LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பாரதியார் கவிதைகள்

பல்வகைப் பாடல்கள் - தனிப் பாடல்கள் பகுதி - 1

 

1. காலைப்பொழுது
 
காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே.
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்;
பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னற்றே.
தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்னப் பருந்தினுக்கு மாலை யிட்டுச் சென்றதுவே.
தென்னை மரக்கிளைமேற் சிந்தனையோ டோர் காகம்
னவன்னமுற வீற்றிருந்து வானைமுத்த மிட்டதுவே.
தென்னைப் பசுங் கீற்றைக் கொத்திச் சிறு காக்கை
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே.
வன்னச் சுடர் மிகுந்த வானகத்தே தென் திசையில்
கன்னங் கருங்காகக் கூட்டம்வரக் கண்ட தங்கே.
கூட்டத்தைக் கண்டஃது கும்பிட்டே தன்னருகோர்
பாட்டுக் குருவிதனைப் பார்த்து நகைத்ததுவே.
சின்னக் குருவி சிரிப்புடனே வந்தாங்கு
கன்னங் கருங்காக்கை கண்ணெதிரே யோர்கிளைமேல்
வீற்றிருந்தேகிக் கிக்கீ;காக்காய் நீ விண்ணிடையே
போற்றியெதை நோக்குகிறாய்? கூட்டமங்குப் போவ தென்னே?:
என்றவுட னே காக்கை-என் தோழா! நீ கேளாய்,
மன்றுதனைக் கண்டே மனமகிழ்ந்து போற்றுகிறேன்.
என்றுசொல்லிக் காக்கை இருக்கையிலே ஆங்கணோர்
மின்திகழும் பச்சைக் கிளிவந்து வீற்றிருந்தே.
நட்புக் குருவியே ஞாயிற்றிளவெயிலில்
கட்புலனுக் கெல்லாம் களியாகத் தோன்றுகையில்,
நும்மை மகிழ்ச்சிடன் நோக்கியிங்கு வந்திட்டேன்!
அம்மவோ!காகப் பெருங்கூட்ட மஃதென்னே?
என்று வினவக் குருவிதான் இஃதுரைக்கும்;-
நன்றுநீ கேட்டாய்,பசுங்கிளியே!நானுமிங்கு.
மற்றதனை யோர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன்;
கற்றறிந்த காக்காய்,கழறுக நீ! என்றதுவே.
அப்போது காக்கை,அருமையுள்ள தோழர்களே!
செப்புவேன் கேளீர்,சில நாளாக் காக்கையுள்ளே.
நேர்ந்த புதுமைகளை நீர்கேட்டறியீ ரோ?
சார்ந்துநின்ற கூட்டமங்கு சாலையின்மேற் கண்டீரே?
மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே?
கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்;
ஏழுநாள் முன்னே இறைமகுடந் தான் புனைந்தான்;
வாழியவன் எங்கள் வருத்தமெல்லாம் போக்கிவிட்டான்.
சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை;துன்பமில்லை;
போற்றற் குரியான் புதுமன்னன்,காணீரோ?
என்றுரைத்துக் காக்கை இருக்கையிலே அன்னமொன்று
தென்திசையி னின்று சிரிப்புடனே வந்ததங்கே.
அன்னமந்தத் தென்னை யருகினிலோர் மாடமிசை
வன்னமுற வீற்றிருந்து,-வாழ்க,துணைவரே!
காலை யிளவெயிலிற் காண்பதெலாம் இன்பமன்றோ?
சால நுமைக் கண்டுகளித்தேன் சருவிநீர்,
ஏதுரைகள் பேசி யிருக்கின்றீர்? என்றிடவே
போதமுள்ள காக்கை புகன்றதந்தச் செய்தியெல்லாம்.
அன்னமிது கேட்டு மகிழ்ந்துரைக்கும்;-ஆங் காணும்!
மன்னர் அறம்புரிந்தால்,வையமெல்லாம் மாண்புபெறும்.
ஒற்றுமையால் மேன்மையுண்டாம்; ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே?
என்று சொல்லி அன்னம் பறந்தாங்கே ஏகிற்றால்;
மன்று கலைந்து மறைந்தனவப் புட்களெல்லாம்.
காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்களிதை;
ஞால மறிந்திடவே நாங்களிதைப் பாட்டிசைத் தோம்.
2. அந்திப் பொழுது
காவென்று கத்திடுங் காக்கை-என்தன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை,
மேவிப் பலகிளை மீதில்-இங்கு
விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே,
கூவித் திரியும் சிலவே;-சில
கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்.
தேவி பராசக்தி யன்னை -வின்ணிற்
செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள். 1
தென்னை மரக்கிளை மீதில்-அங்கோர்
செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி-அது
ஜிவ் வென்று விண்ணிடை யூசலிட் டேகுட்.
