LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- அசோகமித்திரன்

இரு இந்திய நாவல்கள்

வங்காளிகள் மட்டுமல்லாமல் வட இந்தியர் எல்லாருமே டகோர் என்றுதான் அழைக்கிறார்கள். தமிழில் அது தாகூர். அது எப்படி இவ்வாறு ஒலி மாற்றம் பெற்றது? மாற்றத்துடன் முடியாமல் அச்சொல்லை வைத்து ஒரு கேலி வாக்கியமும் இருக்கிறது. தாடி வைத்தவரெல்லாம் தாகூர் அல்ல.
டகோர் தாகூர் ஆனது மட்டுமல்ல. தமிழில் அவர் ரவீந்திரநாத். ஆனால், அவருடைய ஆங்கிலக் கையப்பமே ரபீந்திரநாத் என்றுதான் இருக்கிறது. மிகவும் அழகான, நேர்த்தியான கையெழுத்து.
ரவீந்திரநாத் இயல், இசை, நாடகம் எல்லாவற்றையும் தேர்ந்த கலைஞன் போலக் கையாண்டார். கலைஞனுக்குச் சமூகக் கடமைகளும் உண்டு என்ற முறையில் ஒரு மாறுபட்ட கல்வி முறையை அறிமுகப்படுத்தினார். மனிதனுடைய அறிவின் எல்லைகள் அவனுடைய மொழி, நாடோடு கட்டுப்படுத்தப்படக் கூடாது என்றும் செயல்பட்டார். வெகுசன இயக்கங்களில் மதச் சின்னங்கள் நன்மை பயக்காது என்று நம்பினார். சமூக அமைதியோடு ஒட்டிய மாற்றம்தான் மனிதனுக்கு உரியது என்றார். இது அவருடைய அனைத்து வெளிப்பாடுகளிலும் சீராக அமைந்திருந்தது.
ரபீந்திரநாத் சிறுகதைகளுடன் நீண்ட புனைகதைப் படைப்புகளும் எழுதினார். அவருடைய காலத்திலேயே அவருக்கு அபிமான வாசகர்களுடன் கடுமையான விமரிசகர்களும் இருந்தார்கள். அவராக வெற்றிகளை நாடிச் செல்லாவிடினும் அவருக்கு நேர்ந்த சர்வதேசப் புகழ் நியாயப்படுத்தக்கூடியது அல்ல என்று சொல்பவர்களும் இருந்தார்கள். கீதாஞ்சலி மூலப்படைப்பையும் மொழிபெயர்ப்பையும் கேலிசெய்தார்கள். இது அவர் 1941இல் மறைந்த பிறகும் தொடர்ந்தது.
ரபீந்திரநாத் முப்பத்திரண்டு தவணைகளில் கோரா என்ற நாவலை 1908 - 09 ஆண்டுகளில் எழுதுகிறார். அது அவருடைய ஐந்தாவது நாவல். சில திருத்தங்களுடன் அது 1910 ஆண்டளவில் நூல் வடிவில் வெளிவந்தது. அவருடைய படைப்புகளில் (நிபுணர்களையும் சேர்த்து) கோரா நாவல் ரபீந்திரரின் மிகச் சிறந்த படைப்பு என்று அறியப்படுகிறது. இன்று அவர் மறைந்து எழுபதாண்டுகள் ஆகப்போகிறது. இன்றும் கோரா நாவலும் நாவலாசிரியர் ரபீந்திரரின் புகழும் குறையாதிருக்கிறது.
கோரா நாவலின் கதையைச் சுருக்கமாகக் கூறுவ தென்றால் இலட்சியவாதியாகவும் உள்ள தீவிர இந்து மத சனாதனியாக இயங்கும் பரிசுத்தமான இளைஞன், தான் ஓர் அனாதை வெள்ளைக்காரன் என்பதை அறிகிறான். நாவலில் இந்து மதச் சாயல்களோடு பிரம்ம சமாஜம் மற்றும் அதிலிருந்து பிரிந்த பிரம்மோ இயக்கங்களின் ஆன்மீகச் சிந்தனைகளும் இருக்கும்.
நிறையப் பாத்திரங்களும் சம்பவங்களும் தத்துவ விவாதங்களும் கொண்ட கோரா நாவலைக் கதைச் சுருக்கம் கொண்டு நிர்ணயிக்க முடியாது. நாவலை முறையாகப் படிப்பதுதான் சரியாகும்.
