LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

மத்திய இடைக்கால பட்ஜெட் முக்கிய அம்சங்களும் !! அறிவிப்புகளும் !!

மத்திய அரசின் 2014 - 2015 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தெலங்கானா பிரச்னை குறித்த அமளிக்கிடையே இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், உலகப் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.


நாட்டின் நிதிப்பற்றாக்குறை 4.6 சதவீதத்துக்குள்ளாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். கடந்த மாதம் வரை 6 லட்சத்து 60ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான 296 முதலீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் சிதம்பரம் தெரிவித்தார். அரிசிக்கு சேவை வரி விதிக்கப்படாது என்றும் சேவை வரி பட்டியலில் இருந்து அரிசிக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். 


சிறிய வகை கார்கள், இருசக்கர வாகனங்களுக்கான உற்பத்தி வரியை 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைப்பதாகவும் சிதம்பரம் அறிவித்தார். 2009 மார்ச் 31ஆம் தேதிக்கு முந்தைய கல்விக்கடனில் 2013 இறுதிவரை செலுத்தப்படாமலுள்ள வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக அவர் கூறினார். 


மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,


* வருமான வரி விதிப்பில் மாற்றமில்லை. இப்போதுள்ள நிலையே தொடரும்.


* அரிசிக்கு விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து செய்யப்படுகிறது.


* நெல்லுக்கான சேவை வரி முற்றிலும் நீக்கம்.


* மந்தமாக உள்ள வாகனத்துறைக்கு உற்பத்தி வரி குறைக்கப்படுகிறது.


* தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு புதிய வரிவதிப்புகள் ஏதும் இல்லை.


* சிறிய ரக கார்கள், பைக் உற்பத்தி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக குறைப்பு.


* நடுத்தர ரக கார்களுக்கான உற்பத்தி வரி 24 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக குறைப்பு.


* விளையாட்டுத்துறை வாகனங்கள் மீதான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 24 சதவிகிதமாக குறைப்பு. 

 

* மொபைல் போன் சாதனங்களுக்கான உற்பத்தி வரி குறைப்பு.உற்பத்தி வரி 12 சதவிகித்தில் இருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.


* மருத்துவ சேவைகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.


* ப்ரிட்ஜ், ஏ.சி. இயந்திரங்களுக்கான வரி குறைப்பு.


* எல்ஐசி புதிதாக 1,252 கிளைகளை திறந்துள்ளது. 


* நடப்பு நிதியாண்டில் மொத்த திட்ட செலவினம் 5,55,322 கோடியாக இருக்கும்.


* வேளாண்துறைக்கு அடுத்த நிதியாண்டில் வங்கிகள் ரூ.8 லட்சம் கோடி கடன் அளிக்கும்.


* காப்பீட்டு சீர்திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த இயலவில்லை.


* ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டுகால சராசரி வளர்ச்சி 6.2 சதவீதம்.


* தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் (1999-2004) வளர்ச்சி விகிதம் 5.9 சதவீதம். 


* வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி உதவியாக ரூ.1,200 கோடி வழங்கப்படும்.

 

* 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட கல்விக் கடனுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும். இதன் மூலம் 9 லட்சம் மாணவர்கள் பயனடைவர். 


* பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்காக மகிளா வங்கி திறக்கப்பட்டுள்ளது.


* வரும் நிதியாண்டில் 8 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்க இலக்கு.


* நடப்பாண்டில் இலக்கை விஞ்சி 7 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன் அளிக்கப்பட்டுள்ளது.


* 500 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட அதிவேக ஈனுலை கல்பாக்கத்தில் தயாராகும்.


* நேரடி மானியத் திட்டத்தில் உள்ள குறைபாடு நீக்கப்பட்டு மீண்டும் நடைமுறைக்கு வரும்.


* நேரடி பண மானிய திட்டம் தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


* புதிதாக 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.


* இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


* சிறு குறு தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் தரப்பட்டுள்ளது.


* நாட்டில் 4 மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலைகள் தொடங்கப்படும்.


* ஆதார் எண் மூலம் மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்ர் வாங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம். குறைபாடுகள் சரி செய்யப்பட்ட பின்னர் ஆதார் அட்டை திட்டத்தை முற்றிலும் செயல்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.


