LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை நடத்தும் 15-ம்  ஆண்டு வள்ளலார் தமிழிசை விழா  டிசம்பர் 25 முதல் 29 வரை 5 நாள் விழா.. அனைவரும் வருக ... 

 

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை நடத்தும் 15-ம்  ஆண்டு வள்ளலார் தமிழிசை விழா  டிசம்பர் 25 முதல் 29 வரை 5 நாள் விழா.. அனைவரும் வருக ... 

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை அதன் நிறுவனர் திருபுவனம் குரு .ஆத்மநாதன் தலைமையில்,  தமிழிசைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்கள் தமிழிசை விழாவைச்  சென்னையில் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. அதில் முதல் மூன்று நாட்கள் வள்ளலார் நிகழ்ச்சியாகவும், அடுத்த இரண்டு நாட்கள் தமிழிசை அறிஞர்களின் பாடல்களும், சங்க இலக்கியம், பக்தி இலக்கியப்பாடல்கள் உள்ளிட்டவை பாடப்படுகிறது.  

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 முதல் 29 வரை நடைபெறும் ஐந்து நாள் தமிழிசை விழாவில்,  தமிழிசை வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஒருவருக்கு "இசைக்கடல் விருது" வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.   அந்த வகையில் இவ்வாண்டு பத்மஸ்ரீ ,தவில் சக்கரவர்த்தி ,ஹரித்துவாரமங்கலம் A.K. பழனிவேல் அவர்களுக்கு இசைக்கடல் விருது வழங்கப்படுகிறது. 

ஒவ்வொரு நாளும் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள், இசை ஆசிரியர்கள், மாணவர்கள் என்று தமிழிசையைப் போற்றும் விழாவாக நேர்த்தியாகத் திட்டமிட்டு நடத்தப்படுகிறது.  இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர்.கோ.விஜயராகவன், முனைவர் வை.பழனிச்சாமி IAS , பத்மஸ்ரீ சீர்காழி சிவ சிதம்பரம், டாக்டர் பத்ரி நாராயணன், முனைவர்.கு.சிதம்பரம், (தமிழாராய்ச்சி நிறுவனம்) , திரு.குணவதி நல்லிப்பிரியர்  , புரவலர் கோ.பாலச்சந்திரன் IAS , திருமதி.புனிதா கணேசன்( தலைவர்,பாரத் கல்விக்குழுமம்), திரு.ஹேமநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இவ்வாண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள். பல தலைப்புகளில் தினமும் இசைவிழா நடைபெறுகிறது.   

7 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் நிகழ்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.இரா.பொற்செழியன் அவர்களின் சீரிய முயற்சியின் விளைவாகத் தொடங்கப்பட்ட வட  அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FETNA), இசைவிழாவின் இறுதி நாளான டிசம்பர் 29ந் தேதி இசைக்கடல் பண்பாடு அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு நாள் தமிழிசை விழாவாக பெட்னா  விழா நடத்துகிறது. இதில் பெத்னா அழைப்பின்பேரில் பல விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துவருகிறார்கள். இவ்விழாவில் பெட்னா தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அமெரிக்காவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வந்து  கலந்துகொண்டு சிறப்பிக்கும் நடைமுறை உள்ளது. அதையொட்டி இவ்வாண்டு பேரவைத் தலைவர் திரு.சுந்தர் குப்புசாமி , மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் திரு.கொழந்தவேல் இராமசாமி உள்ளிட்ட பலர் அமெரிக்காவிலிருந்து கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் மதிய  உணவும், இரவு உணவும் அறக்கட்டளை பொறுப்பில், உபயதாரர்கள் உதவியில் வழங்கப்படுகிறது.  உலகெங்கும் பல நாடுகளிலிருந்து தமிழிசை கற்கும் மாணவ-மாணவிகள் சென்னை வந்து பாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.  இவ்விழா சிறப்பாக நடைபெற ஏதுவாக எஸ்.ஆர்.எம் எம் குழுமத்தின் வடபழனி விழா அரங்கத்தைக் கட்டணமின்றி தமிழிசை வளர்ச்சிக்கு வழங்குவது மிகப்பெரிய பங்களிப்பாகும். 

தமிழிசை விழாவில் இவ்வாண்டு குடும்பத்துடன் கலந்துகொண்டு, தமிழிசை அறிஞர்களின் இசையைக்  கேட்டு , தமிழர்களின் குழந்தைகள் இசையிலும், நடனத்திலும் முறையாகப் பயிற்சி பெற ஊக்கமளிக்கும் விழா.  

 

நிகழ்ச்சி  நாட்கள் :  25-12-2019  முதல் 29-12-2019 வரை 

நேரம்                                :  25-12-2019  முதல் 27-12-2019 வரை : 3:00PM  - 8:30PM 

                                                  28-12-2019  முதல் 29-12-2019 வரை : 9:00AM  - 9:00PM 

இடம்                                  :  S R M  பல்கலைக்கழகம் , கலையரங்கம் (A /C), 3வது  தளம்

                                                  எண்  1, ஜவஹர்லால் நேரு  சாலை , 100 அடி சாலை , 

                                                  வடபழனி   , சென்னை - 28

by Swathi   on 11 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.