மன்னப் பருந்தொ ரிரண்டு-மெல்ல
வட்ட மிட்டுப்பின் நெடுந்தொலை போகும்,
பின்னர் தெருவிலார் சேவல்-அதன்
பேச்சினி லேசக்தி வேல் என்று கூவும். 2
செவ்வொளி வானில் மறைந்தே-இளந்
தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
இவ்வள வான பொழுதில் அவள்
ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது,
கொவ்வை யிதழ்நகை வீச,-விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தான்.
செவ்விது,செவ்விது,பெண்மை!-ஆ!
செவ்விது,செவ்விது,செவ்விது காதல்! 3
காதலி னாலுயிர் தோன்றும்;-இங்கு
காதலி னாலுயிர் வீரத்தி லேறும்;
காலி னாலறி வெய்தும்-இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
ஆதலி னாலவள் கையைப் -பற்றி
அற்புத மென்றிரு கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன்,-அவள்
வீணைக் குரலிலோப் பாட்டிசைத் திட்டாள். 4
காதலியின் பாட்டு
கோல மிட்டு விளக்கினை யேற்றிக்
கூடி நின்று பராசக்தி முன்னே
ஓல மிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்;
ஞால முற்றும் பராசக்தி தோற்றம்
ஞான மென்ற விளக்கினை யேற்றிக்
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்,
காத லென்பதொர் கோயிலின் கண்ணே. 5
3. நிலாவும் வான்மீனும் காற்றும்
(மனத்தை வாழ்த்துதல்)
 
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ!  1
தாரகை யென்ற மணித்திரள் யாவையும்
சார்ந்திடப் போமனமே,
சரச் சுவையதி லுறி வருமதில்
இன்புறு வாய்மனமே!
சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத்
திங்களையுஞ் சமைத்தே
ஓரழ காக விழுங்கிடும் உள்ளத்தை
ஒப்பதொர் செல்வமுண்டா  2
பன்றியைப் போலிங்கு மண்ணிடைச் சேற்றில்
படுத்துப் புரளாதே
வென்றியை நாடியிவ் வானத்தில் ஓட
விரும்பி விரைந்திடுமே;
முன்றலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று
மூன்றுலகுஞ் சூழ்ந்தே
நன்று திரியும்வி மானத்தைப் போலொரு
நல்ல மனம் படைத்தோம்.  3
தென்னையின் கீற்றுச் சலசலச வென்றிடச்
செய்துவருங் காற்றே!
உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமொர்
உள்ளம் படைத்துவிட்டோம்.
சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு
சேர்ந்திடு நற் காற்றே!
மின்னல் விளக்கிற்கு வானகங் கொட்டுமிவ்
வெட்டொலி யேன் கொணர்ந்தாய்? 4
மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும்
வானவன் கொண்டுவந்தான்;
பண்ணி விசைத்தவ வொலிக ளனைத்தையும்
பாடி மகிழ்ந்திடுவோம்.
நண்ணி வருமணி யோசையும்,பின்னங்கு
நாய்கள் குலைப்பதுவும்,
எண்ணுமுன்னேஅன்னக் காவடிப் பிச்சையென்
றேங்கிடு வான் குரலும்,
வீதிக் கதவை அடைப்பதும் கீழ்த்திசை
விம்மிடும் சங்கொலியும்,
வாதுகள் பேசிடு மாந்தர் குரலும்
மதலை யழுங் குரலும்,
ஏதெது கொண்டு வருகுது காற்றிவை
எண்ணி லகப்படுமோ?
சீதக் கதிர்மதி மேற்சென்று பாய்ந்தங்கு
தேனுண்ணு வாய்,மனமே!  6
4. மழை
திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட 1
வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!  2
அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்! 3
5. புயற் காற்று
(நள வருடம் காத்திகை மாதம் 8ம் தேதி புதன் இரவு ஒரு கணவனும் மனைவியும்)
மனைவி: காற்றடிக்குது,கடல்குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகமே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது, பள்ளியிலே.
கணவன்: வானம் சினந்தது;வையம் நடுங்குது;
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக்குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்.
மனைவி:நேற்றிருந் தோம்அந்த வீட்டினிலே,இந்த
நேரமிருந்தால் என்படுவோம்?
காற்றெனவந்தது கூற்றமிங்கே,நம்மைக்
காத்ததுதெய்வ வலிமையன்றோ?

1. காலைப்பொழுது காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே.
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்;பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னற்றே.
தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் போய்மன்னப் பருந்தினுக்கு மாலை யிட்டுச் சென்றதுவே.
தென்னை மரக்கிளைமேற் சிந்தனையோ டோர் காகம்னவன்னமுற வீற்றிருந்து வானைமுத்த மிட்டதுவே.
தென்னைப் பசுங் கீற்றைக் கொத்திச் சிறு காக்கைமின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே.
