LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்கக் கரோலினா தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் பேச்சு எல்லோருக்கும் கட்டாயம் இலவசக் கல்வி தரவேண்டும்.

சென்னை கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகரில் 11-05-2014 ஞாயிறு மாலை 2 மணி முதல் 6 மணி வரை தமிழ் எழுச்சிப் பேரவை, எண்ணம் அறக்கட்டளை எழுத்தேணி கல்விதொண்டு அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் கூட்டம் முனைவர் இறையரசன் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் மறத்தமிழ் வேந்தன் வரவேற்றார். தேனிசை செல்லப்பாவின் பேரன் கரிகாலன் தமிழிசைப் பாடல்களைப் பாடினார். புதுவை திராவிடப் பேரவைத் தலைவர் நந்திவர்மன் உலக மொழிகளில் திருக்குறள் இதுவரை மொழிபெயர்க்கப் பெற்றுள்ள நூல்கள் பற்றியும் ஈழத்தமிழினப் படுகொலை பற்றியும் எஞ்சியுள்ள மக்களைக் காப்பதுபற்றியும் மற்ற மாநிலத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் அவரவர் மொழியில் எடுத்துக் கூற வேண்டும் என்றார். கவிக்குயில் ஆசிரியர் ஆனைவாரி ஆனந்தனார் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 % இடஒதுக்கீடு செய்துள்ளதைப் பாராட்டினார்; மற்ற 75% மாணவர்களுக்குக் கூறப்படும் பாடத்தை அவர்கள் கேட்கிறார்களே தவிர சீருடை, புத்தகம், போக்குவரத்து ஆகிய அனைத்தும் ஏழை மாணவர்களுடையதே; எனவே அப்பள்ளிகளுக்கு மானியம் அளிக்கத் தேவையில்லை என்றார்.அமெரிக்கக் கரோலினா தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் சுந்தர செயபாலன் எழுத்தேணி அறக்கட்டளையின் சார்பில் ஏழை மாணவர்களின் கல்வித்தொகை வேண்டல் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு பேசுகையில், அமெரிக்காவில் 18 வயதுவரை மாணவர்களுக்கு இலவசக் கல்வியும் மதிய உணவும் வழங்கப் பெறுகின்றன; ஆனால் தமிழ் நாட்டில் 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி என்ற சட்டம் இருக்கும்போது தனியார் பள்ளிகள் பல ஆயிரக் கணக்கான ரூபாய் கட்டணம் பெறுகின்றன; எல்லோருக்கும் கட்டாயம் இலவசக் கல்வி தரவேண்டும்; மதுவால் மக்கள் பொருளாதாரமும் பண்பாடும் அழிகின்றன; மதுவிலக்கைக் கொண்டுவந்தால் அரசுக்கு 23 ஆயிரம் கோடி இழப்பு என்கின்றனர்; இலவசமாக டி.வி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி என வழங்குவதை நிறுத்தி இந்த இழப்பைச் சரிசெய்யலாம் என்றார். கல்வி உதவிதொகை பெற விரும்பும் மாணவர்கள் “எழுத்தேணி அறக்கட்டளை, புதுப் புல்லுக் காரத் தெரு, தஞ்சாவூர்” என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்; “ezuththenitrust@gmail.com” என்ற மின்னஞ்சலுக்கும் விண்ணப்பிக்கலாம் என்று அறக்கட்டளைச் செயலாளர் முனைவர் இறையரசன் கூறினார்.கலந்து கொண்டோர்க்கு திருமூலர் தவ மைய நிறுவனர் தனசேகரன் வர்மக் கலையில் ஓர் புள்ளியைக் கற்றுத்தந்தார். வர்மக் கலையை முழுதும் கற்றுக் கொள்ள விரும்புவோர் வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள வகுப்பில் கலந்துகொள்ளலாம் என்று அவர் கூறினார். கவிஞர் வாலறிவன், தமிழாசிரியர் பொன்னுசாமி ஆகியோரும் உரையாற்றினர். மகளிரும் மாணவர்களும் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

by Swathi   on 12 May 2014  0 Comments
Tags: Carolina Tamil Sangam   Tamil Sangam   இலவசக் கல்வி   Free Education   கரோலினா தமிழ்ச் சங்கம்        
 தொடர்புடையவை-Related Articles
உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !! உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !!
வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !! வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!
சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா.... சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா....
அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் இணையதள முகவரிகள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் இணையதள முகவரிகள்
அமெரிக்கக் கரோலினா தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் பேச்சு எல்லோருக்கும் கட்டாயம் இலவசக் கல்வி தரவேண்டும். அமெரிக்கக் கரோலினா தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் பேச்சு எல்லோருக்கும் கட்டாயம் இலவசக் கல்வி தரவேண்டும்.
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய 2014-ம் ஆண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய 2014-ம் ஆண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம்
தமிழ் குழந்தைகளே தமிழை மறந்து வரும் இந்த சூழலில் அமெரிக்க குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரும் பனை நிலம் தமிழ்ச் சங்கம் !! தமிழ் குழந்தைகளே தமிழை மறந்து வரும் இந்த சூழலில் அமெரிக்க குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரும் பனை நிலம் தமிழ்ச் சங்கம் !!
இன்றைய மாறிவரும் சூழலில் தமிழ்ச் சங்கங்களின் அதிகரிக்கும் தேவைகள்..... இன்றைய மாறிவரும் சூழலில் தமிழ்ச் சங்கங்களின் அதிகரிக்கும் தேவைகள்.....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.