LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

உச்சிமலை வீடு

அது ஒரு பனிக்காலம். குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்திச்சு. ஒரு நாள் இரவு நேரத்ததில ஒரு பன்னிரண்டு வயது பையன் ஒருத்தன் சாலையில் நடந்துகிட்டிருந்தான். அவன் ஓர் ஏழை. அவன் அணிந்திருந்த ஆடை கிழிஞ்சிருந்தது. குளிர் காற்று ஏசி போல் அவன் ஒடம்பைக் குத்தியது. அவன் கை கால்கள் எல்லாம் வெட வெட வென நடுங்கிச்சு. பற்கள் எல்லாம் கட கட வென தந்தியடிச்சிச்சு. கூடவே கடுமையான பசிவேற...

 

சாலையில் நடந்துட்டிருந்தவனோட கண்ணில பட்டுண்ணு ஒரு வெளிச்சம் தெரிஞ்சுது. உயரமான இடத்திலிருந்து அந்த வெளிச்சம் வந்திட்டிருந்திச்சு. . அவன் அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். உண்மையிலே அது ஒரு மலை. அந்த மலையோட உச்சியில் ஒரு வீடு. அந்த வீட்டுக்குள்ளிருந்துதான் அந்த வெளிச்சம் வந்திட்டிருந்தது.

 

அந்தச் சிறுவன் நடந்து நடந்து மலையின் உச்சியைப் போய்ச்சேந்தான்.. ஆகா இதென்ன அதிசயமாக இருக்கு. வீடு தெறந்தே கெடக்குதேன்ணு நெனச்சிட்டு சந்தோஷமா வீட்டுக்குள்ளே நொழஞ்சான்.

வீட்டிற்குள் நல்ல சூடு. அது அந்த குளிருக்குக் கதகதப்பாக இருந்திச்சு. அவனுடைய குளிர் விலகிப்போச்சு..

 

அவன் அடுத்த அறைக்குள்ள நுழைந்தான். அந்த அறையில் இன்னும் அதிகமாக சூடு இருந்தது. அவனுக்கு உற்சாகமாக இருந்திச்சு. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அங்கே ஒரு மேசை. அந்த மேசையின் மேல் ஒரு பெரிய தட்டு. அந்தத் தட்டில் ஆவி பறக்கிற சாப்பாடு. பலவைகையான உணவு வகைகள் அந்தத் தட்டிலே இருந்திச்சு.

 

நாலு நாளா சாப்பிடாதவன் ஆவி பறக்கற சாப்பாட்டைப் பாத்தா சாப்பிடாம இருப்பானா.

 

அவன் ஆசை ஆசையா வாரி வாரி சாப்பிட்டான் வயிறு முட்டச் சாப்பிட்டான். இப்பத்தான் மலையேறி வந்த களைப்பு அவனுக்குத் தோணிச்சு. அவன் பக்கத்தில் கெடந்த கட்டிலில் ஏறிப் படுத்துக்கிட்டான். அப்படியே தூங்கிப்போய்ட்டான். அடுத்த நாள்... கோழி கூவிச்சு. கீழ்வானம் செவந்திச்சு. எங்கும் வெளிச்சம் பரவிச்சு. அவன் கண் விழிச்சான் கட்டிலுக்கு முன்னால் இருந்த கண்ணாடியைப் பார்த்தான்

"அவனோட தோற்றத்தைப் பாத்து ஐயோ அம்மா''  என்று அலறிட்டான்.

 

அவன் ஆளே மாறிப்போயிருந்தான். தலையில் இரண்டு கொம்புகள் முளைத்திருந்திச்சு. நீளமா ரெண்டு பல்லுக வாயிலிருந்து வெளியே துருத்திட்டிருந்திச்சு..

 

உடம்பெல்ல்லாம் பொசு பொசுண்ணு கருத்த முடி. ''அப்போது வீடே அதிர்ர மாதிரி காலடிச் சத்தம் கேட்டிச்சு. "ஐயோ இது யாரோட வீடு. இப்படி நடந்து வர்றது யாரு" அப்டீண்ணு நெனச்சான்.

வீடே அதிரும்படி நடந்து வந்தவன் ஓர் அரக்கன். ஒரு பனை உயரம் இருந்தான். பெரிய காளை மாட்டின் கொம்பு போல் இரண்டு கொம்புகள் தலையில இருந்திச்சு. கையில் ஒரு பெரிய கம்பு. தங்க வளையங்கள் போடப்பட்ட, பள பளவென மின்னற மூங்கில் கம்பு. அரக்கனோட உடம்பெங்கும் புசுபுசுணணு கருத்த முடி அப்பிக்கிடக்குது. அவன்தான்,  அந்த அரக்கன்தான் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரன்.