வன்னச் சுடர் மிகுந்த வானகத்தே தென் திசையில்கன்னங் கருங்காகக் கூட்டம்வரக் கண்ட தங்கே.
கூட்டத்தைக் கண்டஃது கும்பிட்டே தன்னருகோர்பாட்டுக் குருவிதனைப் பார்த்து நகைத்ததுவே.
சின்னக் குருவி சிரிப்புடனே வந்தாங்குகன்னங் கருங்காக்கை கண்ணெதிரே யோர்கிளைமேல்
வீற்றிருந்தேகிக் கிக்கீ;காக்காய் நீ விண்ணிடையேபோற்றியெதை நோக்குகிறாய்? கூட்டமங்குப் போவ தென்னே?:
என்றவுட னே காக்கை-என் தோழா! நீ கேளாய்,மன்றுதனைக் கண்டே மனமகிழ்ந்து போற்றுகிறேன்.
என்றுசொல்லிக் காக்கை இருக்கையிலே ஆங்கணோர்மின்திகழும் பச்சைக் கிளிவந்து வீற்றிருந்தே.
நட்புக் குருவியே ஞாயிற்றிளவெயிலில்கட்புலனுக் கெல்லாம் களியாகத் தோன்றுகையில்,
நும்மை மகிழ்ச்சிடன் நோக்கியிங்கு வந்திட்டேன்!அம்மவோ!காகப் பெருங்கூட்ட மஃதென்னே?
என்று வினவக் குருவிதான் இஃதுரைக்கும்;-நன்றுநீ கேட்டாய்,பசுங்கிளியே!நானுமிங்கு.
மற்றதனை யோர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன்;கற்றறிந்த காக்காய்,கழறுக நீ! என்றதுவே.
அப்போது காக்கை,அருமையுள்ள தோழர்களே!செப்புவேன் கேளீர்,சில நாளாக் காக்கையுள்ளே.
நேர்ந்த புதுமைகளை நீர்கேட்டறியீ ரோ?சார்ந்துநின்ற கூட்டமங்கு சாலையின்மேற் கண்டீரே?
மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே?கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்;
ஏழுநாள் முன்னே இறைமகுடந் தான் புனைந்தான்;வாழியவன் எங்கள் வருத்தமெல்லாம் போக்கிவிட்டான்.
சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை;துன்பமில்லை;போற்றற் குரியான் புதுமன்னன்,காணீரோ?
என்றுரைத்துக் காக்கை இருக்கையிலே அன்னமொன்றுதென்திசையி னின்று சிரிப்புடனே வந்ததங்கே.
அன்னமந்தத் தென்னை யருகினிலோர் மாடமிசைவன்னமுற வீற்றிருந்து,-வாழ்க,துணைவரே!
காலை யிளவெயிலிற் காண்பதெலாம் இன்பமன்றோ?சால நுமைக் கண்டுகளித்தேன் சருவிநீர்,
ஏதுரைகள் பேசி யிருக்கின்றீர்? என்றிடவேபோதமுள்ள காக்கை புகன்றதந்தச் செய்தியெல்லாம்.
அன்னமிது கேட்டு மகிழ்ந்துரைக்கும்;-ஆங் காணும்!மன்னர் அறம்புரிந்தால்,வையமெல்லாம் மாண்புபெறும்.
ஒற்றுமையால் மேன்மையுண்டாம்; ஒன்றையொன்று துன்பிழைத்தல்குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே?
என்று சொல்லி அன்னம் பறந்தாங்கே ஏகிற்றால்;மன்று கலைந்து மறைந்தனவப் புட்களெல்லாம்.
காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்களிதை;ஞால மறிந்திடவே நாங்களிதைப் பாட்டிசைத் தோம்.
