LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

தமிழ் குழந்தைகளே தமிழை மறந்து வரும் இந்த சூழலில் அமெரிக்க குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரும் பனை நிலம் தமிழ்ச் சங்கம் !!

தமிழகத்தில் தமிழ் குழந்தைகளே தாய் மொழியான தமிழை மறந்து வரும் இன்றைய சூழ்நிலையில், தமிழ் மொழியை அமெரிக்க குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு உன்னத முயற்சியில் அமெரிக்காவின் சார்ல்ஸ்டன் பனை நிலம் தமிழ்ச் சங்கத்தினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

 

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் உட்பட அனைத்து நாட்டினருக்கும் தாய் மொழியும், ஆங்கிலமும் தெரிந்திருக்கும். ஆனால் அமெரிக்கர்கள் பெரும்பாலானோருக்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். அதனால் தான் அமெரிக்கர்களை ஒற்றை மொழியினர் என பரவலாக அழைக்கிறார்கள். 

 

இந்த நிலைமையை மாற்ற, சமீப காலமாக அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இரட்டை மொழி என்ற அடிப்படையில் ஸ்பானிஷ் மொழியும் கற்றுத் தரப்படுகிறது. இது' தவிர தனிப்பட்ட முறையில் கற்று வரும் குழந்தைகளுக்கு சீன, ஃப்ரெஞ்சு மொழி உட்பட வேறு மொழிகளுக்கும், பள்ளியில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் மொழிக்கு இப்படிப்பட்ட மதிப்பெண்கள் பெறுவதற்கு, தமிழ்ப் பள்ளிகளும், அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகமும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

 

இதன் விளைவாக, சமீபத்தில், ஆக்லே ஆல் பள்ளி மற்றும் பியூஸ்ட் அகாடமி மாணவ, மாணவியர்களுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் பண்பாடு குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. பனை நிலம் தமிழ்ச் சங்கத்தின் ஹரி நாராயணன் இந்த பாடங்களை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் 250 அமெரிக்க மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். திருவள்ளுவர், திருக்குறள், தஞ்சை பெரியகோவில் மற்றும் இட்லி, தோசை உட்பட தமிழர்களின் பாரம்பரியத்தை பற்றிய விவரங்களை, சில மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொள்ளவும் செய்தார்கள். அத்தனை மாணவ மாணவியர்களுக்கு மத்தியில் ஹரி நாராயணன், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்து, வகுப்பெடுத்தார். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க குழந்தைகளை தமிழ்ப் பள்ளிக்கு அழைத்து தமிழ் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடப் போவதாக பனை நிலம் தமிழ்ச் சங்கத் தலைவர் சந்தோஷ் மணி தெரிவித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டு சில மாணவர்களை தமிழ்ப் பள்ளியில் சேர்த்துள்ளார்கள். தொடர்ந்து இதை நடைமுறைப் படுத்துவதற்கான திட்டங்களை பனை நிலம் தமிழ்ச் சங்கத்தினர் உருவாக்கி வருகிறார்கள்.  

 

தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் அமெரிக்க தமிழ் சங்கங்களுக்கு வலைத்தமிழ் ஆசிரியர்குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.....

by Swathi   on 01 Feb 2014  0 Comments
Tags: பனை நிலம் தமிழ் சங்கம்   அமெரிக்காவில் தமிழ்   தமிழ் கற்கும் அமெரிக்கர்கள்   தமிழ் சங்கம்   பனை நிலம்   Panainilam Tamil Sangam   Tamil Sangam  
 தொடர்புடையவை-Related Articles
உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !! உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !!
டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015 டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015
சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா.... சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா....
தமிழ் குழந்தைகளே தமிழை மறந்து வரும் இந்த சூழலில் அமெரிக்க குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரும் பனை நிலம் தமிழ்ச் சங்கம் !! தமிழ் குழந்தைகளே தமிழை மறந்து வரும் இந்த சூழலில் அமெரிக்க குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரும் பனை நிலம் தமிழ்ச் சங்கம் !!
நியூ ஹெவன் மாநகரில் சிறப்பாக நடைபெற்ற கனெக்டிகட் தமிழ் மையம் துவக்க விழா !! நியூ ஹெவன் மாநகரில் சிறப்பாக நடைபெற்ற கனெக்டிகட் தமிழ் மையம் துவக்க விழா !!
வாசிங்டனில் புறநானூறு வாசிங்டனில் புறநானூறு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.