|
|||||
வலம்புரிக்காய் |
|||||
ஹெலிட்ரஸ்சோரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஸ்டெர்குலியாசியே குடும்பத்தைச் சார்ந்த வலம்புரிக்காயில் குயினோலோன், மலாட்டையமின் போன்ற பொருட்கள் உள்ளன. வலது பக்கம் திருகலாக இருப்பதால் வலம்புரிக்காய் என்றும், இடது பக்கம் திருகலாக இருப்பதால் இடம்புரிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. வலம்புரிக்காயின் மகத்துவம் : 1.கெட்டுப்போன உணவுகளால் ஏற்படும் வயிற்று உபாதைகளை நீக்கி, செரியாமை மற்றும் கழிச்சலை கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை வலம்புரிக்காய். 2.வலம்புரிக்காயை உலர்த்தி, பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராமளவு தேனுடன் குழப்பி சாப்பிட வயிற்று உபாதைகள் நீங்கும். கழிச்சல் கட்டுப்படும். 3.வலம்புரிக்காயை ஒன்றிரண்டாக இடித்து, 500 மில்லி நீரில் போட்டு கொதிக்கவைத்து, 125 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு சாப்பிட கழிச்சல் நீங்கும். |
|||||
by Swathi on 05 Feb 2013 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|