LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

வழுவசை

ஈருயிர் அசையும் இரண்டிறந் தொலிக்கும்
எவ்வகை அசையும் வழுவசை யாகும்
வழுவசை என்பது யாது? என்பதை விளக்குவது இந்த நூற்பா.
கருத்து : சிந்துப் பாடல்களில் இரண்டு உயிரெழுத்துகளைக் கொண்டிருக்கும் ஓர் அசையும், அரையடி இறுதி, அடியிறுதி ஒழிந்த இடங்களில் இரண்டு அசைகளுக்கு மேலும் நீண்டு ஒலிக்கும் குறிலசை, நெடிலசையாகிய எப்படிப்பட்ட அசைகளும் வழுவசைகள் எனப்படும்.
காட்டு : இரட்டைக் கும்மி
தில்லைச்சி தம்பரம் தன்னிலொ ருநாள்
திருநட்ட மாடும்சி வனுடனே
தேவிசி வகாமி நாயகி அந்தத்
திருநீல பத்தன்நெ றிஉரைக்கச்
சொல்லசெ விதனில் கேட்டாள் நாளும்
சோதித்த வன்தன்னைச் சூதாக்கிச்
சொன்னமொ ழிநிலை யாமலெந் நாளும்
சுகத்தினில் வாழநி னைத்திடென்றார் 
(திரு. நீ. பள்ளு. தொடை: 284)
இதில் திரு - திரு - சுக என்பன ஈருயி அசைகள். இவை வழுவசைகள்.
விளக்கம் : சிந்துப் பாடலில் ஒவ்வோர் உயிரும் அல்லது உயிர்மெய்யும் ஓரசையாகக் கொள்ளப்படும் என்று முன்னரே விளக்கப்பட்டது. (நூ. 6) எனவே இக்கட்டுப்பாட்டை மீறி ஓரசை இரண்டு உயிர்களைப் பெற்று வருமாயின் அது வழுவசையாகும். (முடிகியலில் ஓரசை இரண்டுயிர் பெற்று வருதல் பின்னர் விளக்கப்படும் நூ.15)
அரையடி இறுதிகளிலும் அடி இறுதிகளிலும் வரும் அசைகள் ஓசை நீட்டம் பெற்று இரண்டிறந்து ஓலிப்பதுண்டு. அது இயல்பு. ஆனால், பாடலின் மற்ற இடங்களில் உள்ள அசைகள் இரண்டசைக்கு மேல் நீண்டு ஒலிப்பதில்லை. அப்படி எங்கேனும் நீண்டு ஒலித்து வருமாயின் அவ்வசையும் வழுவசையாகும். 
15.
முடிகியல் நடையுடை இடமொழித் தெங்கும்
ஈருயிர் ஏற்றல் ஓரசைக் கில்லை.
கருத்து : சிந்துப் பாடல்களில் முடுகியல் நடையுடைய இடங்கள் அல்லாத பிற இடங்களில் எந்த இடத்திலும் ஓரசையானது இரண்டு உயிர்களை ஏற்று வருதலில்லை.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் முடுகியல், நடையுடைய இடங்கள் உண்டு. அவ்விடங்களில் உள்ள சீர்களில் அமைந்திருக்கும் அசைகள் இரண்டு உயிர்களை ஏற்று வருதல் உண்டு.
காட்டு :
கண் ணா . யி ரம் டைத்
விண் ணூ . ரி டந் ரித்
கன வயி ரப் படை யவன் மக ளைப் புணர்
கர்த் னே . . . தி ருக்
கழு கும லைப் பதி யனு தின முற் றிடு
சுத் னே . . . . .
(கா. சி. க. வ. ப. 167) 
கோடிட்டவை ஈருயிரசைகளாம்.
மற்ற இடங்கலில் ஓரசை இரண்டு உயிர்களை ஏற்று வருவது வழக்கமில்லல. அப்படி எங்கேனும் வருமானால் அந்த அசை வழுவசையாகக் கொள்ளப்படும் என்று முன்னர் கூறப்பட்டது (நூ. 14).
16.
ஏனை இடங்களில் இரண்டிறந் திசைப்பவும்
ஈருயிர் ஏற்பவும் வழுவசை ஆகும்.
நூ. 14 வழுவசை என்பது யாது என்பதை விளக்கிற்று. எது எது வழுவசையாகக் கொள்ளப்படும் என்பதை விளக்க வந்தது இந்த நூற்பா.
கருத்து : சிந்துப் பாடல்களில் அரையடி இறுதி, அடியிறுதி ஒழிந்த ஏனைய இடங்களில் இரண்டசை நீளத்திற்கு மேல் ஒலிக்கும் அசைகள் வழுவசைகளாகக் கொள்ளப்படும். அதே போன்று முடுகிய இடமல்லாத மற்ற இடங்களில் உள்ள அசைகள் இரண்டு உயிர்களை ஏற்று வருமானால் அந்த அசைகளும் வழுவசைகளாகக் கொள்ளப்படும் (எ.கா - நூ. 14 - இரட்டைக் கும்மி. காண்க)
விளக்கம் : சிந்துப் பாடல்களில் முடுகியல் நடையுடைய இடங்களில் ஓரசை இரண்டு உயிர்களை ஏற்றுவரும் என்று முன்பு காட்டப்படது (நூ.15). முடுகியல் அல்லாத இடங்களில் ஓரசை இரண்டு உயிர்களை ஏற்றுவரின் அது வழுவசையாகக் கொள்ளப்படும்.
