LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா

கடந்த சனிக்கிழமை(20-Nov-2016)அன்று உலகத் தமிழ் அறக்கட்டளை சார்பில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா மேரிலாந்தில் நடைபெற்றது. 


இதை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களின் புதல்வர்கள் திரு.தமிழ்மணிகண்டன் , திரு.ஆண்டவர் மேலும் வ.சுப. மாணிக்கனாரின் மகள் தென்றல் அழகப்பன் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். 


இதில் இலக்கிய ஆர்வலர்களும் பல தமிழறிஞர்களும் கலந்துகொண்டனர். மேலும் வ.சுப. மாணிக்கனாரின் மாணவர்கள் முனைவர். பழனி .ஜி. பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வ.சுப.ம அவர்களுடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.


இதில் கலந்துகொண்டு பேசிய வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவர்   குறிப்பிட்ட சில கருத்துகள்: 


* உண்மையையே பேசவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்

* பேராசிரியர், தமிழ்த்துறை தலைவர், கல்லூரி முதல்வர், பல்கலைக்கழக துணைவேந்தர் என்று பல்வேறு பணிகளை செவ்வனே செய்தவர்.

* தமிழ் கலைச்சொற்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டு பல்வேறு கலைச்சொற்களை படைத்தவர். 

* தமிழ்வழிக் கல்விக்காக தொடர்ந்து குரல்கொடுத்தவர் 

* தன் வாழ்க்கையை மிகவும் திட்டமிட்டு அமைத்துக்கொண்டவர் 

* தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதியவர். 

* தொல்காப்பியத்திற்கு புத்துரை விளக்கம் கொடுத்தவர் 

* காரைக்குடி தமிழ்ச்சங்கம் நிறுவி வளர்த்தவர் 

* தில்லை அம்பலத்தில் நின்று திருமுறைகள் ஓதி தொடந்து தமிழில் பாட போராடியவர்.


இந்த நிகழ்ச்சி வ.சுப.மாணிக்கனாரைப் பற்றி படிக்கவும் , கேட்கவும், அவரது தமிழ்த்தொண்டை அறிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமைந்தது. ஏற்பாடு செய்த உலகத் தமிழ் அறக்கட்டளைக்கு வாழ்த்துகள்..

by Swathi   on 21 Nov 2016  3 Comments
Tags: Va Supa Manikkinar   வ.சுப.மாணிக்கனார்   உலகத் தமிழ் அறக்கட்டளை              
 தொடர்புடையவை-Related Articles
மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு விழா
கருத்துகள்
13-Apr-2020 17:15:06 செ. மணிகண்டன் said : Report Abuse
ஐயா,வணக்கம். வ.சுப. மாணிக்கனார் அவர்கள் தொடங்கிய தமிழ்வழிக்கல்வி இயக்கம் தொடங்கிய நாள் மாதம் ஆண்டு தங்களுக்குத் தெரிந்தால் அனுப்பி உதவவும். நன்றி. தொடர்புக்கு 9123556188
 
15-Apr-2017 22:36:52 ரத்தினம் சந்திரமோகன் said : Report Abuse
ஏசி இல்லாத வீசி , பேகன் பதிப்பக நிறுவுனர், கவியரசர் முடியரசரின் நண்பர், பல தமிழாசிரியர்களுக்கு வழிகாட்டி, காரை மண்ணின் பெருமை, எங்கள் ஆசான். ரத்தினம் சந்திரமோகன், முதல்வர், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை
 
22-Nov-2016 10:56:03 அம்ரித் Narayn said : Report Abuse

தமிழ் ஆசான் அரசு நாராயணசாமி நாயுடு, முனைவர், SVஆர்ட்ஸ் காலேஜ் திருப்பதி, செந்தில்குமார் நாடார் கல்லூரி விருதுநகர், கல்லூரி முதல்வர் ஜி.வேங்கடசாமி நாயுடு GVN கலை கல்லூரி, கோவில்பட்டி

 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.