LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்

அன்னைக்கு ஒண்ணத்தவிர எல்லாம் வழக்கம்போல நடந்திச்சு. சேவக்கோழி கூவிச்சு, காக்க கத்திச்சு. சூரியன் கெழக்கு ஊதிச்சுது. பறவை எல்லாம் எற தேடப் போச்சு.

மெய்யப்பன் கண்ணு முழிச்சான். பெரிசா கொட்டாவி விட்டான். கண்களைதக் தொடக்கிறதுக்காக கையைத் தூக்கினான். அப்பத்தான் அவனுக்கு விஷயம் புரிஞ்சுது.

அவனோட ரெண்டு கையிலும் இருக்கிறத வெரலுக அசையறதேயில்லை. கையை ஆட்டிப் பார்த்தான் சொடக்குப் போடலாம்ணு வெரலுக வளச்சுப் பார்த்தான் ம்ஹூம் அசையவேயில்லை.

மெய்யப்பனோட மனதிலே கவல வந்து ஒட்டிக்கிச்சு. இனி நான் என்ன பண்ணுவேன் எப்படி வேலை செய்வேன். எப்படி சாப்பிடுவேன்ண்ணு புலம்பத் தொடங்கினான். அவனுக்கு அழுகையே வந்திச்சு. கடவுளே நான் என்ன செய்வேன். எனக்கு ஏன் இப்படியாச்சு அப்படீண்ணு அழத்தொடங்கினான்.

பெரியவங்க யாருகிட்டயாவது கேட்கலாமா/ இல்லே வைத்தியர் கிட்ட போறதா? இல்லே கோயிலுக்குப் போய் வேண்டிக்கிறதா? அப்படீண்ணு யோசிச்சிட்டிருந்தப்போ..."நான் தான் பெரியவன் எனக்கு முன்னாலே நீங்க எல்லாம்தூசு அப்படீண்ணு யாரோ பேசறச் சத்தம் கேட்டது.

யாரது  இப்படிப் பேசறதுண்ணு காதுகளை கூர்மையா வச்சிகிட்டான் மெய்யப்பன். அப்பத்தான் தெரிஞ்சுது. பேசறது வேறுயாருமில்லே. அவனோட வெரலுதாங்கிறது.

நான்தான் பெரியவன். நான் இல்லாட்டி உங்களால ஒரு வேலையும் செய்ய முடியாது ஒரு பொருளை எடுக்கவோ தூக்கவோ முடியாது. வெற்றியைக் காட்டணும்னாலும் நான் வேணும். நான்தான் பெரியவன் அப்படீண்ணு பெருவிரல் வீம்பா பேசுச்சு.

அதக்கேட்ட ஆள்காட்டி வெரலு. ரொம்பத்தான் பீத்திக்காதே. யாரையாவது மெரட்டும்ணா நான் வேணும். யாரையாவது சுட்டிக்காட்டணும்ணா நான் வேணும் நான் தான் பெரியவன் அப்படீண்ணு ஆள்காட்டி வெரலு சொல்லுச்சு.

ரெண்டு பேரும் கொஞ்சம் சும்மா இருக்கீங்களா. ஒரு கையிலே பெரியவன் நான் தான். இது கொழந்தைக்குக்கூடத் தெரியும். எனக்கு முன்னாலே நீங்க எல்லாம் ஜூஜூபி அப்படீண்ணு தம்பட்டம் அச்சுது நடுவெரலு.

கொஞ்சம் நான் பேசறதே கேட்கறீங்களா. இந்த உலகத்திலேயே ரொம்ப முக்கியமானது உறவுதான். கல்யாணத்தினாலதான் புது உறவுகள் உண்டாகுது. கல்யாணமாச்சுங்கறதுக்கு அடயாளமா மோதிரம் போடுவாங்கண்ணு தெரியுமில்ல. அத எனக்குக் தான் போடுவாங்க. அப்படின்னு கொஞ்சும்       குரல்ல   அழகாகச் சொல்லிச்சு மோதிரவெரலு.

அடுத்தது சுண்டு வெரலு பேசணும். ஆனா அது பேசத் தொடங்குறதுக்கு முன்னாடியே மத்த நான்கு விரல்களும் எளக்காரமாச் சிரிக்கத் தொடங்கிச்சுக. இவன் பொடிப்பையன். பேரெ பாரேன் சுண்டு வெரலு. சுண்டைக்காயும் சின்னது. சுண்டுவெரலும் சின்னது. அவனப் பாக்கவே பரிதாபமா இருக்கு அப்படீண்ணு மத்த நான்கு வெரலுகளும் சேந்திகிட்டு சிரிக்க ஆரம்பிச்சுதுக.

ஆனா சுண்டு வெரலு அதைப் பத்தியெல்லாம் கவலையே படல. அது மெதுவா ஓரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லுச்சு அடங்கிப் போச்சுக. அப்படி அந்தச் சுண்டு வெரலு என்ன பேசிச்சுண்ணு தெரியுமா?

சாமி கும்பிடும்போது நான்தான் சாமிக்குப் பக்கத்திலெ ரொம்ப நெருக்கமா இருக்கறவன்ணு சொல்லிச்சு. உருவு கண்டு எள்ளாமை வேண்டும். அதாவது ஒருவரோட தோற்றத்தைப் பாத்து கேலி செய்யக்கூடாதுண்ணு பெரியவங்க சொல்லறது எவ்வளவு சரியாக இருக்கு.

by Swathi   on 30 Mar 2015  0 Comments
Tags: Moral Short Stories   உருவு கண்டு எள்ளாமை வேண்டும்                 
 தொடர்புடையவை-Related Articles
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.