LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

தமிழ் பள்ளியில் இடம் கிடைக்காமல் அவதியுறும் அமெரிக்கத் தமிழர்கள்... பள்ளியின் முதல் நாள் வகுப்பிற்கு கட்டுக்கடங்காத கூட்டம்.. - இது கனவா?

வட அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டனில் இருந்து 30 மணித்துளிகளில் செல்லும் தூரத்தில் அமைந்துள்ள வெர்ஜினியா மாநிலத்தில் அமைந்துள்ள வள்ளுவன் தமிழ் மையம்(www.ValluvanTamil.org) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தமிழ் கல்வியை சொல்லிக் கொடுப்பதில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. 20-30 குழந்தைகளைக் கொண்டு வீட்டின் கீழ்த்தளத்தில் தொடங்கப்பட்ட இந்த தமிழ்ச் சொல்லிக்கொடுக்கும் முயற்சி இன்று குழந்தைகளை சேர்க்க இடமில்லை, நீங்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ளீர்கள், உங்கள் காத்திருப்பு எண் இது என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. 


வள்ளுவன் தமிழ் மையம் தொடங்கி மூன்று ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் 13-sep-2014 அன்று தொடங்கிய 2014-2015ம் ஆண்டிற்கான முதல் நாள் வகுப்பிற்கு  330-குழந்தைகளுக்கு மேல் பெற்றோர் தாத்தா பாட்டி, உறவினர்களுடன் வந்திருந்து தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.  பள்ளி நிர்வாகம் முறையாக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தாலும், எதிர்பாராத கட்டுகடங்காத 1000க்கு மேற்பட்ட கூட்டத்தால் பலர் அரங்கத்திற்கு வெளியே நின்றுகொண்டிருக்கும் நிலை ஏற்பட்டது. இந்தப் பள்ளி அமெரிக்கக் தமிழ்க் கல்விக் கழகத்தின்(Amercan Tamil Academy) amtaac.org, பாடத்திட்டத்தில் இயங்கி வருகிறது. 

 

இந்த முதல் நாள் கூட்டத்தில் வள்ளுவன் தமிழ் மையத்தின் முதல்வர் திரு.வேல்முருகன் பெரியசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.  பள்ளியின் சிறப்பு விருந்தினராக Fairfax County Education Board member டாக்டர்.மூன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். டாக்டர் மூன் பேசும்போது அவர் அமெரிக்காவிற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன் வந்தபோது அவரது தாய் இங்கே துப்புரவு பணியாளராக வேலை செய்து தன்னை வளர்த்ததையும்,தன் மகன் தற்போது ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வருவதையும், ஒவ்வொருவரும் தாய் மொழியை கற்பது எவ்வளவு அவசியம் என்றும் பேசி, குட்டிக் கதைகளை குழந்தைகளுக்குப் புரியும் வகையில் சொல்லி அவர்களின் கைதட்டலைப் பெற்றார். குழந்தைகளும் பெற்றோர்களும் அமைதியாக கடைசிவரை அமர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் கேட்கும் விதத்தில் நிகழ்ச்சியை வடிவமைத்திருந்த பள்ளியின் நிர்வாகக் குழு பாராட்டுக்குரியது. 

 

குழந்தைகளின் பெற்றோர்களில் இருந்து  40க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 40க்கும் மேற்பட்ட பல்வேறு தன்னர்வளர்களும்  சேர்ந்து பல்வேறு குழுவாக ஈடுபாட்டுடன் தங்கள் பள்ளியாகக் கருதி வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இதில் Accounts committee, Teachers committee, Election Committee, Audit Committee, Cultural Commitee, Technology Committee போன்ற குழுக்கள்  நிர்வாகக் குழுவின் மேற்பார்வையில்  தங்கள் பணிகளை செவ்வனே செய்து இந்த அமைப்பிற்கு வலு சேர்க்கிறார்கள். 

 

100க்கும் மேற்பட்ட தன்னார்வளர்கள் 4000மணி நேரம் தங்கள் சொந்த நேரங்களை செலவிட்டு இதை கட்டி எழுப்பியுள்ளார்கள். "ஊர் கூடித் தேர் இழுத்தால்" முடியாதது இல்லை என்பதற்கு இது ஒரு மிகப்பெரிய சான்று. நிகழ்ச்சியில் நிர்வாகக் குழுவினரை மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்யப்பட்டனர்.  பள்ளி தொடங்கியது முதல் மிகச் சிறப்பாக பங்களித்து இந்தியா திரும்பிய திரு.பாஸ்கர் அவர்களின் பங்களிப்பை நினைவு கூர்ந்த நிகழ்ச்சி அறிவிப்பாளர், அவர் வகித்த துணை முதல்வர் பதவிக்கு தேர்தல் நடத்தி   திரு.லெஷ்மிகாந்தன் அவர்களை தேர்ந்தடுத்த்தை அறிவித்தனர். மேலும் அனைத்து ஆசிரியர்களையும் மேடைக்கு அழைத்து அறிமுகம் செய்துவைத்தனர். இதை அடுத்து ஒவ்வொரு குழுவாக தங்கள் செயல்பாடுகளை விளக்கி, பெற்றோர்கள் எப்படி தங்கள் பங்களிப்பை வழங்கமுடியும் என்று விளக்கிப் பேசினர்.

 

வள்ளுவன் தமிழ் மையத்தின் நிர்வாகக் குழு:

திரு.வேல்முருகன் (President)

திரு.லெஷ்மிகாந்தன் (Vice-President)

திரு.சம்பத் (Trushurer)

திரு.இரவி சம்பத் Secretary

திருமதி.சத்யா (Joint-secretary)

திரு.இஸ்மாயில் (Patent Committee)

திரு.ராம்ஸ் (Teachers committee)

 

விழாவை நிர்வாகக் குழுவைச் சேர்ந்த திரு.ராம்ஸ், திரு.இஸ்மாயில்,  திரு.இரவி சம்பத் ஆகியோர் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினர். 

தொகுப்பு:பிரியா பார்த்தசாரதி 

vta1
by Swathi   on 14 Sep 2014  4 Comments
Tags: வள்ளுவன் தமிழ் மையம்   Valluvan Tamil Academy                 
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
23-Jun-2015 09:44:07 Kanthimathi said : Report Abuse
வள்ளுவன் தமிழ் மையம் வானளாவிய புகழ் பெறுக! நானும் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியை.தஙகளுக்குத் தேவைப்படு கின்ற நேரம் என்னாலியன்ற உதவிகளைச் செய்யக்காத்திருக்கிறேன்.
 
27-Dec-2014 06:29:49 ARULPRAKASH.A said : Report Abuse
Thamizh Vazhga
 
16-Oct-2014 09:18:43 திருபுவனம் ஆத்மநாதன் said : Report Abuse
இனிமை தமிழ் மொழி எமது எமக்கின்பம் தரும் படி வாய்த்த நல் அமுது தமிழ் வளர்க்கும் வள்ளுவன் தமிழ் மையம் வாழ்க வளர்க அன்புடன் திருபுவனம் ஆத்மநாதன்
 
19-Sep-2014 04:57:45 Thenmozhi said : Report Abuse
தமிழ் படித்தால் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியும். மனித சமுதாயத்தை பற்றிய சிந்தனை வளரும். அதை புரிந்து கொண்ட மனிதர்களே தமிழ் படிக்க ஆர்வம் காட்டுகின்றார்கள். இவர்களால்தான் இன்னும் தமிழ் மொழி அழியாமல் வாழ்ந்து கொண்டு இருகிறது.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.