சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.


4. ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.


5. ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.


6. ஓட்டுனருக்கு 67 அடி தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.


7. கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.


8. நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.


9. வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.


10. கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.


11. நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.


12. நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம். 

by Swathi   on 16 Jul 2013  43 Comments
Tags: Traffic Rules   Road safety Tips   சாலை பாதுகாப்பு              
 தொடர்புடையவை-Related Articles
சாலையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ! சாலையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை !
கருத்துகள்
17-Mar-2021 04:25:43 Lenin said : Report Abuse
விதிகளை மீறி செல்பவர்களுக்கு மரணம் நிச்சயம் பெரும்பாலான வாகன ஓட்டிகள் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை அதிலும் ஆட்டோ எனப்படும் மூன்று சக்கர வாகனம் மற்றும் மினி பேருந்து ஓட்டுனர்கள் யாவரும் பின் விளைவுகளை அறிந்து கொள்ளாமல் சாலை விதிமுறைகளை மதிக்காமல் அதிவேகமாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஆகவும் செல்கின்றனர் ஆட்டோ ஓட்டுனர்கள் யாவரும் சாலையின் திருப்பத்தில் வலது மற்றும் இடது புறம் இன்டிகேட்டர் என்னும் விளக்கை பயன்படுத்துவதில்லை இதன் விளைவு பின்னால் வருகின்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் அதிக பாரம் உள்ள வாகனங்கள் இவற்றுக்கு உள்ளாகின்றன ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் பின் வரும் வாகனங்களை கவனிக்காமல் பயணிகளை இயற்றும் கவனத்தில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென்று நிறுத்திவிடுகிறார்கள் அதன் காரணத்தினால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது இது ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் மினி பேருந்து ஓட்டுனர்கள் மக்கள் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் எனவே சாலை விதிமுறைகள் மற்றும் முக விளக்கு மற்றும் விருப்பத்தின் அறிகுறிகளான இண்டிகேட்டர் களை மற்றும் வேகத்தினை சரியான வகையில் இயக்க
 
16-Jan-2020 18:40:50 Sathis said : Report Abuse
Traffic police 100s லஞ்சம் kettu yen duplicate license ah vangitaru return tharala adhunala any problems varuma?
 
24-Nov-2019 15:29:48 Viji said : Report Abuse
I like you
 
31-Oct-2019 14:52:52 Althaf Basha said : Report Abuse
When a car driving at night. The light of opposite side vehicle makes our eyes tingles. So at this time what will i do...
 
15-Mar-2019 15:35:48 ரவிச்சந்திரன் said : Report Abuse
லேடீஸ் ட்ரிப்லஸ் போனா அவங்கள நிறுத்தவோ அல்லது அவங்களுக்கு பைன் போடும் போதோ லேடி போலீஸ் ஆண் போலீஸ்police உடன் கட்டாயம் இருக்க வேண்டுமா
 
12-Jul-2018 07:27:53 Annadurai said : Report Abuse
Government busla mattum over load people yeathalama.
 
14-Feb-2018 10:54:56 Sheikkhader said : Report Abuse
நெடுந்சாலையில செல்லும்போது முகப்பு விளக்கை டிப் செய்து ஓட்டலாமா
 
25-Jan-2018 06:40:24 Sakthivel.S said : Report Abuse
Thanks sir
 
25-Jan-2018 06:38:05 சக்திவேல் said : Report Abuse
My original Driving Licence was receiveed the traffic police due to without Helmet and also received penalty Rs.200.00. How can i get it?
 
04-Dec-2017 18:29:46 Sam said : Report Abuse
இரு சக்கர வாகனங்களை மோடிஃபிகேஷன் செய்து சாலையில் ஓட்டலாமா?? உதாரனத்திற்க்கு, சைலன்ஸர் வடிவத்தை மாற்றியோ அல்லது வேறு சைலஸர் பொருத்தி இரு சக்கர வாகனம் ஓட்டலாமா? அதற்க்கு ஏதும் தடை அல்லது மறுப்பு உள்ளதா??
 
