LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில...

கடந்த ஜூலை 2ம் தேதி வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற்ற தமிழ் விழாவில் முன்னாள் குடியரசு தலைவர் மேதகு. அப்துல்கலாம் அவர்களின் ஆலோசகர் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில..

நான் விருதுநகர் மாவட்டம் தோணுகால் கிராமத்தில் பிறந்து ,விருதுநகரில் தமிழ்ப்பள்ளியில்படித்து வளர்ந்தவன் நான்.

எனக்கு ஷேஸ்பியரையும் தெரியாது, பைரன்யும் தெரியாது, கோல்ட் ரிச் பற்றி நான் அறிந்ததும் இல்லை.

நான் பார்த்தது ஒரு சாதாரண கிராமத்தில் டெண்டு கொட்டரையில் எம் ஜி ஆர் படம்.

அந்த எம் ஜி ஆர் படத்தில் நான் கற்றறிந்த முதல் வரி.
 
"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"
".
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய்வருத்தக் கூலி தரும்."

"ஒன்றே குலம் என்று படுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்"

இந்த வரிகள் தான் சிறு வயதில் என்னை கவர்ந்த வரிகள்.

அந்த வரிகள் தான் என் வாழ்க்கையை வடிவமைத்த வரிகள்.

தமிழன் என்ற நான் யார் என்று எனக்கு உணர்த்திய வரிகள்

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"

அன்பும் என்னும் ஆறுருடாமை

"தீதும் நன்றும் பிறர்தர வாரா"

"அகநக நட்பது நட்பு முகநக நட்பது நட்பன்று"

"உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்" ‍

"நன்றி மறப்பது நன்றன்று"

"பருவத்தை பயிர் செய்"

"மானம் உயிரினும் உயர்வு"

இதுதான் தமிழனாகிய நான் யார் என்று எனக்கு உணர்த்தியது. இதுதான் என்னை உணர செய்தது.
ஒரு தனிமனிதனின் சமுகத்தின் அடிப்படை, குடும்பமே சமுகத்தின் அடிப்படை அழகு.

நான் யார் என்று எனக்கு உணர்த்திய இந்த தமிழ். .தமிழராகிய நாம் யார் என்று இன்றும் எனக்கு உணர்த்தியது.

பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்

ஈதல் இசை பட வாழ்தல்

யாதும் ஊரே யாவரும் கேளீர்

விருந்தளிக்கும் திசையிலோ நாம்

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

உணவே மருந்து.

இதுதான் தமிழராகிய நாம் யார் என்று உலகுக்கு வெளிக்காட்டிய தமிழ் இலக்கிய நூல், பாட நூல் அத்தனையும் என்னை யார் என்று உணரச்செய்தது இந்த தமிழ் நூல்.

என்னுடைய 10 வது வயதில் தினத்தந்தி செய்தித்தாள் பார்த்தேன்.

அந்த செய்தி தாளில் SLV3 ராக்கெட் விண்ணில் ஏவினார் அப்துல்கலாம் என்று இருந்தது. அன்று நினைத்தேன் நானும் அவரைப்போல் ஒரு விஞ்ஞானி ஆகவேண்டும் என்று நினைத்தேன்.

ஒரு தடவையாவது அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் இறைவன் 20 வருடகாலங்கள் அவருடன் பயணிக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தார்.

அந்த வாய்ப்பில் பல்வேறு நிகழ்வுகள் அதில் ஒரு சில சம்பவங்கள்.

எப்படி இந்த தமிழகத்தில் உலகளாவிய சிந்தனையும், செயலையும் கொடுத்த வாய்ப்புகளை நேரடியாக இருந்து காணக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

நீங்கள் எல்லாம் சந்திராயன்1 பார்த்திருப்பீர்கள். சந்திராயன்1 ஏவப்பட்டு நிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் அறிவித்த செயற்கை கோள் சந்திராயன்1
அதனுடைய Review meeting நிலவில் தண்ணீர் இருப்பதை முதலில் அறிவிப்பதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பு இஸ்ரோ சேர்மன் மாதவன் நாயர், இஸ்ரோ விஞ்ஞானிகள், Dr அப்துல்கலாம், நான் மற்றும் நாசா விஞ்ஞானிகள் கலந்து கொண்டோம்,
அந்த Review meeting தான் H2O நிலவில் இருப்பதை கண்டறிந்தனர்.
,
அந்த Review meeting முடிவில் நாசா மூத்த விஞ்ஞானி ஒருவர் எழுந்து சொன்னார், டாக்டர் கலாம். அமெரிக்கா இரண்டு முறை தனியாக முயன்றது நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிவதற்கு, முடியவில்லை.

சைனா ஆறு முறை முயன்றது முடியவில்லை.
ஜப்பான் இரண்டு முறை முயன்றது முடியவில்லை.
ரஸ்யா மூன்று முறை முயன்றது முடியவில்லை.
ஆனால் என்றைக்கு அமெரிக்கா இந்தியாவுடன் சேர்ந்ததோ அன்றைக்கே முதல் முயற்சியில் வெற்றி. என்று சொன்னார்.

எனக்கு இப்பொழுதும் புல்லரிக்கிறது அதைநினைத்தால்.

அதற்கு வித்திட்ட முதல் தமிழன், ஒரு இந்தியன் டாக்டர் A.P.J அப்துல்கலாம். அந்த சந்திராயனையும் வடிவமைத்ததவர் ஒரு தமிழர் மயில் சாமி அண்ணாதுரை அவரும் ஒரு தமிழர் மிகப்பெரிய இந்தியன்.

by Swathi   on 07 Jul 2017  0 Comments
Tags: V.பொன்ராஜ்   வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை   Kalam Scientific Advisor   V.Ponraj Speech   பொன்ராஜ் வெள்ளைச்சாமி   Ponraj Speech   FeTNA 2017 Convention  
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில... வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவை தமிழ் விழாவில் திரு V.பொன்ராஜ் அவர்கள் ஆற்றிய உரையில் சில...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.