LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- மொழி வளர்ச்சிக் கட்டுரைகள்

தமிழ் இலக்கியங்களில் இத்தனை நீர்நிலைகளின் வகைகளா?

நம்மிடம் நீர்நிலைகளின் வகைகளை சொல்லச்சொன்னால் கடல், ஆறு, குளம், குட்டை என நமக்கு தெரிந்த சில வகைகளை தான் சொல்வோம். ஆனால், நம் முன்னோர்கள், நீர் நிலைகளை 47 வகைகளாக பிரித்து அவற்றை இலக்கியங்களில் விவரித்துள்ளனர். அவற்றைப் பற்றி இப்போது காண்போமா...

(1). அகழி (Moat)


கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

(2). அருவி (Water Falls)

மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

(3). ஆழிக்கிணறு (Well in Sea-shore)

கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

(4). ஆறு (River)

பெருகி ஓடும் நதி.

(5). இலஞ்சி (Reservoir for drinking and other purposes)

பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

(6). உறை கிணறு (Ring Well)

மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

(7). ஊருணி (Drinking water tank)

மக்கள் பருகும் நீர் நிலை.

(8). ஊற்று (Spring)

பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

(9). ஏரி (Irrigation Tank)

வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

(10). ஓடை (Brook)

அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

(11). கட்டுங்கிணக் கிணறு (Built-in -well)

சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

(12). கடல் (Sea)

சமுத்திரம்.

(13). கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank)

பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

(14). கலிங்கு (Sluice with many Venturis)

ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

(15). கால் (Channel)

நீரோடும் வழி.

(16). கால்வாய் (Suppy channel to a tank)

ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

(17). குட்டம் (Large Pond)

பெருங் குட்டை.

(18). குட்டை (Small Pond)

சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

(19). குண்டம் (Small Pool)

சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

(20). குண்டு (Pool)

குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

(21). குமிழி (Rock cut Well)

நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

(22). குமிழி ஊற்று (Artesian fountain)

அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.

(23). குளம் (Bathing tank)

ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.

(24). கூவம் (Abnormal well)

ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

(25). கூவல் (Hollow)

ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

(26). வாளி (stream)

ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

(27). கேணி (Large Well)

அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.

(28). சிறை (Reservoir)

தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

(29). சுனை (Mountain Pool)

மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

(30). சேங்கை (Tank with Duck Weed)

பாசிக்கொடி மண்டிய குளம்.

(31). தடம் (Beautifully Constructed Bathing Tank)

அழகாக நாற்புறமும் கட்டப்பட்ட குளம்.

(32). தளிக்குளம் (Tank Surrounding a Temple)

கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.

(33). தாங்கல் (Irrigation tank)

இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

(34). திருக்குளம் (Temple tank)

கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.

(35). தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall)

ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

(36). தொடு கிணறு (Dig well)

ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

(37). நடை கேணி (Large well with steps on one side)

இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.

(38). நீராவி (Bigger tank with center Mantapam)

மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

(39). பிள்ளைக்கிணறு (Well in middle of a tank)

குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

(40). பொங்கு கிணறு (Well with bubbling spring)

ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.

(41). பொய்கை(Lake)

தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

(42). மடு (Deep place in a river)

ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

(43). மடை (Small sluice with single venturi)

ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

(44). மதகு (Sluice with many venturis)

பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.

(45). மறு கால் (Surplus water channel)

அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

(46). வலயம் (Round tank)

வட்டமாய் அமைந்த குளம்.

(47).வாய்க்கால் (Small water course)

ஏரி முதலிய நீர் நிலைகள்.

by Swathi   on 23 Nov 2015  0 Comments
Tags: Neer Nilaigal   Water Resources   தமிழ் இலக்கியம்   நீர் நிலைகள்   நீர் நிலைகளின் வகைகள்        
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை !! அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் அங்கீகாரம் பெற்று வரும் பொங்கல் பண்டிகை !!
துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா துபாயில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் சிறப்புடன் நடந்த பொங்கல் விழா
நட்சத்திர வார பலன்கள் (14 – 01 – 2018 முதல் 20 - 01 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (14 – 01 – 2018 முதல் 20 - 01 – 2018 வரை)
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்! கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (கவிதை) வித்யாசாகர்!
முடிந்த கதை - கவிப்புயல் இனியவன் முடிந்த கதை - கவிப்புயல் இனியவன்
உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன் உயிர் தோழன் நீ.... - கவிப்புயல் இனியவன்
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !! இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமனம் !!
சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு சிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.