சிந்துப் பாடல்களில் ஒவ்வோர் உயிரும் அல்லது உயிர்மெய்யும் ஓரசை மதிப்பு பெறும் (நூ. 6)
இவ்வசைகள் அரையடி இறுதி, அடியிறுதிகளில் ஓசை நீட்டம் பெற்று அளபெடைகளாக ஒலித்து வரலாம். அவ்விடங்களில் அவ்வசை எழுத்துகள் 12 மாத்திரை அளவுகூட ஒலித்தல் உண்டு. மற்ற இடங்களில் இரண்டு அசை நீளத்திற்கு ஒலிக்கலாம். ; இரண்டு அசை நீளத்திற்கு மேல் எங்கேனும் ஓசை நீண்டு ஒலித்து வருமானால் அவ்வசை வழுவசையாகக் கொள்ளப்படும். 
17.
இலக்கணம் இல்லன விலக்குதற் குரிய.
கருத்து : சிந்துப் பாடலில் சிந்துப் பாடலின் அசை இலக்கணத்திற்குப் புறம்பாக வரும் அசைகள் எல்லாம் நீக்குவதற்கு உரியனவாகும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களின் அசைக்கென மேற் கூறப்பட்ட இலக்கண வரையறைகளுக்குப் புறம்பாக வருவனவெல்லாம் நீக்கப்பட வேண்டியவையாகும்.
ஓரசை நீட்டம் ஈரசை அளவே - (நூ- 9)
ஓரசையானது இரண்டசைக்கு மேல் நீண்டு வருதல் இலக்கணமில்லாதது. எனவே, அது விலக்குதற்குரியது.
ஈருயிர் அசையும் இரண்டிறந் தொலிக்கும்
எவ்வகை அசையும் வழுவசை யாகும் - (நூ - 14)
இரண்டு உயிர்களை ஏற்றுவரும் ஓரசையும் இரண்டசைக்கு மேல் நீண்டொலிக்கும் குறிலசை, நெடிலசைகளும் வழுவசைகள், எனவே, அவை விலக்குதற்குரியவை.
காட்டு : ஈருயிர் அசை 
நந்தவ னத்திலோர் ஆண்டி - அவன் 
நாலாறு மாதமாய்க் குயவனை - வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - அதைக் 
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி (பாபம்)(சித்.பா.224)
இதில் இரண்டாம் வரியில் அடிக் கோடிட்ட ‘குய’ என்பது இரண்டுயிர்களை ஏற்றுவந்த ஓரசை.
முடுகியல் நடையுடை இடமொழித் தெங்கும்
ஈருயிர் ஏற்றல் ஓரசைக் கில்லை. (நூ - 15)
முடுகியல் அல்லாத இடங்களில் வரும் ஈருயிர் ஏற்ற அசைகள் இலக்கணமல்லாதன. எனவே அவை விலக்குதற்குரியன.
ஏனைய இடங்களில் இரண்டிறந் திசைப்பவும்
ஈருயிர் ஏற்பவும் வழுவசை யாகும். (நூ - 16)
தனிச்சொல் முன் இடம், அரையடி இறுதி, அடியிறுதி ஒழிந்த இடங்களில் ஓரசையானது இரண்டசைக்கு மேல் நீண்டிருப்பது வழுவசை. அது இலக்கணமில்லாதது. எனவே அது விலக்குதற்குரியது.
காட்டு :
நெஞ்சுபோ றுக்குதில்லை யே . . . . . . இந்த
இதில் தனிச் சொல்லுக்கு முன் வரும் யே என்ற அசை 6 அசை அளவு நீண்டு ஒலிப்பினும் வழுவாகாது.
தில் லைச் சி தம்ப ரம் தன்னி லொ ரு நாள் .
திரு நட்ட மாடும்சி வனுட னே . .
தே வி சி வ கா மி நாயகி அந் தத் .
திருநீ ல பத் தன் நெ றி உ ரைக் கச் . .
இதில் னே என்ற அசை அரையடியிறுதியிலும், கச் என்ற அசை அடியிறுதியிலும் 3 அசையளவு நீண்டு ஒலிப்பினும் வழுவாகா. இவ்விடங்களிலன்றி வேறு இடங்களில் இரண்டசைக்கு மேல் நீள்வன வழுவசையாகும்.
இவ்வாறு சிந்துப் பாடல்களுக்குக் கூறப்பட்ட பிற இலக்கணங்களுக்கு மாறாக வருவனவும் விலக்குதற்குரியன என்பதையும் இந்நூற்பாவின் கருத்தாகக் கொள்ளலாம். 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.