LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

வள்ளுவம் படிப்போமா!!

இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் போங்க...

அன்றைய தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒருவன் உலகத்திற்கே நெறி வகுத்துக் கொண்டிருந்தான். அவன் தாடியோடு இருந்தானா, அவன் வீட்டுத் திண்ணையில் இருந்து அதை எழுதினானா, மாளிகையில் இருந்து எழுதினானா, அவன் எந்தச் சாதியைச் சேர்ந்தவன், அவன் எந்த மதம், அவன் அடையாளம் என்ன, அவன் ஆண்ட பரம்பரையா, முற்றும் துறந்த சித்தனா, பித்தனா..? என்றெல்லாம் அடையாள ஆராய்ச்சியில் ஈடுபடும் ஓர் இழிவான தமிழ்ச் சூழலில் அவன் பிறக்கவில்லை.

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்..

அவன் படைத்த திருக்குறளில் எங்கும் தமிழ் என்ற வார்த்தை இல்லை, ஒரு தெய்வத்தின் பெயர் இல்லை, ஒரு மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டுப் பதிவுகள் இல்லை, ஓர் அரசையோ ஆளும் வர்க்கத்தையோ உயர்த்தியோ தாழ்த்தியோ ஒரு பதிவும் இல்லை. இப்படி எந்த ஒரு அடையாள அரசியலுக்குள்ளும் சிக்காமல் ஒரு நெறி வகுக்கக் கூடிய பக்குவம் அன்று எம் முப்பாட்டனுக்கு இருந்தது.

எந்த ஒரு மதமும் போதிக்காத மனிதத்துடனும் , எந்த ஓர் அடையாளத்துக்குள்ளும் அடங்காத நடுநிலைமையுடன் எழுதப்பட்ட
இப்படி ஒரு பொது மறை நூலை வேறெங்காவது காண முடியுமா?

பிற்காலத்தில் நாற்பொருளில் மையம் கொண்ட தமிழர்கள் அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்ற அடிப்படையில் தம் வாழ்வியல் நெறியைக் கட்டமைத்தாலும், வீடு என்ற தனி மனித பகுத்தறிவுக்கு மட்டுமே புலப்பட வேண்டிய கருத்தியலையும் தவிர்த்து ஒரு நன்னெறி வகுத்த பெருந்தகை எங்கள் வள்ளுவன்.

இவ்வளவு தெளிவான ஒரு படைப்பைப் படைக்க ஒருவன் எப்பேர்ப்பட்ட ஞானியாக இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். மதங்களின் வேத நூல்களில் இல்லாத பக்குவமும் தெளிவும் திருக்குறளில் இருக்கிறது.

அப்படி என்றால் அந்தக் காலம் எப்படி இருந்திருக்கும். இத்தகைய படைப்பைப் படைக்க அவனுக்கு எது ஊன்றுகோலாய் இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். மாளிகையிலும் திண்ணையிலும் இருப்பவனால் இப்படிப் பட்ட நூலை எழுத முடியுமா?

இதைப் படைத்தவன் கண்ட காட்சிகள் எப்படி இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்

அவன் சுற்றுச் சூழல்,
அவன் சொந்தங்கள்,
அவன் நண்பர்கள்,
அவன் கண்ட அரசர்கள்,
அவன் கொண்ட காதல்,
அவன் கற்ற கல்வி,
அவன் பெற்ற செல்வம்,
அவன் வாழ்ந்த மண்,
அவன் நெறி கற்ற ஆசிரியர்கள்,
அவன் மொழி கற்ற அறிஞர்கள்,
அவன் உண்ட உணவு,
அவன் கண்ட கனவு

எல்லாம் எவ்வளவு மேன்மையானது என்று எண்ணிப் பாருங்கள்.

எங்கிருந்தோ வந்த இலக்கியங்களையும், சித்தாந்தங்களையும் படித்துப் பூரிக்கும் நம்மவர்கள் நம் முப்பாட்டன் விட்டுச் சென்ற இச்செல்வத்தைப் புறக்கணிக்கலாமா...

இவனுக்கு அடையாளமாக மதம் இல்லை, சாதி இல்லை, வெறும் தமிழே இவன் அடையாளமாக இருக்கிறது. அன்று அவன் ஏந்திய அடையாளம் தமிழ் மட்டும் தான். ஆனால் இன்று நாமோ, மதம், சாதி, தேசம் என்ற கண்ட கண்ட அடையாளங்களை ஏற்றுப் பெருமை பேசிக்கொண்டு திரிகின்றோம், ஆனால் தமிழன் என்று சொல்ல மட்டும் தான் தயக்கம்,... தமிழன் என்று சொன்னால் அங்கே மதத்திற்கும் சாதிக்கும் வேலை இல்லாமல் போய் விடும், அங்கு ஒரு சமத்துவம் வந்து விடும் என்ற அச்சமா?

நான் தமிழன் என்ற திமிர் ஒவ்வொரு தமிழனுக்கும் வரும் வரை, வள்ளுவன் எம்மிடம் இருந்து அன்னியப்பட்டுத் தான் இருப்பான் போல... வள்ளுவம் படிப்போமா!!!

by Swathi   on 26 Nov 2017  0 Comments
Tags: Valluvam   Thirukkural   Thirukkural Book   Valluvar   வள்ளுவம்        
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - Thirukkural: The Holy Scripture நூல்கள் பரிசாக  வழங்கப்பட்டது திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - Thirukkural: The Holy Scripture நூல்கள் பரிசாக  வழங்கப்பட்டது
Thirukkural translation in Vaagri Booli (வாக்ரி பூலியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Vaagri Booli (வாக்ரி பூலியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Urdu (உருது மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Urdu (உருது மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Tulu (துளுவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Tulu (துளுவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Tok Pisin (டோக் பிசினில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Tok Pisin (டோக் பிசினில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Thai (தாய் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Thai (தாய் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Telugu (தெலுங்கில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Telugu (தெலுங்கில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Swedish (ஸ்வீடிஷ் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swedish (ஸ்வீடிஷ் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.