LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

வணக்கம் சென்னை - திரை விமர்சனம் !!

நடிகர் : சிவா

 

நடிகை : பிரியா ஆனந்த்

 

இயக்கம் : கிருத்திகா உதயநிதி

 

இசை : அனிருத்

 

தேனியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் சிவா. லண்டனில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகி பிரியா ஆனந்த். நாயகனும், நாயகியும் ஒரே பிளாட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. முதலில் இருவரும் டாம் அன்ட் ஜெரி போல சண்டைபோட்டுக்கொள்கிறார். பிறகு நாயகன் சிவாவுக்கு கதாநாயகி ப்ரியா ஆனந்த் மேல் மெல்ல காதல் துளிர ஆரம்பிக்குது, அதன் பிறகுதான் தெரிகிறது ப்ரியா ஏற்கனவே நிச்சயம் ஆன பெண் என்று. இதன் பிறகு, நிச்சயதார்த்தாம் ஆன பெண்ணை காதலிப்பதுதான் தமிழ் சினிமா ஹீரோக்களின் டிரெண்ட் என்ற பாணியில், சிவாவும் தனது காதலை தொடர, அவருடைய காதலை பிரியா ஆனந்த் ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை. 

 

படத்தின் முதல்பாதி ரசிக்கும் படியாக இருந்தாலும், இரண்டாம் பாதி ஜவ்வாக இழுக்கிறது. 

 

நாயகன் சிவா, மற்ற படங்களை காட்டிலும், இந்த படத்தில் நடிக்க முயற்சி செய்திருந்தும், அந்த அளவுக்கு எடுபடவில்லை.  

 

லண்டன் வாழ் தமிழ் பெண்ணாக வரும் பிரியா ஆனந்த் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.  

 

வீட்டு புரோக்கராக வரும் சந்தானம். பழைய காமெடி வசனங்களே பயன்படுத்தி இருக்கிறார். மேலும் குணச்சித்திரத்திலும் தன் பங்களிப்பை செய்திருக்கிறார் சந்தானம். இந்த படத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

 

நாசர், ஊர்வசி, ரேணுகா, ராகுல் என நடிகர்கள் பட்டியல் நீண்டுகொண்டே போனாலும், பெரிதாக சொல்லும்படி இல்லை.

 

அனிருத் இசையில் பாடல்கள் ஹிட் ஆகியிருப்பதால் பரவாயில்லை.

 

மொத்தத்தில் "வணக்கம் சென்னை" பிரியா ஆனந்துக்காக ஒரு முறை பார்க்கலாம்...... 

by Swathi   on 12 Oct 2013  0 Comments
Tags: வணக்கம் சென்னை   திரை விமர்சனம்   வணக்கம்   சென்னை   சிவா   பிரியா ஆனந்த்   Vanakkam Chennai  
 தொடர்புடையவை-Related Articles
”சென்னையில் திருவையாறு” - மார்கழியும் இசையும்  டிசம்பர் 18 முதல் 25 வரை ”சென்னையில் திருவையாறு” - மார்கழியும் இசையும் டிசம்பர் 18 முதல் 25 வரை
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
குற்றம் கடிதல் திரை விமர்சனம் !! குற்றம் கடிதல் திரை விமர்சனம் !!
49 ஓ திரை விமர்சனம் !! 49 ஓ திரை விமர்சனம் !!
யட்சன் திரை விமர்சனம் யட்சன் திரை விமர்சனம்
சண்டி வீரன் திரை விமர்சனம் !! சண்டி வீரன் திரை விமர்சனம் !!
லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !! லாரன்ஸ் படத்தில் ஜோதிகா !!
சகலகலா வல்லவன்(அப்பாடக்கர்) திரைவிமர்சனம் !! சகலகலா வல்லவன்(அப்பாடக்கர்) திரைவிமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.