24-Nov-2017 14:52:34 M.sakthi said : Report Abuse
Led விளக்கு இரு சக்கர வாகனங்களில் உபயோக படுத்தலாம
 
04-Nov-2017 04:55:06 vaanishree said : Report Abuse
நன்றி என் செயல்திட்டத்திற்கு உதவிபுரிந்தது இந்த சலைவிதிகள் நன்றி
 
28-Oct-2017 14:10:55 நாகராஜன் said : Report Abuse
நீங்கள் பதிவு இட்டுள்ள தகவல் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி, ஓட்டுநர் கனரக வாகனம் ஓட்ட மூத்த குடி மகன்களுக்கு வயது என்ன இருக்க இருக்க வேண்டும் .
 
20-Oct-2017 05:34:52 குமார் said : Report Abuse
சீட் பெல்ட் போடாமல் கார் ஓட்டி சென்றால் எவ்வளவு அபராதம்
 
10-Sep-2017 11:26:59 ராமச்சந்திரன்.R said : Report Abuse
நன்றி ஆனால் uniform கட்டாயம் தேவையா நேஷனல் பர்மிட் வண்டி
 
06-Sep-2017 23:08:25 Abdul hameed G. said : Report Abuse
ஐயா நான் இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கத்தில் நிர்வாகியாக இருக்கின்றேன் எங்கள் தொழில் சார்ந்த நபர்களுக்கு இந்த புதிய சாலை பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மூலம் பாதிப்பு உள்ளதா? என அறிய விரும்புகிறேன் தமிழில் தெரிவிக்கவும். நன்றி..
 
09-Aug-2017 04:32:56 விவகார said : Report Abuse
மிகவும் பயனுள்ள விஷயம் மிக்க நன்றி..
 
10-Jul-2017 16:14:05 s. raja said : Report Abuse
இந்த செய்திகள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி
 
25-Jun-2017 07:32:37 Sai said : Report Abuse
In which places and all road barigaurd can be kept.and please inform rules of toll பிளாசா Thank யு
 
15-Jun-2017 00:41:28 ஜீவானந்தம்.T said : Report Abuse
Very use for message
 
18-May-2017 00:44:05 காஜாமைதீன் said : Report Abuse
தகவலுக்கு நன்றி. பேரூந்து மற்றும் பயணிகளின் பாதுகாப்பு சட்ட விதிகள் பற்றிய தகவல் கிடைக்குமா
 
21-Feb-2017 00:00:40 ட Raman said : Report Abuse
ப்ளீஸ் ட்ராபிக் போலீஸ்காரர்கள் கடைப்பிdiக்க வேண்டிய விதிமுறைகளை தமிழில் பிடிஎப் பார்மட்டில் அனுப்ப முடியுமா?
 
11-Feb-2017 01:45:23 ஜெய்கணேஷ் said : Report Abuse
மிகவும் நன்றி
 
18-Jan-2017 02:20:18 வீரகுமார் said : Report Abuse
இந்த கருத்துக்களை நானும் தெரிந்துகொண்டேன் ரொம்ப நன்றி
 
18-Jan-2017 02:17:32 பிரகாஷ் said : Report Abuse
இந்த விஷயங்களை நானும் தெரிந்து கொண்டேன் .ரொம்ப ரொம்ப நன்றி .......
 
16-Dec-2016 11:55:23 prasanth said : Report Abuse
labanaஎல்லாம் கரெக்ட் தன அனா நம் டிரைவ் செய்யும் பொது கக்கி சட்டை பொட்டலன்னு police புடிக்கிறாங்க அதுக்கு காசு ல்லனு கோர்ட்ல கட்டிகளும்அத பத்தி கொஞ்சம் sollunga
 
04-Nov-2016 07:04:38 Saravana said : Report Abuse
Goood
 
16-Oct-2016 06:34:48 சி. மணி said : Report Abuse
அவசர அழைப்பு எண் 112 தந்தமைக்கு நன்றி. இது இது நாள் வரையில் இது தெரியாது. தேங்க்ஸ் எ லாட்
 
06-Aug-2016 23:03:59 Lakshmanan said : Report Abuse
சாலை வரிகள் செலுத்தாமல் கம்பி ஏற்றி செல்லும்(சுமார் 25 அடி தூரம் வரை சாலையை ஆக்கிரமிக்கும் ) தட்டு வண்டிகள் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதை பற்றி போக்குவரத்துத்துறையின் கருத்து என்ன? தடை செய்தும் இன்னும் தட்டு வண்டிகள் ஓடுவது ஆச்சரியமாக உள்ளது. போக்கு வரத்து காவல் துறை என்ன செய்கிறது?
 
