LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி

உள்ளம் மலர்ந்திடுமே

செல்லக் குழந்தையின்

சின்னச் சிரிப்பினில்

உள்ளம் மலர்ந்திடுமே!

அன்புக் குழந்தையை

அள்ளி அணைப்பது

அன்னை பெறும் சுகமே!

பிஞ்சு விரல்கள்

கன்னம் உரசிட

நெஞ்சம் உருகிடுமே!

பிள்ளை வயிற்றைப்

பாலில் நிரப்பிட

உள்ளம் துடித்திடுமே!

வண்ணத் துணிகளில்

பிள்ளை தவழ்ந்திட

இல்லம் செழித்திடுமே!

புது இன்பம் வந்து

தினம் கொஞ்சித் தழுவிட

பல பந்தம் பிறக்கட்டுமே!

கொஞ்சும் சிணுங்களில்

உள்ளம் குளிர்ந்திட

இல்லம் நிறைந்திடுமே!

கொட்டும் செல்வத்தில்

குலம் தழைத்திட

இன்பம் பொழியட்டுமே!

மெல்ல எழுந்து

தள்ளாடி நடக்கையில்

துன்பம் தொலைந்திடுமே!

மெல்ல இரசித்து

நன்றாய் வளர்ப்பது

அன்னை பெறும் தவமே!

கொட்டும் இன்பம்

சொட்டும் குறையாமல்

இல்லம் சிறக்கட்டுமே!

by Swathi   on 07 Mar 2015  0 Comments
Tags: உள்ளம் மலர்ந்திடுமே   உள்ளம் மலர்ந்திடுமே கவிதை   kaa.Baalabharathi Kavithai   Baalabharathi Kavithai   Baalabharathi Poems   Ullam Malarnthidume   Ullam Malarnthidume Kavithai  
 தொடர்புடையவை-Related Articles
இவைதான் இவைதான்
ஆனால் அவள் ஆனால் அவள்
போனாளே போனாளே
காயம் தரும் காதல் காயம் தரும் காதல்
நாளை நாளை
அவள் அவள்
உனக்குள் வெற்றி உனக்குள் வெற்றி
இதயக் கைதி இதயக் கைதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.