அந்த அரக்கன் பையன் படுத்திருந்த அறைக்குள் நுழைஞ்சான்.

 

கட்டிலில் படுத்திருந்த அந்தப் பையன் அரக்கனைப் பார்த்தான். ஒரு பெரிய மாமிச மலையே பக்கத்தில நிக்கறமாதிரி இருந்திச்சு.

 

"என் சாப்பாட்டையும் சாப்பிட்டுட்டு, என் கட்டில் வேற ஏறிப்படுத்துட்டயா? உன்னை என்ன செய்கிறேன் பார்" ணு கர்ஜித்தபடி பையன அடிக்க வந்தான். அந்தப் பையன் சட்டெனக் கட்டிலிலிருந்து துள்ளிக் குதிச்சான். அப்படியும் இப்படியும் ஓடினான். வளைஞ்சு நெளிஞ்சு ஓடினான். பெரிய உடம்பு இருக்கறதால அந்த அரக்கனால அந்தப் பையனப் பிடிக்க முடியல.

 

அரக்கன் கோபத்தால அலறினான். அந்தச் சத்தத்திலே வீடே ஆடிச்சு. சன்னல்களும் கதவுகளும் ஒடைஞ்சு விழுந்திச்சு.. அந்த வீட்டோட ஏதோ ஓர் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த சிண்ணப் பெண்ணொருத்தி தப்பிச்சோம் பிழைச்சோம்ணு வெளியே ஓடி வந்தாள். அவளைப் பார்த்ததும் அரக்கனுக்கு இன்னும் கோபம் அதிகமாச்சு. அவன் அச்சிறுவனை அடிக்க ஓடி வந்தான். சிறுவன் விலகி விலகி ஓட அரக்கன் துரத்த அரக்கனோட கையிலிருந்த தடி கீழே விழுந்திச்சு.

 

"அந்தத் தடியிலதான் அரக்கனின் உயிர் இருக்குது. அந்தத் தடியை எப்படியாவது எடுத்து ஒடிச்சிடு. அரக்கன் செத்திருவான்" அப்படீண்ணு அந்தப் பொண்ணு கத்திச்சு. ஓடிட்டிருந்த பையன் சட்டென திரும்பினான். அரக்கனோட கால்களுக்கு இடையே புகுந்தான். மின்னல் வேகத்தில் தடியை எடுத்தான். பல்லைக் கடிச்சபடி தொடை மேல் வைச்சு அந்தத் தடியை ஒடிச்சான் தங்க வளையம் போட்டு பள பள வென மின்ற அந்தத் தடி சுக்கு நூறாய் ஓடஞ்சு செதறிச்சு.

 

அவ்வளவுதான் அந்த மலையே ஆடற மாதிரி அலறிட்டு அந்த அரக்கன் தரையில் விழுந்து செத்துப்போனான். அந்த வீடு அப்படியும் இப்படியும் ஆடத்தொடங்கிச்சு. வீடு விழுறதுக்குள்ளே அந்தப் பொண்ணோட கையைப் புடுச்சி இழுத்துகிட்டு வெளியே ஓடிவந்தான் அந்தப் பையன். அவங்க ரெண்டு பேரும் வீட்டை விட்டு வெளியே வரவும் வீடு தரைமட்டமாக விழுந்து நொறுங்கவும் சரியா இருந்திச்சு.

 

அப்புறம் கொஞ்ச வருஷங்களுக்கப்புறம் அந்தப் பொண்ணும் பையனும் கல்யாணம் பண்ணிகிட்டு சொகமா வாழ்ந்தாங்க.

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிறு துளி சிறு துளி
பகைவர்கள் செய்த உதவி பகைவர்கள் செய்த உதவி
புத்திசாலி குரங்குகள் புத்திசாலி குரங்குகள்
கலப்படம் கலப்படம்
கரடியாரின் உதவி கரடியாரின் உதவி
தக்காளி, வெங்காயம் குச்சி ஐஸ்… தக்காளி, வெங்காயம் குச்சி ஐஸ்…
யாரும் வாங்காத கூடு யாரும் வாங்காத கூடு
இது எங்கள் உணவு இது எங்கள் உணவு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.