LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

இனி யுபிஎஸ்சி தேர்வை அனைத்து பிரிவினரும் கூடுதலாக இரண்டு முறை எழுதலாம் !!

யுபிஎஸ்சி என்று அழைக்கப்படும் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை இந்த ஆண்டு முதல் அனைத்துப் பிரிவினரும் கூடுதலாக இரண்டு முறை எழுதலாம் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இது குறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுளால் செய்தி குறிப்பில், 2014-ம் ஆண்டு முதல் அனைத்துப் பிரிவினரும் 2 முறை கூடுதலாக தேர்வு எழுதுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேவையெனில், அனைத்துப் பிரிவிலும் இத்தேர்வை எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பிலும் தளர்வு செய்யப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வயது வரம்பில் தளர்வு குறித்த குழப்பத்தை தீர்க்க, விரைவில் அறிவிக்கை வெளியிடப்படும் என்று பணியாளர் நலத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 2013-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கைப்படி, யுபிஎஸ்சி தேர்வை அதிகபட்சமாக பொதுப்பிரிவினர் 4 முறையும் (30 வயதுவரை), ஓபிசி பிரிவினர் அதிகபட்சமாக 7 முறையும் (33 வயதுவரை) தேர்வு எழுதலாம். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 35 வயதுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

by Swathi   on 11 Feb 2014  0 Comments
Tags: UPSC Civil Service Exam   UPSC Exam   யுபிஎஸ்சி   யுபிஎஸ்சி தேர்வு   இந்திய குடிமைப் பணித் தேர்வு        
 தொடர்புடையவை-Related Articles
இனி யுபிஎஸ்சி தேர்வை அனைத்து பிரிவினரும் கூடுதலாக இரண்டு முறை எழுதலாம் !! இனி யுபிஎஸ்சி தேர்வை அனைத்து பிரிவினரும் கூடுதலாக இரண்டு முறை எழுதலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.