|
|||||
உருளை பாயாசம் |
|||||
தேவையானவை : உருளை கிழங்கு - கால் கிலோ சர்க்கரை - 200கிராம் மில்க்மெயிட் - 4டேபிள்ஸ்பூன் முந்திரி - 10 நெய் - 4டீஸ்பூன் பால் - 1லிட்டர் ஏலப்பொடி - 1 பொடித்தது திராட்சை - 10 செய்முறை: 1.உருளை கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கேரட் சீவியல் சீவிக்கொள்ளவும் . 2.ஒரு வானலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி உருளை சீவலை பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ள வேண்டும். 3.காய்ச்சிய பாலை சர்க்கரை சேர்த்து விட்டு வதக்கி கொண்டிருக்கும் உருளை சீவலுடன் சேர்க்கவேண்டும் . 4பாலும், உருளை சீவலும் சேர்ந்து வரும் வரை விடாமல் கிளற வேண்டும். 5.பின்பு சர்க்கரை, மில்க் மெயிட் சேர்க்க வேண்டும். மீதி நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலத்தூள் சேர்த்து சிறு பவுல்களில் ஊற்றி பறிமாற வேண்டும். |
|||||
by rani on 19 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|