LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

வழிநடைச் சிந்து

வழிநடைச் செல்லும் வருத்தம் மறைய
ஆற்றிடைக் காட்சிகள் அணங்குக் குணர்த்தி
பாடும் சிந்துகள் பல்வகைச் சந்தமும்
அடியும் நடையும் அமைவுறப் பெற்று
வழிநடைச் சிந்தென வகுக்கப் படுமே
கருத்து : வழிநடையாகச் செல்லும்போது ஏற்படும் வருத்தம் மறைவதற்காகத் தாம் நடந்து செல்லும் வழியிடையில் உள்ள அழகுக்காட்சிகளைத் தன்னுடன் நடந்துவரும் மகளிர்க்கு எடுத்துத் தெரிவித்துப் பாடும் சிந்துப் பாடல்கள் வழிநடைச் சிந்து என்று பாகுபாடு செய்யப்படும். அவ்வழிநடைச் சிந்துகள் பலவகைச் சந்தமுடையனவாகவும், பலவகை அடிகளைய்;உடையனவாகவும் பலவகை நடையினை உடையனவாகவும் அமைந்திருக்கும். 
காட்டு :
கோபுர மீதுபுறாச் சோடி - நமைக்
கூப்பிடுதே வாஎனக்கு மரனைக் கொண்டாடி
நூபுர ஓதையளித் தோடிக் - கதிர்
நூலெனவி டந்தொறும் நு டங்கிடை நீ வாடி
(வெ.கோ.வ.சி.தொடை.ப்.271)
வழிநடைச்சிந்துகள் ஓரடிக் கண்ணியாகவும் வரும். பின்வரும் வழிநடைச் சிந்தின் ஓரடி 11 ஏகதாள வட்டணைகளில் அடங்கும் 44 சீர்களைப் பெற்றுள்ளது. அப்பாடலின் பிற்பகுதி ஒருவகைச் சந்த அமைப்பில் உள்ளதையும், எல்லா அரையடிகளுமே பகர மோனை ஒன்றனாலேயே தொடுக்கப் பெற்றுள்ளதையும் காண்க. 
காட்டு : பின் சந்தக் குழுப்பு
தந்தானன தந்தானன தந்தானன தந்தானன 
தத்தத்தன தனதந்தன தத்தத்தன தனதந்தன
தனதத்தன தந்தத்தன தனதத்தன தந்தத்தன
தனதத்தன தனதத்தன தனதத்தன தனதத்தன
பத்மினிசாதிப் பெண்ணே மானே - பாம்பன்
பார்க்கவ ருவாய் நீ தானே - அங்குப்
பாலசுப் ரமண்யர் ஆலயத் தில்விதிப்
பான்மையில் கும்பாபி டேகம் - அதைப்
பார்ப்பவர்க் கெய்தும்வை போகம் - குறப்
பாவையில்ன் மீதினில் மோகம் - கொண்ட
பண்பினால் மேவும்நல் யோகம் - மலர்
பைங்காவியை யுங்காலனை யுஞ்சேலினை யும்பார்வைகொள்
பச்சைகொடி இடையும்பிடி இச்சித்திடு நடையுங்கொடு
பதுமத்தின ரும்புக்கலர் தருபொற்றன மிஞ்சப்பெறு
பனசக்கனி ரசமொத்துறு வசனத்திலென் மனசைக்கவர் (பத்மினி)
(எம்.கே.எம்.அப்துல் காதிறு இராவுத்தர் பாம்பன் பால சுப்ரமணிய கோயில் வழிநடைச் சிந்து) 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.