LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- கருமலைத்தமிழாழன்

ஊனமாகி வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன்

அழகுடனே   திகழ்ந்திருந்த    அருமைச்   சிற்றூர்
அறிவியலின்   முன்னேற்றம்  புகுந்த   தாலே
உழவுசெய்த    வயல்களெல்லாம்    மனைக    ளாகி
உயர்ந்துநின்ற   மரங்களெல்லாம்    மொட்டை    யாகி
கிழக்குமேற்கு    திசைகளெல்லாம்    தெரியா   வண்ணம்
கிடுகிடென்று    தொழிற்சாலை    உயர்ந்து   நிற்க
வழக்கமான   அமைதியெல்லாம்   பறந்து   போக
வளர்ந்திட்ட   நகரமாக   மாறிற்    றின்று !

புதுப்பெயரில்   பலத்தெருக்கள்    விண்ணை    முட்ட
புறப்பட்ட   மாடிவீடு    கடைக   ளென்றே
ஒதுங்குதற்கும்    இடமின்றிக்    கட்ட   டங்கள்
ஓரடியும்   நடப்பதற்குப்   பாதை   யின்றி
விதவிதமாய்ப்    பரப்பிவைத்த   சிற்றங்   காடி
விளைந்திருக்கும்   பலகட்சிக்   கொடிக்கம்   பங்கள்
மதவெறியைத்   தூண்டுகின்ற    பாதைக்   கோயில்
மன்றங்கள்   எனநிறைந்தே   மூச்ச   டைக்கும் !

காற்றுவர    வழியில்லை   கழிவு   நீரின்
கால்வாயோ   நடுத்தெருவில் ;   வாக  னங்கள்
சீற்றமுடன்    கக்குகின்ற    புகையின்   மாசு
சிறுநீரால்    நனைந்திருக்கும்   சுவரின்   வாசம்
மாற்றங்கள்   வளர்ச்சியென   மனிதன்   தன்னின்
மனிதத்தை   இழந்ததுபோல்    இயற்கை    தந்த
ஊற்றுகளை   அடைத்தின்று   செயற்கை   ஏற்றே
ஊனமாகி   வீழ்கின்றான்    வளர்ச்சி   யென்றே !

 

- பாவலர் கருமலைத்தமிழாழன்

by Swathi   on 27 Mar 2015  0 Comments
Tags: Unamaki Veelkiraan   ஊனமாகி வீழ்கின்றான்   Karumalai Tamilzhan   பாவலர் கருமலைத்தமிழாழன்   Sutru Suzhal Kavithai   சுற்று சூழல் கவிதை     
 தொடர்புடையவை-Related Articles
நாளைய தமிழும் தமிழரும் - பாவலர் கருமலைத் தமிழாழன் நாளைய தமிழும் தமிழரும் - பாவலர் கருமலைத் தமிழாழன்
ஊனமாகி  வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன் ஊனமாகி வீழ்கின்றான் - பாவலர் கருமலைத்தமிழாழன்
மகளின்  மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் மகளின் மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.