|
|||||
கீச்சுச் சாளரம் தொகுப்பு: நீச்சல்காரன் |
|||||
ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனிடம் அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள் அப்போது தெரியும் அவர்களின் உண்மை முகம் @gowthamiTta பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாத ஒரே செயல் இப்போதைக்கு மொபைல் சார்ஜிங் மட்டும் தான் @Tamilsel_Twit எழுந்திரிக்கிறதுக்கு “மட்டும்” அலாரம் வச்சு பழகிட்டோம்... தூங்குறதுக்கு அலாரம் வச்சு தூங்குனா.. எழுந்திரிக்க அலாரமே தேவைப்படாது... @Raajavijeyan நாளை உங்கள் பிணத்தின் மீது நெளியும் புழுக்களைக் கேட்டுப் பாருங்கள்... நீங்கள் என்ன ஜாதி என்று சொல்லும். @priyaGurunathan. குழந்தைகளுக்கு மாறுவேடம் போட்டால் கிருஷ்ண ஜெயந்தி, கடவுளுக்கே மாறுவேடம் போட்டால் விநாயகர் சதுர்த்தி @mohanramko சிக்னல் சரியா கிடைக்காத இடத்துல "இப்பா கேட்குதா?"ங்கற வார்த்தை மட்டும் துல்லியமா கேட்குறதெல்லாம் என்ன டிசைனோ..!!! @Ramesh46025635 |
|||||
by Swathi on 14 Oct 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|