LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus 
  முதல் பக்கம்    சமையல்    காரம் Print Friendly and PDF

உருளைக்கிழங்கு தோசை

தேவையானவை :

1. உருளைக்கிழங்கு - 2

2. பச்சை மிளகாய் - 2

3. கொத்தமல்லி - சிறிது

4. மைதா - 2 டேபிள் ஸ்பூன்

5. எண்ணெய் - தேவையான அளவு

6. உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவ வேண்டும். பிறகு அதனை தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும்.

2. ஒரு பாத்திரத்தை எடுத்து, உருளைக்கிழங்கு துருவல், மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு போல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

3. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவ வேண்டும். பின் கல் சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைப் போல் ஊற்றி, எண்ணெய் சேர்த்து, மிதமான தீயில் வைத்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால் சுவையான, சூப்பரான உருளைக்கிழங்கு தோசை ரெடி!!!

4. இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

by Swathi   on 05 Jan 2016  0 Comments
Tags: Urulai Kizhangu   Urulai Kizhangu Dosai   Potato Dosa   Potato Recipes   உருளைக்கிழங்கு   உருளைக்கிழங்கு தோசை     
 தொடர்புடையவை-Related Articles
உருளைக்கிழங்கு சாதம் உருளைக்கிழங்கு சாதம்
உருளைக்கிழங்கு தோசை உருளைக்கிழங்கு தோசை
உருளைக்கிழங்கின் உன்னதமான பயன்கள் !! உருளைக்கிழங்கின் உன்னதமான பயன்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.