LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com

தலைப்பக்கம்

ட்விட்டரின் முகப்பின் தலைப்பில்,

@connect – Interactions – https://twitter.com/#!/i/connect – இந்த பகுதியில் அண்மையில் புதிதாக உங்களை பின்பற்றியவர்கள், உங்களுக்கு பதில் அனுப்பியவர்கள், உங்கள் கீச்சை மீள்கீச்சு செய்தவர்கள் & விருப்பங்களில் சேர்த்தவர்கள் பட்டியலிடப்பட்டிருப்பார்கள்.

@mentions – https://twitter.com/#!/mentions – உங்கள் கீச்சுகளுக்கு எழுதப்பட்ட பதில்களை இங்கே காணலாம்.

#Discover
– Stories – https://twitter.com/#!/i/discover – உலகளாவிய ட்விட்டரில் தற்போது விவாதிக்கப்படும் முக்கியமான செய்திகளின் தொகுப்பு.Activity – https://twitter.com/#!/activity – நீங்கள் பின்பற்றும் நண்பர்களின் ட்விட்டர் செயல்பாடுகளை காட்டும் பகுதி இது. அவர்கள் ஒருவரை பின்பற்றினாலோ, ஒருவரது கீச்சுகளை மீள்கீச்சு அல்லது விருப்பத்தேர்வுகளில் சேர்த்தாலோ இங்கே தெரிய வரும்.

தேடல் : Search : Enter a HashTag or KeyWord – தேடல் பெட்டியில் நீங்கள் தேட விரும்பும் பொருளைக் கொடுத்து தேடலாம், அல்லது ஒரு ட்விட்டர் பட்டியைக் கொடுத்து தேடலாம். ஒரு பொருள் குறித்து கூகிள்ல் தேடுகையில் அது பல்வேறு வலைத்தளங்களில் இருந்தே தேடித் தரும். அந்த பொருள் குறித்த தனிப்பட்ட மனிதர்களின் கருத்துகள் அறிய ட்விட்டரே சிறந்த வழி! https://twitter.com/#!/search-advanced ட்விட்டரின் மேம்படுத்தப்பட்ட தேடலில் கீச்சு, எழுதியவர், இடம் போன்ற விவரங்கள் கொடுத்து தேடலாம். Words – தேடும் சொல், HashTag – தேடும் பட்டி, Written In – Tamil தமிழ் ( தமிழ் கீச்சுகளை மட்டும் தனியே தேடிக் கொள்ளலாம்.) People – From யாரிடமிருந்து, To யாருக்கு, mentioning யாரைக் குறித்து,அனுப்பபட்டது என்பதை கொடுத்தும் தேடலாம்.

#HashTags – பட்டிகள் – ட்விட்டரில் ஒரு விடயத்தை Categorize செய்வதற்கு பயன்படுகிறது. உதாரணமாக பாடல் ஒன்றை #NowListening என்று தலைப்பிட்டு பகிரலாம். இப்படி தேவைப்படும் இடங்களில் பட்டிகள் இடலாம். ட்விட்டரில் ஒரு பட்டியை சுட்டும் போது அதே பட்டியுடன் பகிரப்பட்ட மற்ற கீச்சுகளும் காட்டப்படும். ட்விட்டரில் அதிகபடியாக கீச்சுகள் ஓடும் போது ஒரு குறிப்பிட்ட கீச்சை அடையாளம் காண இது பயன்படும். தேடுதலை எளிதாக்குகிறது. பலர் ஒரு குறிப்பிட்ட விடயத்தைக் குறித்து விவாதிக்க பொருத்தமான பட்டி ஒன்றை பயன்படுத்தலாம். இதன் மூலம் அந்த விடயம் குறித்து அனைவரின் கருத்துகளையும் மொத்தமாக அறிந்திட இயலும். உதாரணமாக தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து #TNfisherman என்ற பட்டியில் கருத்துகளைப் பகிர்ந்தோம். அதிகம் பேர் கீச்சியதால் அது உலக Trends இல் இடம் பெற்றது.

