LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சிறுவர் விளையாட்டு - kids Game Print Friendly and PDF
- அத்திலி புத்திலி தொடர்

அத்திலி புத்திலி -1. உரியடி அறிவோம்...

பொதுவாக திருவிழாக்களில் இன்றியமையாத இடத்தை எப்பவும் பிடித்திருக்கும் விளையாட்டு, உரியடி. வாங்க... இந்த விளையாட்டைப் பற்றிப் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்...

தமிழர்களின் சமுதாயக் கட்டமைப்பு, உலகில் வேறு எங்குமே காண முடியாத அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். சமூக கட்டமைப்பிற்குள் தமிழர்கள் வைத்துள்ள எண்ணற்ற செயல்பாடுகளில் ஒன்றுதான் திருவிழா. அற்புதமான ஒன்றுகூடல், அதன் வாயிலாக ஒவ்வொருவரும்  உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதும் இன்றுவரை தொடரும் தமிழர் வழக்கம். அதிலும் திருவிழாக்களில்  விளையாட்டுகள் இல்லாமல் இருக்காது.

ஆண்டு முழுவதும் உழைத்து, பொருள் ஈட்டிய மனிதனுக்கு ஆண்டுக்கு  ஒரு நாள் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தரும் திருவிழாக்களில்  உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்  பலகாரத்திற்கு அடுத்தபடியாக விளையாட்டு என்பதே பேசு பொருளாக அமைந்திருக்கும். என்னென்ன விளையாட்டுப் போட்டி வைக்கலாம் என்று நீண்ட விவாதம் நடத்தும் அளவிற்கு விளையாட்டுகள் அனைவரின் மனதிலும் இடம்பெற்ற ஒன்றாகும்.

உரியடி விளையாட்டு எனவும் பானை உடைக்குற போட்டி என வழக்கு மொழியிலும் அழைக்கப்படும் இந்த விளையாட்டு திருவிழாக்களில் மட்டுமே விளையாடிய காலம் மாறி பிறந்த நாள் கொண்டாட்டம், நண்பர்கள் ஒன்றுகூடல் என விளையாடுவதை  நாம் பார்க்க முடிகிறது.

விளையாட்டுக்கு தேவையான பொருட்கள் :

1) மண் பானை.

2) பானையின் உள்ளே வைப்பதற்கு வண்ண காகிதம் (அ) பூக்கள் (அ) மிட்டாய் (அ) பணம் .  (பொதுவாக திருவிழாக்களில் கட்டப்படும்  பானையின்  உள்ளே மஞ்சள் தண்ணீர் ஊற்றி இருப்பார்கள், பணமும் வைப்பதுண்டு. )

3) சுமார் 10-15 அடி உயரமான இரண்டு மரமும் அதற்கு இடையே  பானை கட்டுவதற்காக கொச்சக்கயிறும்.

4) ஐந்து அடி நீளமுள்ள குச்சி (அ) மூங்கில்.

5) கண் கட்டுவதற்கு துணி.


விளையாடும் முறை :

இரண்டு கம்புக்கும் நடுவில் கயிறால் பானையை கட்ட வேண்டும்.விளையாட்டிகு தயாரானவர்கள் ஒருவர் பின் ஒருவராக தொங்கவிடப்பட்டுள்ள பானையில் இருந்து மூன்றடி தள்ளி நின்றிருக்க வேண்டும்.முதலில் விளையாட தயாராக இருப்பவரது கண்கள் துணியைக் கொண்டு  கட்டப்படும். பின்பு மூன்று முறை அவரைச்சுற்றி பானைக்கு எந்த பக்கமாக இருக்கிறோம் என்று அவரை குழம்பச் செய்ய வேண்டும். அப்படியே நேராக சென்று ஒரே போடு பானை மேல் போட்டால் அவர் வென்றவர் ஆவார். ஆனால் சுற்றி நின்றிருக்கும் கூட்டத்தில் இருப்பவர்கள் நேரா போ இல்ல இல்ல வலது பக்கம் போ ..இல்ல இல்ல இடது பக்கம் போ என்று குழப்பி விடுவார்கள்.மேலும் கையில் வைத்திருக்கும் குச்சியை பானையை நோக்கி அடிக்க உயர்த்துவதற்கு ஒரே ஒரு முறை தான்  வாய்ப்பு  வழங்கப்படும். ஆகவே இந்த விளையாட்டு பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் பானை உடைத்தல் என்பது கடினமான ஒன்று தான். அவருக்கான வாய்ப்பு முடிந்தால் அடுத்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இறுதியாக பானையை உடைத்தவர் வென்றவராவார். பானைக்குள் இருக்கும் பரிசுகள் அவருக்கு சொந்தமாகும்.

காளையர்கள் மட்டுமே விளையாடிய இந்த விளையாட்டு சிறு பிள்ளைகளை வெகுவாக ஈர்த்த காரத்தினால் அளவான உயரத்தில் பானையை கட்டி ,அளவான குச்சியை பிள்ளைகளின் கைகளில் கொடுத்து அடிக்கச் சொல்லி விளையாடுவது பரவலாக பல இடங்களில் காண முடிகிறது.

