LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜோதிடம்

வைகாசி விசாகம்

 

வைகாசி விசாகம்                                                                   ஜோதிடர் பலராமன்                                                                                                                                  
தமிழ் மாதங்களின் பெயர் அமைந்ததே சில காரணங்களின் அடிப்படையில் தான். ஒவ்வொரு மாதத்தின் பௌர்ணமி நாளில் வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயர் ஆகும். உதாரணமாக சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் வரும் நட்சத்திரம் சித்திரை ஆகும். இதைப்போலவே வைகாசி மாதம் பௌர்ணமி நாளில் வரும் நட்சத்திரம் விசாகம் ஆகும். வைசாகம் என்பது மருவி விசாகம் என்றும் வைகாசி என்றும் அழைக்கப்படுகிறது. விசாகம் நட்சத்திர நாளில் தான் சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளை அக்னி தேவன் கங்கை ஆற்றில் சேர்க்க கிருத்திகைப்பெண்கள் ஆறு பேர் அந்த ஆறு தீப்பொறிகளையும் ஒன்று சேர்த்து வளர்க்க ஆறுமுகனாக வளர்ந்தார். விசாகம் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு நட்சத்திரக்கூட்டம் ஆகும். இந்த நட்சத்திர நாள் முருகனை வணங்கி அவனருளைப்பெற மிகச் சிறந்த நாளாகும். இந்த வருடம் ஜூன் மாதம் 3-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று வைகாசி விசாகம் ஆகும்.  இந்தத் திருநாளில் தேவராய சுவாமிகள் இயற்றிய "கந்த சஷ்டி கவசம்" படிப்பது அளவற்ற நற்பலன்கள் தரும். "ஓம் சரவண பவ" என்று 108 முறை சொல்வதும் நன்மை தரும்.  இந்தத் திருநாளில் புதுமணத் தம்பதியர் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து, உடன் தேனும் தினை மாவும் நிவேதனம் செய்தால் அறிவும் அழகும் வீரமும் நிறைந்த குழந்தை பிறக்கும். மேலும் இந்த அர்ச்சனை செய்வதால் எதிர்ப்புக்களையும் எதிரிகளையும் வெல்லும் திறனும் தைரியமும் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் அல்லது வீடு கட்டும் யோகமும் ஏற்படும். மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும். அறிவு பெருகும். ஞானம் கிடைக்கும். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கிடைக்கும்.
வைகாசி விசாகத்தில் ஆறுமுகனை வணங்குவோம்! முருகனின்  திருவருளைப் பெறுவோம்!!

வைகாசி விசாகம்

ஜோதிடர் பலராமன்

 

தமிழ் மாதங்களின் பெயர் அமைந்ததே சில காரணங்களின் அடிப்படையில் தான். ஒவ்வொரு மாதத்தின் பௌர்ணமி நாளில் வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயர் ஆகும். உதாரணமாக சித்திரை மாதம் பௌர்ணமி நாளில் வரும் நட்சத்திரம் சித்திரை ஆகும். இதைப்போலவே வைகாசி மாதம் பௌர்ணமி நாளில் வரும் நட்சத்திரம் விசாகம் ஆகும். வைசாகம் என்பது மருவி விசாகம் என்றும் வைகாசி என்றும் அழைக்கப்படுகிறது. விசாகம் நட்சத்திர நாளில் தான் சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளை அக்னி தேவன் கங்கை ஆற்றில் சேர்க்க கிருத்திகைப்பெண்கள் ஆறு பேர் அந்த ஆறு தீப்பொறிகளையும் ஒன்று சேர்த்து வளர்க்க ஆறுமுகனாக வளர்ந்தார். விசாகம் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு நட்சத்திரக்கூட்டம் ஆகும். இந்த நட்சத்திர நாள் முருகனை வணங்கி அவனருளைப்பெற மிகச் சிறந்த நாளாகும். இந்த வருடம் ஜூன் மாதம் 3-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று வைகாசி விசாகம் ஆகும்.  இந்தத் திருநாளில் தேவராய சுவாமிகள் இயற்றிய "கந்த சஷ்டி கவசம்" படிப்பது அளவற்ற நற்பலன்கள் தரும். "ஓம் சரவண பவ" என்று 108 முறை சொல்வதும் நன்மை தரும்.  இந்தத் திருநாளில் புதுமணத் தம்பதியர் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு செவ்வரளிப் பூக்களால் அர்ச்சனை செய்து, உடன் தேனும் தினை மாவும் நிவேதனம் செய்தால் அறிவும் அழகும் வீரமும் நிறைந்த குழந்தை பிறக்கும். மேலும் இந்த அர்ச்சனை செய்வதால் எதிர்ப்புக்களையும் எதிரிகளையும் வெல்லும் திறனும் தைரியமும் கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் அல்லது வீடு கட்டும் யோகமும் ஏற்படும். மகிழ்ச்சியான திருமண வாழ்வு அமையும். அறிவு பெருகும். ஞானம் கிடைக்கும். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கிடைக்கும்.வைகாசி விசாகத்தில் ஆறுமுகனை வணங்குவோம்! முருகனின் திருவருளைப் பெறுவோம்!!

 

by Swathi   on 01 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.