LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    இயற்கை விவசாயம் Print Friendly and PDF

ஆரோக்கியமான தானியங்களில் அமுது படைக்கும் உழவன் உணவகம் !!

மதுரையில் உள்ள சோழவந்தான் காமராஜர் வைகை ஆற்று பாலம் ரோட்டில் உழவன் உணவகம் என்ற இயற்கை நமக்கு தந்த தானியங்கள் மூலம் சுகாதாரமான முறையில், வாய்க்கு ருசியாக, மணக்கும் வகையில் உடலுகேற்ற முறையில் உணவுகளை தயாரித்து வினியோக்கிறார் கூலி விவசாயியான சேது.


விவசாயப் பணி முடிந்த ஓய்வு நேரத்தில் உடலுக்கு ஆரோக்கியமான உணவு வழங்க முடிவு செய்தார். மதுரை முன்னாள் ஆட்சியர் சகாயத்தின் உதவியை நாடினார். அவர், தொழில் நடத்த இடம் ஒன்றை கொடுத்தார். அதில் சேதுவின் வாழ்க்கை பயணம் தொடர்ந்தது. தனக்கு உதவியாக போதுமணி, பிச்சையம்மாள் ஆகியோரை வேலைக்கு அமர்த்தினார். மூவரும் சேர்ந்து தலா ரூ.5 ஆயிரம் முதலீட்டில் "உழவன் உணவகம்" துவங்கினர்.


சேது கூறுகையில்" நோயற்ற சமுதாயத்தை உருவாக்க தரமான, சுகாதாரமான உணவு கிடைக்க ஆலோசித்தேன். தற்போது உணவு பழக்கத்தில் ஏற்படும் மாறுதல்களால் சர்க்கரை நோய், வயிற்று போக்கு, உடல் பருமன், வாய்ப்புண், கண் நோய், தோல் நோய் போன்றவை ஏற்படுகின்றன. உணவே மருந்து எனும் சொல்லுக்கு ஏற்ப நாம் உட் கொள்ளும் உணவிலேயே நோய்களை தீர்க்கும் அருமருந்து உள்ளது.


உடலுக்கு ஏற்ற உணவான கேப்பைக்களி, சோளக்கூழ், கம்பங்கூல், சுக்குமல்லி காபி இவற்றின் விலை ரூ.5. மாலையில் ரூ.10 விலையில் முளைகட்டிய தட்டாம்பயிறு, காணப்பயிறு, சோளப்பயிறு, பாசிப்பயிறு, முண்டு முருங்கை ரொட்டி, கேப்பைரொட்டி, சோளப்புட்டு, ரொட்டி உணவு பதார்த்தங்கள் விற்கப்படுகிறது.


நீங்கள் மதுரைக்கு சென்றால் மறக்ககாமல் உழவன் உணவகத்திற்கு சென்று வாருங்களேன்......


உழவன் உணவகத்தை தொடர்பு கொள்ள : 93601 74156

by Swathi   on 05 Jun 2014  1 Comments
Tags: Uzhavan Unavagam   உழவன் உணவகம்                 
 தொடர்புடையவை-Related Articles
ஆரோக்கியமான தானியங்களில் அமுது படைக்கும் உழவன் உணவகம் !! ஆரோக்கியமான தானியங்களில் அமுது படைக்கும் உழவன் உணவகம் !!
கருத்துகள்
03-Dec-2015 03:20:39 மு .ராஜேந்திரன் said : Report Abuse
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.