LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

உன்னோட வாழ முடியாது

கால் கடுக்க காடு மேடுகளில் அலைந்து திரியறாங்க. இடுப்பொடிய வயல்களில் வேலை செய்கிறார்கள். நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த கடும் வெயிலில் காயுரார்கள். கம்பளியால் உடலை மறைத்து பனிக்காலத்திலும் குளிர்காலத்திலும் உழைக்கிறார்கள்.  சொட்டச் சொட்ட நனைந்தபடி மழைக்காலத்திலும் பாடுபடுகிறார்கள். இதனால் அவங்க என்னை நினைக்கிறதேயில்லை. 

நான் படைத்த பிள்ளைகள்... என் தவக் கண்மணிகள் இந்தத் உலகத்தில் இப்படி அல்லல்படுறாங்களே... காரணம் என்ன?

 

வானத்தைப் படைத்த, பூமியைப் படைத்த கடவுள் யோசிச்சார். நாள்கணக்கில் யோசிச்சார். அதன் காரணத்தையும் கண்டுபிடிச்சார்.

 

ஒரு சாண் வயிறுதான் காரணம். பசிதான் எல்லா துன்பத்திற்கும் காரணம். என்ன செய்தாலும் அணையாமல் எரிஞ்சிட்டேயிருக்கும் பசித்தீதான் மனிதர்களோட துன்பத்திற்குக் காரணம்...

 

அவர்களை இந்தப் பசித்துன்பத்திலிந்ருது காப்பாற்றனும். என் பிள்ளைகள் மகிழ்ச்சியை உணரணும். நாளெல்லாம் என்னை வணங்கணும்.என்று கடவுள்

நினைத்தார்..

 

" இந்நொடியிருந்து மனிதர்களுக்குப் பசியில்லாமல் போகக் கடவது... ''

 

இறைவன் வரம் அருளினார்.

 

மக்கள் முதலில் ஆச்சரியப்பட்டாங்க.... பிறகு மகிழ்ச்சியாயிட்டாங்க.. துள்ளிக் குதிச்சாங்க. ஒருத்தரையொருத்தர் கட்டித் தழுவிகிட்டாங்க.. தரையில் கிடந்து உருண்டாங்க புரண்டாங்க.

 

எப்படியெல்லாம் மகிழ்ச்சியைத் தெரிவிக்க முடியுமோ அப்படியெல்லாம் தெரிவிச்சாங்க.

 

கடவுள் பார்த்தாரு. அவரோட மனசு குளிர்ந்து போனது. . தம் பிள்ளைகளோட மகிழ்ச்சியே தம் மகிழ்ச்சிண்ணு அவர் நினைச்சார் .

 

ஒரு நாள் ஆயிற்று, இரண்டு ,மூன்று நாள் ஆயிற்று .

 

கடவுள் பார்த்தார் . அவர் நினைத்தது நடக்க வில்லை . . அவர் முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது. முதல் நாள்லில் அவருக்கிருந்து மகிழ்ச்சி இருந்த இடம் தெரியாம மறந்தது.

 

அப்படி அவர் என்னதான் பார்த்தாருண்ணு நினைக்கிறீங்களா?

 

எல்லாரும் ஒரு வேலையும் செய்யாமல் திண்ணையில் உக்கார்ந்து அரட்டை அடிச்சுகிட்டிருந்தாங்க.. பெண்களும் வேலை செய்றதை நிறுத்திட்டாங்க. யாரும் யாருடைய பேச்சையும் கேட்க வில்லை. பசியெடுதாத்தானே சோறு வைக்கணும் ,குழம்பு வைக்கணும் ,பாத்திரம் கழுவணும் இப்ப அதொண்ணும் வேண்டாமே.

 

அதனால் என்னானது? தெருவெல்லாம் குப்பை கூளங்கள் நிறைந்தது. ஊரெங்கும் துர் நாற்றம் வீசியது. அலுவலகங்கள் அடைத்து கிடந்தது . குழந்தைகளும் பள்ளிக்கூடம் போக வில்லை. பெற்றோரும் அவங்களை போகச் சொல்ல வில்லை.

 

இதையெல்லாம் பார்த்தும் கூட கடவுளுக்கு அவ்வளவு கோபம் வரவில்லை. "யாரோட துன்பங்களைக் கண்டு மனம் நொந்து வரமளித்தேனோ... யாரைப்

பசியென்னும் துன்பத்தீயிருந்து மீட்டேனோ... அவங்க.... இந்த மனுஷங்க... நான் படைத்த பிள்ளைகள்... என்னை சுத்தமாக மறந்தே போயிட்டாங்களே. ஒரு நொடிகூட என்னை நினைத்து பார்க்க யாருக்கும் மனசு வர வில்லையே... '' கடவுளின் விழியோரங்களின் நீர் கசிந்தது.

 

கோயில்களில் பூசையில்லை. வழிபாடில்லை. இறைவனைத் தொழும் வேலையையே மக்கள் மறந்துட்டாங்க.

 

ம்ஹூம் இது சரி இல்லை. இதை இப்படியே விடக்கூடாது.

 

மக்களோட இந்த நடவடிக்கை உலகத்தோட இயக்கத்திற்கே எதிரானது.

 

பார்த்தார் கடவுள்.

 

" இந்நொடியிருந்து மனிதர்களுக்கு மூன்று வேளையும் பசிக்கட்டும்ணு சபிச்சார். மக்களுக்குப் பசியெடுக்கத் தொடங்கியது.. வெறும் பசியல்ல... கோரப் பசி.. அகோரப்பசி... அசுரப் பசி....

 

மட்டுமல்ல... மூன்று வேளையும் பசித்தது. உணவுதான் தாராளமாக இருக்குது. ஒரு வாரத்துக்கான உணவை மொத்தமாக இப்போது சாப்பிட்டுடலாம் அப்படீண்ணு நினைத்தால் நடக்குமா? நடக்கவே நடக்காது... சரி இன்றைக்கு சமைக்க வில்லை. அல்லது சமைத்த உணவு பிடிக்க வில்லை. ஒரு நாளைக்கு சாப்பிடாமல் இருக்கலாம்ணு நினைத்தால் இந்த பாழும் வயிறு கேட்குதா? கேட்கவே கேட்காது... இந்த வயிற்றையும் சுமந்துகொண்டு வாழ்கிறது எப்படி? மக்கள் அழுது புரண்டாங்க. கண்ணீர் வடிச்சாங்க.

 

ம்ஹூம் கடவுள் கண்டுக்கவேயில்லை.

 

வயிற்றின் இந்தக் குணத்தைக் கவனிச்சாங்க நம்ம தமிழ் மூதாட்டி ஒளவையார். அவர் அன்னைக்கு எழுதிய பாடலைத் தான் பாருங்களேன்.

 

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

 

இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய்

 

ஒரு நாளும் என்னோ அறியா இடும்பா கூர் - என்வயிறே

 

உன்னோடு வாழ்தல் அரிது.  

by Swathi   on 11 Mar 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.