கோரா நூலாக வெளியிடப்பட்டபோதே ரபீந்திரரின் பல படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களை மாக்மில்லன் கம்பெனி வெளியிடுவதாக ஒப்பந்தம் செய்திருந்தது. இருபதாண்டுகளுக்கு முன்புவரை இந்த ஒப்பந்தம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. மாக்மில்லன் இங்கிலாந்துக் கம்பெனியாக இருந்தாலும் ஆங்கில மொழி பேசப்படும் வேறு நாடுகளிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது.
அமெரிக்க எழுத்தாளர் மார்கரெட் மிச்சல் எழுதிய கான் வித் தி விண்ட் நாவலை அந்த நாட்டில் மாக்மில்லன் கம்பெனிதான் வெளியிட்டது. இப்போது ரபீந்திரரின் படைப்புகள்போல கான் வித் தி விண்ட் நாவலும் பொதுச் சொத்து.
இதற்கு ஓர் அடிக்குறிப்பு தேவை. மொழிபெயர்ப்பு நூலின் உரிமை மொழிபெயர்ப்பாளரிடம் இருக்கும். இன்று நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ்ப் படைப்புகளை யார் வேண்டுமானாலும் பிரசுரிக்கலாம். ஆனால், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்களின் உரிமை மொழிபெயர்ப்பாளருடைய சந்ததியினரிடம்தான் அவை வெளியானதிலிருந்து அறுபதாண்டுகள் இருக்கும்.
கோரா நாவலை டபிள்யு. டபிள்யு. பியர்சன் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1924இல் வெளியிட்டார். பியர்சன் ரபீந்திரருக்கு நன்கு பரிச்சயமானவர். ரபீந்திரருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டவுடன் பல பாராட்டுகளுடன் மனவருத்தம் அளிக்கக்கூடிய விமரிசனங்களும் வந்தன. இந்த மொழிபெயர்ப்பு விஷயத்தில் வங்காளிகள் இதர இந்திய மொழியினருக்குச் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிப்பதுபோலத் தவறுகளைத் துருவித் துருவிப் பட்டியலிட்டார்கள். ரபீந்திரருக்குப் போதுமே என்று தோன்றியிருக்க வேண்டும். அதனாலேயே அவருக்கு மிகவும் ஆத்மார்த்தமான படைப்பு என்று கருதியதைப் பிற மொழியினரும் பகிர்ந்துகொள்ள வாய்ப்புத் தருவதில் அதிக அக்கறை காட்டவில்லை. உறுதியாக வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், அவருடைய ஒத்துழைப்பு ஒரு பொதுச் சம்மதத்தோடு முடிந்துவிட்டது.
பியர்சன் மொழிபெயர்ப்பில்தான் நான் கோரா நாவலைப் படித்தேன். வங்காளம் அறியாத லட்சக்கணக்கான வாசகர்கள் பியர்சன் மொழிபெயர்ப்பைத்தான் படித்திருந்தார்கள். ரபீந்திரரின் செல்வாக்குக்கு எந்தவிதத்திலும் இந்த மொழிபெயர்ப்பு குந்தகம் விளைவிக்கவில்லை. இந்த மொழிபெயர்ப்புக்குப் பதினேழு மறுபதிப்புகள் வெளிவந்திருக்கின்றன.
இன்று ரபீந்திரரும் இல்லை பியர்சனும் இல்லை. ரபீந்திரரின் படைப்புகளும் பொதுச் சொத்தாகிவிட்டன. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு கோரா நாவலுக்கு ஒரு புதிய ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது. வங்காளியான ஆங்கிலப் பேராசிரியர் சுஜித் முகர்ஜியின் புதிய மொழிபெயர்ப்பை மத்திய சாகித்திய அகாடமி வெளியிட்டது.
சுஜித் மொழிபெயர்ப்புக்கும் பியர்சன் மொழிபெயர்ப்புக்குமிடையே உள்ள வேறுபாடுகள் மூல ஆசிரியரால்கூட ஏற்பட்டிருக்கலாம். கோரா முதலில் பிரபோசி என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அது நூலுருவில் வந்தபோது ஆசிரியரே சில பகுதிகளை எடுத்துவிட்டார். ஆனால், சுமார் 12 ஆண்டுகள் கழித்து அது புதிய பதிப்பாக வெளிவந்தபோது விடுபட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டிருந்தன. இப்போது சுஜித் முகர்ஜி மொழிபெயர்ப்புக்கு இந்தப் புதிய பதிப்புதான் ஆதாரமாக இருந்திருக்கிறது. பியர்சன் முதலில் வெளியான பதிப்பைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அவருடைய மொழிபெயர்ப்பு முடிவடைந்த பிறகுதான் புதிய பதிப்பு வெளியாகியிருக்கிறது. இரண்டிற்கும் 1924 என்று ஆண்டு குறிப்பிடப்பட்டாலும் கோரா போன்ற நாவலை மொழிபெயர்க்கப் பல ஆண்டுகள் முன்னரே பியர்சன் தொடங்கியிருக்க வேண்டும்.