Trends – ஒரே நேரத்தில் அதிகம் பேர் பகிர்ந்த விடயம் பட்டியலிடப்பட்டிருக்கும். ஒரு விசயத்தைப் பற்றி அதிக கீச்சுகள் பகிர்வதால் Trends இல் வராது. அதிகம் பேர் அதைப்பற்றி கீச்சுவதால் மட்டுமே வரும். இப்போது ட்விட்டர் உலகின் பல நகரங்களில் அதிகம் அலசப்படும் விசயங்களையும் பட்டியலிடுகிறது. அதில் நம் சென்னையும் ஒன்று. தமிழக கீச்சர்கள் அலசும் முக்கிய விடயங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். முகப்பு பக்கத்திலும், தேடலிலும் Trends காட்டப்படும்.

முகப்பு பக்கத்தில் World Trends என்பதன் அருகே Change சொடுக்கி, கொடுக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் India தேர்வு செய்து Chennai நகரைத் தேர்வு செய்யலாம்.

இடப்பக்கம் :

Side Bar : வலது பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளவற்றில், 1. Tweets – ட்விட்டரில் நுழைந்ததும் முதலில் நண்பர்களின் கீச்சுகள் காலக்கோட்டில் காட்டப்படும். 2. Following – https://twitter.com/#!/following நீங்கள் பின்பற்றும் நண்பர்களின் பட்டியல் இங்கே காணலாம். 3.Followers – https://twitter.com/#!/followers உங்களை பின்பற்றும் நண்பர்களின் பட்டியல் இங்கே காணலாம். 4. Favourites – https://twitter.com/#!/favorites நீங்கள் விருப்பத் தேர்வு செய்த கீச்சுகள் இங்கே தொகுப்பாக இருக்கும். 5. Lists – நீங்கள் உருவாக்கிய பட்டியல்கள், நீங்கள் https://twitter.com/#!/karaiyaan/lists Subscribe செய்துள்ள பட்டியல்களும், மற்றும் உங்களை உறுப்பினராக சேர்த்துள்ள பட்டியல்களும் https://twitter.com/#!/karaiyaan/lists/memberships இங்கே காட்டப்படும். பட்டியல்களின் மூலம் ஒருவரைப் பின்பற்றாமலேயே அவரின் கீச்சுகளை வாசிக்க இயலும். பின்னர் விரிவாக காண்போம்.

6. Recent Images – அண்மையில் நீங்கள் ட்விட்டரில் பகிர்ந்த படங்களின் தொகுப்பு இது. இதே போல் ஒவ்வொரு கீச்சரின் முகப்பு பக்கத்திலும் இருக்கும், அவரின் பக்கத்திற்கு சென்று பார்வையிடும் போது SideBar மூலம் அவரின் Tweets, Following, Followers, Favorites, Lists, Images களைப் பார்த்துக் கொள்ளலாம்.

by Swathi   on 09 Mar 2015  0 Comments
Tags: ட்விட்டர்   ஹாஷ் டாக்   Discover   Mentions   HashTags   Connect   Twitter Hash Tag in Tamil  
 தொடர்புடையவை-Related Articles
ட்விட்டர் என்ற ஆலமரம் ட்விட்டர் என்ற ஆலமரம்
தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு
கீச்சுகளை தரவெடுத்தல் அழித்தல் கீச்சுகளை தரவெடுத்தல் அழித்தல்
ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள் ஸ்பாம் DMகளிலிருந்து ட்விட்டர் கணக்கை பாதுகாக்கும் வழிகள்
பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க பல ட்விட்டர் கணக்குகளை நிர்வகிக்க
ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க ட்விட்டர் கணக்கை அழிக்க, மீண்டும் உயிர்பிக்க
புதிய கீச்சர்களுக்கு சில ஆலோசனைகள்! புதிய கீச்சர்களுக்கு சில ஆலோசனைகள்!
உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்? உங்கள் ட்விட்டர் கணக்கு ஏன் முடக்கபடக்கூடும், எப்படி மீட்பீர்கள்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.