LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF

உளுந்து களி

தேவையானவை : 


1. நெல் அரிசி, சாமை அரிசி – கால் கிலோ


2. உளுத்தம் பருப்பு – கால் கிலோ


3. ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்


4. நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்


5. கருப்பட்டி - 1 கப்


செய்முறை :


1. நெல் அரிசியையும், சாமை அரிசியையும் நன்றாக கழுவி, வாணலியில் கொட்டி சிவக்க வறுக்கவும். அதனுடன் உளுந்தையும் சிவக்க வறுத்து, சேர்த்து மிசியில் மாவாக அரைக்கவும். 


2. கருப்பட்டியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதிக்க விடவும். அதனுடன் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும்.


3. நன்கு கொதித்து வரும்போது அரைத்து வைத்துள்ள மாவை தூவி கட்டி இல்லாமல் கை விடாமல் கிளறவும்.


4. கலவை ஒட்டாமல் வந்ததும் ஏலக்காய் பொடியை தூவி இறக்கவும்.


சுவையான, சத்தான உளுந்து களி ரெடி.

by Swathi   on 06 Aug 2014  7 Comments
Tags: Ulundhu Kali   உளுந்து களி                 
 தொடர்புடையவை-Related Articles
உளுந்து களி உளுந்து களி
கருத்துகள்
26-Dec-2016 17:27:28 கண்ணன் இராமசாமி said : Report Abuse
நல்ல பல பயனுள்ள தகவல்கள் நன்றி
 
20-Oct-2016 03:28:16 மீனாகுமாரி said : Report Abuse
நீங்கள் வெந்தயம் சேர்க்க மறந்து விட்டிர்கள். முக்கியமானது.
 
24-Feb-2016 00:26:25 ர.SOLAIYAMMAL said : Report Abuse
உளுந்து உடலுக்கு நன்மை தரும் அதனுடன் சமை சர்ப்பதால் மிகவும் NALLATHU
 
20-Apr-2015 22:31:33 R . தேவி said : Report Abuse
மிகவும் அருமை நன்றி
 
25-Jan-2015 07:15:49 கே.ச.வேங்கடசேரி said : Report Abuse
பலரிடம் கேட்டும் தெரியாதேன்றனர் . இப்போது அறிந்தேன் . நன்றி .
 
16-Nov-2014 03:39:15 Lazer said : Report Abuse
சமையல் தெரியவில்லை என்றால் இனிமேல் கவலை இல்லை.
 
21-Oct-2014 04:10:22 ரமேஷ் கண்ணன் said : Report Abuse
அனைத்தும் புரிந்தது. அனால் ஒரு கப் என்பது எவளவு கிராம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.