சுஜித் முகர்ஜி மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் பதிப்பில் ஒரு முக்கியப் பகுதி நூலின் இறுதியில் உள்ள மொழிபெயர்ப்பாளர் குறிப்பும் பல பதங்களுக்கு விளக்கம் அளித்திருப்பதுமாகும். நாவலின் களமும் காலமும் கதைமாந்தருடைய இறை நம்பிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்தவை. (காலம், உத்தேசமாக 1880 என வைத்துக்கொள்ளலாம். அப்போது வங்காளத்தில் சகுண உபாசகராக பகவான் ராமகிருஷ்ண பரமஹம் சர் பலருக்குக் கண்கண்ட தெய்வமாக இருந்தார். உருவ வழி பாட்டை விலக்கிய கேசவ் சந்திர சென் அவர்களின் இயக்கமும் படித்த இளைஞரிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அதே நேரத்தில் ஒரு தீவிர சனாதனப் போக்கும் இருந்தது. எடுத்துக்காட்டாக, மகாசுவேதா தேவி அவர்களின் ஒரு படைப்பில் சக்தி வழி பாட்டுத் தீவிர பக்தர் நரபலிக்கும் தயங்குவதில்லை.)
இன்று ரபீந்திரரின் தமிழ் மொழி பெயர்ப்புகளைக்கூட மறு பரிசீலனை செய்வது நல்லது. மொழிபெயர்ப் புக்கு உற்சாகத்துடன் காலம் ஏற்படுத்தும் ஒரு பக்குவப் போக்கும் அவசியம். தமிழில் சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு மொழி பெயர்த்தவர்களுக்குக் கிடைத்த தகவல்களைக் காட்டிலும் இன்று நாம் பயன்படுத்தக் கூடுபவற்றை வைத்து இன்னும் பொருள் பொதிந்ததாக மொழி பெயர்க்கக்கூடும். மொழிபெயர்ப்பு, குழப்பம் இல்லாமல் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அந்த விதத்தில் பியர்சன் மொழிபெயர்த்த கோராவைக் குறைகூற முடியாது. சுஜித் முகர்ஜியின் மொழிபெயர்ப்பில் கலாச்சாரப் பண்புகளுடன் அக்காலத்தில் இறை நம்பிக்கைச் சூழ்நிலையும் நன்கு வெளிப்படுகின்றன.
இந்திய நாவலுக்கு நூறாண்டு முடித்திருக்கும் இந்நாளில் எதை மிகச் சிறந்த நாவலாகக் கூறலாம் என்று ஒரு சிறு வட்டத்தில் விவாதம் நடந்தது. குஷ்வந்த்சிங் சில வாதங்களை முன்வைத்துப் பிரேம் சந்த் எழுதிய கோதான் நாவலைத்தான் முற்றிலும் முழுதுமான சிறந்த இந்திய நாவல் என்றார். அப்போதே கோரா பற்றியும் கூறப்பட்டது. கோதான் நாவலையும் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஓர் ஆங்கிலேயர்தான். கார்டன் ரோடர்மால். ரபீந்திரரின் வாழ்நாளிலே அவருடைய படைப்புகள் பல சர்வதேச மொழிகளில் வெளிவந்தபோது கோதான் பிரேம் சந்த் இறந்து முப்பதாண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலத்தில் வெளிவந்தது. இன்று கோதான் நாவலுக்கு வேறு மொழிபெயர்ப்பும் ஆங்கிலத்தில் இருக்கக்கூடும். நான் ரோடர்மால் மொழிபெயர்த்த கோதான் நாவலைத்தான் படித்திருக்கிறேன். சிறப்பாகவே இருந்தது. கோரா கம்பீரமான படைப்பு. கோதான் நாவலின் பாத்திரங்கள் சிக்கல்கள் உடையவர்கள். ஆனால் கள்ளம் கபடமற்ற தன்மையுடைய எழுத்து. இது ஆங்கில மொழிபெயர்ப்பிலும் தெளிவாகத் தெரியும். இது ஒரு முக்கியக் காரணமாயிருந்திருக்க வேண்டும் குஷ்வந்த் சிங்கின் தேர்வுக்கு.

by Swathi   on 04 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.