LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

2015-2016 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் - சிறப்பு அம்சங்கள் !!

2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை பாரளமன்றத்தில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் பல முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும் பின்வருமாறு,

குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு உறுதி

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேர மின்சாரம்.

6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்.

இதுவரை 50 லட்சம் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவை தூய்மையாக தேசமாக மாற்ற தூய்மை இந்திய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் 2வது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உள்ளது.

உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை இருக்கும்.

நடப்பு ஆண்டின் இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.

அரசின் அனைத்து திட்டங்களும் வறுமை ஒழிப்பை மையமாகக் கொண்டிருக்கும்.

அனைவருக்கும் மின்சாரம் மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை.

5 சதவிகிதத்திற்கு கீழ் சில்லரை விற்பனை பண வீக்கம் நீடிக்கும்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை ஒரு சதவிகிதத்திற்கு கீழ் குறையும்.

நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பும் இருக்கும்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தொடரும்.

மத்திய அரசின் இலக்குக்கள் 75வது சுதந்திர தினத்திற்குள் எட்டப்படும்.

பொது முதலீட்டை 1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க நடவடிக்கை

ஜன் தன் வங்கி கணக்கு, நிலக்கரி ஏலத்தில் வெளிப்படை தன்மை மற்றும் தூய்மை இந்தியா ஆகிய முக்கிய 3 திட்டங்களில்  மத்திய அரசு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது.

சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது  அரசின் முக்கிய குறிக்கோள்.

அனைத்து கிராமங்களிலும் தொலைத் தொடர்பு வசதி செய்து தரப்படும்.

பொருளாதார வளர்ச்சியை கணக்கிட புதிய நடைமுறை உருவாக்கப்படும்.

உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

3.9 சதவிதத்துக்குள் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயம்.

அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை கொண்டு செல்வது அவசியம்.

*வேளாண் வருமானத்தை பெருக்குவது சவாலாக உள்ளது.

நாட்டின் வளர்ச்சி வட கிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

புதிய விபத்து காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

ஏழ்மையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவ சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்.

அடல் பென்ஷன் திட்டம் உருவாக்கப்படும்.

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும்.

விவசாய விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதும் அவசியம்.

வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

ஏல முறை நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டால் மாநிலங்களுக்கு பல லட்சம் கோடி வருவாய்.

உலகிலேயே சிறப்பான பங்குச்சந்தையில் இந்தியாவுக்கு 2வது இடம்.

சிறு விவசாயிகளுக்கு எளிதில் கடன் கிடைக்க நிதித்தொகுப்பு ஏற்படுத்தப்படும்.

அனைத்து மக்களையும் முறையான நிதிசேவை நடைமுறைக்குள் கொண்டு வர திட்டம்.

மத்திய அரசின் வரி வருவாயில் 62 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.

மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக  ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அலகு அடுத்தாண்டு செயல்படுத்தப்படும்.

கூடங்குளம் அணுமின் நிலைய 2வது உலையில் நடப்பு நிதியாண்டில் உற்பத்தி தொடங்கப்படும்.

நிதி சேவைகள் தொடர்பான குறைகளை தீர்க்க நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.

தேசிய உள்கட்டமைப்பு நிதிக்கு வரும் நிதியாண்டில் 20 ஆயிரம் கோடி நிதி.

மின் பற்றாக்குறையை போக்க நாடுமுழுவதும் 5 மிகப்பெரும் மின் திட்டங்கள் தொடங்கப்படும்.

நூறுநாள் வேலைவாப்பு திட்டத்திற்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

சிறுபான்மை பிரிவு இளைஞர் நலனுக்காக நயிமன்சில் என்ற புதிய திட்டம்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிமுறைகள் மாற்ற அமைக்கப்படும்.

கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.

அரசின் பொருள் கொள்முதலில் முறைகேடுகளை தடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்.

150 நாடுகளுக்கு இந்தியா வந்தவுடன் விசா பெறும் சலுகை விரிவுப்படுத்தப்படும்.

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை.

விசா நடைமுறைகள் எளிதானதால் சுற்றுலாத்துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது.

வருகையின்போது விசா வழங்கும் திட்டம் 150 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

சுற்றுலாத் தலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளில் மேம்பாடு.

2022க்குள் 1.75 லட்சம் மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு.

மகளிர் பாதுகாப்புக்கான நிர்பயா நிதிக்கு மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க நேரடி பண பரிமாற்ற முறை படிப்படியாக குறைக்கப்படும்.

அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை அரசு வெளியிடும்.

வங்கிகளில் தங்கத்தை டெபாசிட்  செய்து நிதி திரட்டும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் அளிக்கப்படும்.

முதியோருக்கு பென்சன் வழங்கவும் திட்டம். இதற்கான பிரீமியத்தில் 50 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும்.

குறுந்தொழில் முனைவோருக்கு ரூ20 ஆயிரம் கோடி முதலீட்டில் முந்த்ரா வங்கிகள் அமைக்கப்படும்

தபால் நிலையங்களை வங்கிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கறுப்பு பணத்தை பதுக்கினால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

வெளிநாட்டில் இருந்து பணத்தை மறைத்தால் 7 ஆண்டு சிறை விதிக்கப்படும்.

ரூ. 1 லட்சத்திற்கு மேல் பொருள் வாங்கினால் பான் கார்டு அவசியம்.

2.50 லட்சம் கிராங்களுக்கு இணையதள வசதி

பி.எப்., திட்டத்தில் மாற்றம்.


கார்ப்பரேட் வரி 25% ஆக குறைப்பு.

ராணுவத்திற்கு ரூ.2.47 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

கர்நாடகாவில் ஐஐடி அமைக்கப்படும்.

யோகா, அறக்கட்டளையின் பிரிவின் கீழ் கொண்டுவரப்படும். யோகா வகுப்புகளுக்கு சேவை வரி நீக்கப்படும்.

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.50,000 வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் காப்பீட்டிற்கான வரி விலக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

சேவை வரி 13.4 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படும்.


ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் வருவாய் உள்ள பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். வருமான வரி விலக்கு ரூ.2.50லட்சமாக தொடரும் மாற்றமில்லை.

 

கல்வி, சுகாதாரம், வீடு மற்றும் வளர்ச்சி திட்டங்கள், பெண்கள் நலன் ஆகியவற்றிற்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்படும்.

 

தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை கொண்டு வரப்படும்.

 

குட்கா மற்றும் சிகரெட் உள்ளிட் புகையிலை பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும்.

by Swathi   on 28 Feb 2015  1 Comments
Tags: Union Budget 2015   பொது பட்ஜெட்   மத்திய பொது பட்ஜெட்              
 தொடர்புடையவை-Related Articles
2015-2016 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் - சிறப்பு அம்சங்கள் !! 2015-2016 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் - சிறப்பு அம்சங்கள் !!
கருத்துகள்
25-Feb-2016 03:25:06 பூமி நாதன் said : Report Abuse
ராணுவத்திற்கு ஒதுகோம் நிதி எங்கு செல்கிறது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.