01-Jul-2016 04:27:42 Balaji said : Report Abuse
மோஸ்ட் பீபிள்ஸ் ஹாஸ் நோட் போல்லோவ் தே ரூல்ஸ் இந்த திஸ் குரூப் இனம் ஆல்சோ புட் ரேவேம்பேர் தட் போலோவிங் இன்ஸ்ட்ருக்ஷன் அன்றே உசெபிஉல்.....
 
25-May-2016 01:32:27 லிங்கராஜ்.ச said : Report Abuse
குட்
 
09-Feb-2016 05:16:40 Francis priya said : Report Abuse
thankyou somuch For the all massages.
 
27-Jan-2016 01:12:15 திருப்பத்தூரான் சீ.சேவியர் said : Report Abuse
நீங்கள் பதிந்துள்ள அனைத்து கருத்துக்களும் பயனுள்ளவையே. நன்றி இது போன்ற செய்திகளை நான் தெரிந்து. புரிந்து. அதன்படி கடந்த 2015 ஜனவரியில் சாலை பாதுகாப்பு வார விழாவில் எமது திருப்பத்தூரான் கலைக்குழு நமது மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் முன்னிலையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வழங்கியது, இந்த நிகழ்வுகளுக்கு உறுதுணையாக இருந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனைத்து ப்ராஜெக்ட் இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி
 
09-Jan-2016 05:42:05 மோகன் குமார் said : Report Abuse
மிகவும் பயனுள்ளதாக உள்ளது
 
26-Oct-2015 03:03:12 அ.சக்திபாபு said : Report Abuse
இதுவரை நான் தெரியாமல் இருந்த சாலை விதிகளை, இந்த செய்தி மூலம் தெரிந்துகொண்டேன், மிக்க நன்றி...
 
04-Jun-2015 20:16:35 rohit said : Report Abuse
மிகவும் பயணளிகிரத் தகவலுக்கு நன்றி
 
11-Jan-2015 19:53:03 praba said : Report Abuse
Nan epo than driving class poitu iruken...entha driving rules enaku romba usefulla iruku...
 
01-Jan-2015 03:24:07 saranya said : Report Abuse
ரோடு விதிகளின் செய்தியில் ஏன் அரளி செடிகளை வளர்க வேண்டும் என மிக தெளிவாக அறிந்து கொண்டேன் இவ் வலை தளத்திற்கு மிக்க நன்றிகள் பல..............
 
01-Jan-2015 03:16:29 revathi said : Report Abuse
இத்தகவல் மிகவும் பயனுள்ளது . மிக அரிதான அவசர எண்களான 112, 155377 பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
 
30-Dec-2014 15:44:14 jagan said : Report Abuse
மிகவும் பயனுள்ள செய்தி மிக்க நன்றி
 
30-Nov-2014 23:01:10 sawmya said : Report Abuse
தேங்க்ஸ்.
 
01-Feb-2014 23:06:46 ்.Jahir ுசைன் said : Report Abuse
அவசர அழைப்புக்கு 108 போல் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் இலவச அமரர் ஊர்தி இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக தமிழகம் முழுவதும் சேவை செய்கின்றனர் இதையும் மக்கள் பயன் படுத்திக்கொள்ளவும் அழைப்பு எண் 155377
 
23-Dec-2013 10:57:48 கண்ணதாசன் said : Report Abuse
அவசர அழைப்பு 112 என்ற தகவலுக்கு நன்றி,வாகனங்களின் அதிக ஒளியை கட்டுக்குள் கொண்டு வர போக்குவரத்து த் துறை முன்வர வேண்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.