தன் இலக்கை திசை திருப்பக்கூடிய சூழல் சுற்றி இருந்தாலும் இலக்கின் மேல் கவனமும் அதற்காக  மனதை ஒருமுகப்படுத்துவதும் இந்த விளையாட்டின் சிறப்பம்சமாகும்.

உரியடி விளையாட்டு தமிழகத்தில் மட்டும் தான் விளையாடப்படுகிறதா என்றால் இல்லை !

இதே போன்ற விளையாட்டு பல நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில்  விளையாடுகிறார்கள்.

ஃபிலிப்பைன் நாட்டில் (philippine) 'ஹம்பஸ் பலயோக் ' ( Hampas Palayok )என்ற பெயரில் இதே விளையாட்டு விளையாடுகிறார்கள்.அப்படியே உரியடியைப் போலவே இந்த விளையாட்டு அமைந்திருக்கும்.

இதே போல் ஜெர்மனியில் Jopf schlagen என்ற பெயரில்  விளையாடப்படும் விளையாட்டு உரியடி போன்ற விளையாட்டே ஆகும் ஆனால் சிறு மாற்றத்தோடு விளையாடுகிறார்கள். மழைக்காலத்தில் வீட்டிற்கு உள்ளே குழந்தைகள்  விளையாடும் வண்ணம் இந்த விளையாட்டை அமைத்திருக்கிறார்கள்.மெட்டல் பானையை(metal pot )வீட்டின் உள்ளே விளையாடும் அறைக்குள் ஒளித்து வைத்துவிடுவார்கள். அதன் அடியில் மிட்டாயகள் கொட்டப்பட்டிருக்கும். கண்கள் கட்டப்பட்ட குழந்தையின் கையில் நீளமான துச்சி அல்லது மர கரண்டி கொடுக்கப்படும்.தவழ்ந்து கொண்டே குச்சியை நீட்டி பானையை தேட வேண்டும். பானையை தொட்டுவிட்டாலே விளையாட்டு நிறைவுபெறும். மிட்டாய்கள் அத்தனையும் அந்த குழந்தைக்கு கொடுக்கப்படும்.இப்படியாக ஒருவர் பின் ஒருவராக இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள்.

இதே போல் ஸ்பானிஷ் நாட்டிலும் மெக்சிகோவிலும் பினாட்டா (pinata ) என்ற பெயரில் உரியடி போன்ற விளையாட்டு விளையாடுகிறார்கள்.

ஜப்பான் நாட்டில் Suikawari (ஸ்யுகாவரி ) என்னும் பெயரில் விளையாடும் விளையாட்டும் ஜெர்மனியில் விளையாடும் jopf schlagen விளையாட்டைப்போல் தரையில் உடைக்கும் விளையாட்டாகும். கோடைக்காலத்தில் விளையாடப்படும் இந்த விளையாட்டு பெரும்பாலும் கடற்கரையிலும் விழாக்களிலும் ஒன்றுகூடலிலும்  விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டின் சிறப்பென்பது பானைக்கு பதிலாக தர்பூசணி பழம் வைத்து விளையாடுகிறார்கள்.

கண்கள் கட்டப்பட்ட நிலையில் தரையில் வைக்கப்பட்டிருக்கும் தர்பூசணியை குச்சியால் தொட்டு இரண்டாக உடைக்க வேண்டும். பின்பு  அனைவரும் பழத்தை பகிர்ந்து உண்கிறார்கள்.

இப்படியாக நமது பாரம்பரிய மரபு விளையாட்டான உரியடி விளையாட்டைப் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் இன்றளவும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். காலமுறைப்படிப் பார்த்தால் இவற்றிற்கெல்லாம் மூத்த குடியாகிய நம்மின் உரியடியே வயது மூத்த விளையாட்டு.

இது போன்ற தமிழ் மரபு விளையாட்டுக்களைப் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

அடுத்த வாரம் சந்திப்போம்...


நன்றி.

பிரீத்தாநிலா கணேஷ்

by Swathi   on 04 Apr 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
தமிழோடு விளையாடு தமிழோடு விளையாடு
அத்திலி புத்திலி - அறிமுகம் அத்திலி புத்திலி - அறிமுகம்
அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் .. அத்திலி புத்திலி - புதிய சிறுவர் விளையாட்டுத் தொடர் ..
மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) .... மாவளியோ மாவளி (கார்த்திகைச் சுளுந்து) ....
பூசணிக்காய் இருக்கா? பூசணிக்காய் இருக்கா?
மீன்சட்டி மீன்சட்டி
வதந்தி வதந்தி
கருத்துகள்
24-Apr-2019 12:15:20 Shobhana said : Report Abuse
உறியடி என்பதுதான் சரி. தயவு செய்து திருத்தவும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.