LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

ஒற்றுமை

     ஒரு வயல் வரப்பில் மூன்று கொக்குகள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தன. எங்கு சென்றாலும், ஒற்றுமையுடன் சென்றன. இரை தேடச் சென்றாலும் கிடைத்த இரையை கூடி பகிர்ந்து உணவு உண்டு வாழ்ந்து வந்தன.இந்த ஒற்றுமை மற்ற விலங்கினத்துக்கும், பறவைகளுக்கும் பொறாமையாக கூட இருந்தது.


     நரி ஒன்று, அந்த மூன்று கொக்குகளையும் பிரித்தே தீருவேன் என்று சபதமிட்டபடி களம் இறங்கியது.ஒரு நாள் மூன்று கொக்குகளும் வயல் வரப்பில் இரை தேடிக்கொண்டிருந்தன. நரி தன் சூழ்ச்சியை பயன்படுத்த திட்டமிட்டது.


     அதன்படி முதலில் மூன்று கொக்கு களிடமும் நட்பை ஏற்படுத்திக் கொண்டது. சிறிது நாட்கள் சென்ற பிறகு, தனிமையில் இருந்த ஒரு கொக்கிடம் சென்றது. “கொக்கு நண்பரே! இவ்வளவு அழகாக இருக்கும் நீங்கள், அவலட்சணத்தின் ஒட்டு மொத்த உருவமாக திகழும் உங்கள் நண்பர் கொக்குகளுடன் எப்படி நட்பு பாராட்ட முடிகிறது? உங்கள் அழகுக்கும் அந்தஸ்துக்கும் இது ஏற்ற காரியமா?” கேட்டது.


     இதனை கேட்ட கொக்குவிற்கு நரி சொன்னது உண்மையோ என்ற சந்தேகம் ஏற்பட, “என்ன செய்வது! எல்லாம் என் நேரம்” என்றது. வந்த காரியம் முடிந்த திருப்தியில் உடனே நரி அவ்விடம் விட்டு சென்றது. நரி இப்போது இரண்டாவது கொக்குவிடம் சென்றது. “கொக்கு நண்பரே எப்படி உள்ளீர்?” வினாவியது நரி.


     “நலம் நரி நண்பரே”, என்று பதிலுக்கு கூறியது கொக்கு. இரண்டாவது கொக்குவிடம் இப்போது தன் சூழ்ச்சியை தொடங்கியது நரி. “கொக்கு நண்பரே! நீர் எவ்வளவு அறிவு உடையவர். எந்த குளத்தில் எவ்வளவு மீன்கள் உள்ளன என்பதை உம் அறிவால் கண்டுபிடித்து விடக் கூடியவர் நீர். அவ்வளவு அறிவு உடைய நீர் ஒன்றும் தெரியாத உங்கள் நண்பர் கொக்குகளுடன் நட்பு கொள்வதா?” என்று சூழ்ச்சியை கிளப்பிவிட்டது. நரி கூறிய வார்த்தைகளால், இரண்டாவது கொக்குவிற்குள் சிந்தனை எட்டிப்பார்க்க நரி தான் வந்த வேலை முடிந்த திருப்தியில் கிளம்பிப் போனது.


     இதோடு நில்லாமல் மூன்றாவது கொக்குவிடம் சென்றது நரி. வழியில் மூன்றாவது கொக்கிடம், “கொக்கு நண்பரே! நீங்கள் எவ்வளவு வீரம் படைத்தவர். இரை பிடிப்பதிலும்! பறப்பதிலும், எவ்வளவு வீரம் படைத்தவர். இவ்வளவு வீரம் உடைய ஒன்றுக்கும் உதவாத உமது மற்ற 2 நண்பர் கொக்குகளுடன் சுற்றித் திரிந்ததில் உமது வீரமே உமக்கு மறந்திருக்குமே” என்று கொக்கிடம் கேட்டது.


     நரியின் சூழ்ச்சியால் அந்த மூன்று கொக்கு களுக்குள் நாளடைவில் பகைமையும், யார் பெரியவன் என்ற சண்டையும் ஏற்பட்டது. ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டன. இதனால் ஒற்றுமையுடன் இருந்த மூன்று கொக்குகள் தனித்தனியே பிரிந்தன.


     நடந்ததை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த கிளி ஒன்று, மூன்று கொக்குகளையும் சந்தித்து நரியின் சதித் திட்டத்தை சொல்லி முடித்தது. `அடப்பாவி!’ எங்கள் ஒற்றுமைக்கு உலை வைத்து விட்டானே! நல்ல நட்பை இழந்தோமே! என்று வருந்தின.


     “முன்பின் தெரியாதவர் வந்து திடீரென தேவையில்லாமல் புகழ்ந்தால் அதற்கு மயங்கி விடக்கூடாது. அப்படி மயங்கும் பலவீனம் ஒருவருக்குள் இருந்தால் அவரை மற்றவர்கள் விரைவில் தங்கள் வசப்படுத்திவிட முடியும். உங்கள் மூவர் விஷயத்தில் அதுதான் நடந்தது. இனியாவது இப்படி திடீர் புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள்” என்று அறிவுறுத்தியது கிளி அதற்கு பின் மூன்று கொக்குகளும் மறுபடியும் நட்புடன் இருந்து வந்தன.

by parthi   on 09 Mar 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தந்தையை திருத்தும் மகன் தந்தையை திருத்தும் மகன்
புதிய நண்பர்கள் புதிய நண்பர்கள்
தப்பி வந்த முதலை தப்பி வந்த முதலை
ஒரு நீண்ட பயணம் ஒரு நீண்ட பயணம்
நாணயஸ்தன் நாணயஸ்தன்
வகுப்புக்கு தாமதம் வகுப்புக்கு தாமதம்
பரிசும் ஊக்கமும் பரிசும் ஊக்கமும்
முட்டாள் வேலைக்காரன்! முட்டாள் வேலைக்காரன்!
கருத்துகள்
08-May-2014 11:34:01 நஜ்மா அஹ்மத் said : Report Abuse
நல்ல கருத்து உள்ள கதை. தினமும் என் மகள் ஒரு கதை கேட்டுத்தான் தூங்குகின்றாள். என் மகளுக்குச் சொல்ல எனக்கு நல்ல கதைகள் கிடைக்கிறது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.