LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

வாயை மூடி பேசவும் - திரை விமர்சனம் !!

நடிகர் : துல்கர் சல்மான்


நடிகை : நஸ்ரியா நாசிம்


இயக்குனர் : பாலாஜி மோகன்


இசை : சியன் ரால்டன்


பனிமலை என்ற அழகிய மலை கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் ஹீரோ துல்கர் சல்மான். 


அந்த கிராமத்தில் ஒரு அபூர்வமான நோய் மக்களை தாக்குகிறது. 


அதாவது இந்த நோயாகள் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் தன்மையை இழக்கத் தொடங்குகின்றனர். இதனை அடுத்து அரசு சுகாதாரத்துறை அமைச்சரான பாண்டியராஜனை அங்கு அனுப்பி தீர்வு காண சொல்கிறது. 


இந்தனை தொடர்ந்து அங்குள்ள பத்திரிகையாளர்களை சந்திக்கும் அமைச்சர் பாண்டியராஜன், பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல முடியாததால், தனக்கும் அந்த நோய் தாக்கப்பட்டதாக கூறி வாய்ப்பேச முடியாமல் நடிக்கிறார். 


அந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் நஸ்ரியாவிடம், தனக்கு அந்த நோயின் அறிகுறி இருப்பதாக கருதி சோதனை செய்ய சொல்கிறார் நாயகன் துல்கர் சல்மான். 


இதன் காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்கு வரும் துல்கர் சல்மானும், நஸ்ரியாவும் பழக்கம் ஏற்படுகிறது. 


நஸ்ரியாவிற்கு உறவினர் ஒருவரை திருமணம் செய்ய வீட்டில் உள்ளோர்கள் முடிவு செய்கிறார்கள். அந்த உறவினர் நஸ்ரியாவிற்கு நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கிறார். இதைப் பிடிக்காத நஸ்ரியா அவர் மீது ஈடுபாடு இல்லாமல் இருந்துவருகிறார். இதற்கிடையில் அந்த ஊரில் அதிகமாக எல்லோரும் பேசுவதால்தான் நோய் அதிகமாக பரவுவதாக அரசு முடிவு செய்கிறது. இதனால் ஊரில் யாரும் பேசக் கூடாது என்று அரசு உத்தரவு போடுகிறது. அப்படி பேசுபவர்கள் இறக்க நேரிடும் என்றும் கூறுகிறது. இதனால் அனைவரும் பேசுவதை தவிர்த்து செய்கையால் கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள்.


இந்நிலையில் நஸ்ரியாவிற்கு உறவினர் பிடிக்காமல் போக, துல்கர் சல்மான் மீது காதல் ஏற்படுகிறது. 


துல்கருக்கும் நஸ்ரியா மீது காதல் கொள்கிறார். 


ஆனாலும் இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர். இந்நிலையில் ஊரில் பீதியை கிளப்பிய அந்த மர்ம நோய்க்கு மருந்து கண்டுபிடித்து ஊரில் பேசக் கூடாது என்ற தடை உத்தரவு நீக்கப்படுகிறது.


இறுதியில் துல்கர், நஸ்ரியாவிடன் தனது காதலை சொன்னாரா ? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை. 


துறுதுறுவென வரும் நாயகன் துல்கர் சல்மான் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்து முடித்துள்ளார். சரியான கதையை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கான எதிர்காலம் தமிழ் சினிமாவில் பிரகாசமாகவே உள்ளது துல்கர்...


நஸ்ரியா மற்ற படங்களைப் போல் இல்லாமல்.. இந்த படத்தில் அமைதியான பெண்ணாக வருகிறார். 


அப்பாவி அமைச்சராக வரும் பாண்டியராஜன் நகைச்சுவையில் கலக்குகிறார்.


நீண்ட நாட்களுக்குப்பிறகு திரையில் வந்திருக்கும் மதுபாலா, கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். 


குடிகாரர்களின் சங்கத் தலைவனாக வரும் ரோபோ சங்கர் படம் முழுக்கவே சரக்கடித்து அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். 


சியன் ரால்டனின் இசையில் பாடல்கள் ஏதோ பரவாயில்லை....


மொத்தத்தில் வாயை மூடி பேசவும் ஒரு முறை பார்க்கலாம்.......

by Swathi   on 26 Apr 2014  0 Comments
Tags: Vaayai Moodi Pesavum   வாயை மூடி பேசவும்                 
 தொடர்புடையவை-Related Articles
வாயை மூடி பேசவும் - திரை விமர்சனம் !! வாயை மூடி பேசவும் - திரை விமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.