LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

11 நாட்களுக்குள் சர்க்கரை நோயை விரட்டிய லண்டன் நகர வாசி !

உணவு கட்டுப்பாட்டின் மூலம், சர்க்கரை நோயை கட்டுபடுத்த முடியும் என லண்டனை சேர்ந்த, ரிச்சர்டு டவுடி என்பவர் நிரூபித்து காட்டியுள்ளார்.


லண்டன் நகரத்தை சேர்ந்தவர், ரிச்சர்டு டவுடி,  இவர் சில நாட்களுக்கு முன்பு, தனது ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ள, மருத்துவமனை ஒன்றில்  பொது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் சொன்னதால், அதிர்ச்சி அடைந்தார். தன் பரம்பரையிலும், யாருக்கும் இந்நோய் ஏற்பட்டதில்லை என்றும், அதிக இனிப்புகளை உட்கொள்ளும் பழக்கமும் இல்லை என்றும், டாக்டரிடம் ரிச்சர்டு தெரிவித்தார்.அதிகப்படியான கலோரிகள் உடைய உணவுப் பொருட்களை உட்கொண்டதாலேயே, ரிச்சர்டின் ரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து சர்க்கரை நோயை குணப்படுத்துவது தொடர்பாக , ரிச்சர்டு இணையதளத்தில், தீவிர தேடலில்  இறங்கினார். அப்போது, "குறைந்த கலோரிகள் உடைய உணவை உட்கொள்வதின் மூலம், 8 வாரங்களில் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்' என, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் வகுத்த, அட்டவணைப்படி, தினசரி உணவை உட்கொள்ள ரிச்சடு திட்டமிட்டார். அதன் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு 800 கலோரிகளை தரும் உணவை மட்டுமே உட்கொள்ள ரிச்சர்டு திட்டமிட்டார். வழக்கமான உணவுகளுக்கு பதிலாக, 600 கலோரிகளை மட்டுமே உடைய, பழச்சாறுகள், கீரை வகைகள் மற்றும், 200 கலோரிகளை உடைய, பச்சை காய்கறிகளை மட்டுமே சாப்பிட தொடங்கினார். ஒரு நாளைக்கு, மூன்று லிட்டருக்கு மிகாமல் தண்ணீர் குடித்தார். 11 நாட்கள் தொடர்ந்து இந்த உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்ட ரிச்சர்டு, தன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, மீண்டும் நிலைப்படுத்தினார்.  இந்த நிகழ்வு உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  

by Swathi   on 23 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்.. உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்..
தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள் தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்
சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது
சிகாகோவில் சிகாகோவில் "திருவள்ளுவர் தினம்" முதல் முறையாக அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை முன்னிலையில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
தென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழி-கலாச்சார  வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக்  குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை.. தென்னாப்பிரிக்காவிற்குத் தமிழ்மொழி-கலாச்சார வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு உதவியுடன் தமிழ்ப்பல்கலைக்கழகக் குழு சென்று நடத்திய பயிற்சிப்பட்டறை..
வாசிங்டன் வட்டாரத்தமிழ்ச்சங்கத்தின் 2020 புதிய செயற்குழு உறுப்பினர்கள் திருக்குறள் நூலின்மேல் கைவைத்து சங்கத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பணியாற்றுகிறோம் என்று உறுதிமொழி எடுத்தனர். வாசிங்டன் வட்டாரத்தமிழ்ச்சங்கத்தின் 2020 புதிய செயற்குழு உறுப்பினர்கள் திருக்குறள் நூலின்மேல் கைவைத்து சங்கத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பணியாற்றுகிறோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
உலகத் தமிழ்ச் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.இராஜேந்திரன் அவர்களுக்கு வலைத்தமிழ் சார்பாக வாழ்த்துகள்.. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய விருதை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு.இராஜேந்திரன் அவர்களுக்கு வலைத்தமிழ் சார்பாக வாழ்த்துகள்..
தமிழர் திருநாள் கொண்டாட்டம் .. தமிழர் திருநாள் கொண்டாட்டம் ..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.