* நாடு முழுவதும் இதுவரை 57 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.


* உணவு, எரிபொருள் மானியங்களுக்கு 2,46,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


* பெண் குழந்தைகள், மகளிரின் பாதுகாப்பிற்கு அடுத்த நிதியாண்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு.


* செயற்கைக்கோள்கள் அனுப்புவதில் சுயசார்பு நிலையை அடைந்துள்ளோம். 


* ரயில்வேக்கான புதிய நிதி ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.


* நாட்டில் 7 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்.


* 10 ஆண்டுகளுக்கு முன் சுகாதாரத்துறைக்கு 7,248 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


* கடந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு 36,400 கோடி நிதி ஒதுக்கீடு.


* மக்களின் ஆரோக்கியத்தை காக்க நவீன மருத்துவமனைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.


* அடுத்த நிதியாண்டில் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள்களை ஏவ இந்தியா திட்டம். 


* செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தி்யாவும் இணைந்துள்ளது.


* மின்சார உற்பத்தி, கிராமப்புற சாலைகள் கட்டமைப்பு பிரமிக்கத்தக்க வகையில் உயர்வு.


* அரசு, செபி, ரிசர்வ் வங்கி இணைந்து ரூபாய் மதிப்பு சரிவை தடுத்துள்ளது. 


* உணவு பணவீக்கம் குறைந்திருந்தாலும் அது தொடர்ந்து கவலைக்குரியதாக உள்ளது.


* ஜனவரி மாதம் வரை 296 திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 


* விவசாயத்துறையின் வளர்ச்சி பெருமைப்படும் வகையில் அதிகரித்துள்ளது.


* இந்திய ரூபாயின் மதிப்பு கடும் நெருக்கடிக்கு உள்ளானது.


* உணவு தானிய உற்பத்தி இதுவரை இல்லாத சாதனையாக 26 கோடி டன்னை எட்ட உள்ளது.


* இந்த நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 6.3 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.


* சென்னை- பெங்களூருவை இணைக்கும் சரக்கு போக்குவரத்துக்கான ஆய்வுப்பணி நடக்கிறது.


* சர்வதேச பொருளாதார மந்த நிலையிலும், ஏற்றுமதியில் சாதனை புரிந்துள்ளோம்.


* எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கு பெரிய அளவில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.


* சில ஆண்டுகளாக சவாலாக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது.


* இந்தியாவின் வளர்ச்சியை தரவரிசை நிறுவனங்கள் குறைத்து மதிப்பிட வாய்ப்பில்லை. 


* பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசு, ரிசர்வ் வங்கி மூலம் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.


* நாட்டின் நிதிப்பற்றாக்குறை 4.6 சதவிகித்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


* சர்வதேச மந்தநிலையால் இந்தியா பாதிக்கப்படவில்லை 


* மற்ற வளரும் நாடுகளை விட இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.


* வளர்ந்து வரும் நாடுகளில் இருப்பதுபோன்ற பொருளாதார சூழலே இந்தியாவில் உள்ளது.


* அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பாவின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.


* பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்திற்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு; 


* மனித வள மேம்பாடு அமைச்சகத்திற்கு ரூ.67,398 கோடி ஒதுக்கீடு; 


* திட்டமிடாத செலவுகளுக்காக 5 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு; 


* குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு ரூ.15,260 கோடி; 


* சமூக நீதி மற்றும் அதிகாரத்துறைக்கு ரூ.6730 கோடி. 

by Swathi   on 17 Feb 2014  0 Comments
Tags: மத்திய பட்ஜெட்   மத்திய பட்ஜெட் 2014 - 2015   மத்திய பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்   மத்திய பட்ஜெட் அம்சங்கள்   Union Budget 2014 - 2015   Union Budget     
 தொடர்புடையவை-Related Articles
மத்திய இடைக்கால பட்ஜெட் முக்கிய அம்சங்களும் !! அறிவிப்புகளும் !! மத்திய இடைக்கால பட்ஜெட் முக்கிய அம்சங்களும் !! அறிவிப்புகளும் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.