LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

சீனாவிற்கு அணுசக்தி தொழில்நுட்பம் வழங்குவதை தடுத்து நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை!

சீனாவிற்கு அணுசக்தித்தொழில் நுட்பம் வழங்குவதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க துவங்கி இருக்கிறது. 

அமெரிக்காவின் தொழில் நுட்ப அறிவை சட்ட விரோதமான முறையில் சீனா திருடி வருவதாக குற்றம் சாட்டிய  அமெரிக்கா, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. 

பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது  கூடுதல் வரியை விதித்ததால், சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்த நிலை அடைந்திருப்பதாக சர்வதேச நிதியம் கவலை தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக சீனாவிற்கு வழங்கப்படும் அணுசக்தி தொழில்நுட்பத்தை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதனை அமெரிக்காவின் எரிசக்தித்துறை அமைச்சர் உறுதிப்படுத்தி இருக்கிறார். அமெரிக்காவிடம் இருந்து பெற்ற அணுசக்தி தொழில் நுட்பத்தின் மூலம் தென் சீன கடற்பகுதியில் செயற்கைத் தீவுகளை உருவாக்கி அங்கு அணுசக்தி நிலையங்களை உருவாக்கி வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.

இதனைத் தடுக்கும் வகையில் அந்த நாட்டிற்கு  அணுசக்தி தொழில்நுட்பம் வழங்குவதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் தங்கள் நாட்டில் உள்ள தொழிற்துறைகள் பாதிக்கப்பட்டாலும் அதைப்பற்றி கவலைபடப் போவதில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

by Mani Bharathi   on 13 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.