2. அந்திப் பொழுது
காவென்று கத்திடுங் காக்கை-என்தன்கண்ணுக் கினிய கருநிறக் காக்கை,மேவிப் பலகிளை மீதில்-இங்குவிண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே,கூவித் திரியும் சிலவே;-சிலகூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்.தேவி பராசக்தி யன்னை -வின்ணிற்செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள். 1
தென்னை மரக்கிளை மீதில்-அங்கோர்செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்சின்னஞ் சிறிய குருவி-அதுஜிவ் வென்று விண்ணிடை யூசலிட் டேகுட்.மன்னப் பருந்தொ ரிரண்டு-மெல்லவட்ட மிட்டுப்பின் நெடுந்தொலை போகும்,பின்னர் தெருவிலார் சேவல்-அதன்பேச்சினி லேசக்தி வேல் என்று கூவும். 2
செவ்வொளி வானில் மறைந்தே-இளந்தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்!இவ்வள வான பொழுதில் அவள்ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது,கொவ்வை யிதழ்நகை வீச,-விழிக்கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தான்.செவ்விது,செவ்விது,பெண்மை!-ஆ!செவ்விது,செவ்விது,செவ்விது காதல்! 3
காதலி னாலுயிர் தோன்றும்;-இங்குகாதலி னாலுயிர் வீரத்தி லேறும்;காலி னாலறி வெய்தும்-இங்குகாதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;ஆதலி னாலவள் கையைப் -பற்றிஅற்புத மென்றிரு கண்ணிடை யொற்றிவேதனை யின்றி இருந்தேன்,-அவள்வீணைக் குரலிலோப் பாட்டிசைத் திட்டாள். 4
காதலியின் பாட்டு
கோல மிட்டு விளக்கினை யேற்றிக்கூடி நின்று பராசக்தி முன்னேஓல மிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்;ஞால முற்றும் பராசக்தி தோற்றம்ஞான மென்ற விளக்கினை யேற்றிக்கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்,காத லென்பதொர் கோயிலின் கண்ணே. 5
3. நிலாவும் வான்மீனும் காற்றும்(மனத்தை வாழ்த்துதல்) நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்நேர்பட வைத்தாங்கேகுலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொருகோலவெறி படைத்தோம்;உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்ஓட்டி மகிழ்ந்திடுவோம்;பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டுபாடுவதும் வியப்போ!  1
தாரகை யென்ற மணித்திரள் யாவையும்சார்ந்திடப் போமனமே,சரச் சுவையதி லுறி வருமதில்இன்புறு வாய்மனமே!சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத்திங்களையுஞ் சமைத்தேஓரழ காக விழுங்கிடும் உள்ளத்தைஒப்பதொர் செல்வமுண்டா  2
பன்றியைப் போலிங்கு மண்ணிடைச் சேற்றில்படுத்துப் புரளாதேவென்றியை நாடியிவ் வானத்தில் ஓடவிரும்பி விரைந்திடுமே;முன்றலில் ஓடுமோர் வண்டியைப் போலன்றுமூன்றுலகுஞ் சூழ்ந்தேநன்று திரியும்வி மானத்தைப் போலொருநல்ல மனம் படைத்தோம்.  3
தென்னையின் கீற்றுச் சலசலச வென்றிடச்செய்துவருங் காற்றே!உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமொர்உள்ளம் படைத்துவிட்டோம்.சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்குசேர்ந்திடு நற் காற்றே!மின்னல் விளக்கிற்கு வானகங் கொட்டுமிவ்வெட்டொலி யேன் கொணர்ந்தாய்? 4
மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும்வானவன் கொண்டுவந்தான்;பண்ணி விசைத்தவ வொலிக ளனைத்தையும்பாடி மகிழ்ந்திடுவோம்.நண்ணி வருமணி யோசையும்,பின்னங்குநாய்கள் குலைப்பதுவும்,எண்ணுமுன்னேஅன்னக் காவடிப் பிச்சையென்றேங்கிடு வான் குரலும்,வீதிக் கதவை அடைப்பதும் கீழ்த்திசைவிம்மிடும் சங்கொலியும்,வாதுகள் பேசிடு மாந்தர் குரலும்மதலை யழுங் குரலும்,ஏதெது கொண்டு வருகுது காற்றிவைஎண்ணி லகப்படுமோ?சீதக் கதிர்மதி மேற்சென்று பாய்ந்தங்குதேனுண்ணு வாய்,மனமே!  6
4. மழை
திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிடபக்க மலைகள் உடைந்து-வெள்ளம்பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிடதக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டுதக்கை யடிக்குது காற்று-தக்கத்தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட 1
வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;கொட்டி யிடிக்குது மேகம்;-கூகூவென்று விண்ணைக் குடையுது காற்று;சட்டச்சட சட்டச்சட டட்டா-என்றுதாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;எட்டுத் திசையும் இடிய-மழைஎங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!  2
அண்டம் குலுங்குது,தம்பி!-தலைஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசைவெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்செண்டு புடைத்திடு கின்றார்;-என்னதெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்! 3
5. புயற் காற்று
(நள வருடம் காத்திகை மாதம் 8ம் தேதி புதன் இரவு ஒரு கணவனும் மனைவியும்)
மனைவி: காற்றடிக்குது,கடல்குமுறுதுகண்ணை விழிப்பாய் நாயகமே!தூற்றல் கதவு சாளரமெல்லாம்தொளைத்தடிக்குது, பள்ளியிலே.
கணவன்: வானம் சினந்தது;வையம் நடுங்குது;வாழி பராசக்தி காத்திடவே!தீனக்குழந்தைகள் துன்பப்படாதிங்குதேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்.
மனைவி:நேற்றிருந் தோம்அந்த வீட்டினிலே,இந்தநேரமிருந்தால் என்படுவோம்?காற்றெனவந்தது கூற்றமிங்கே,நம்மைக்காத்ததுதெய்வ வலிமையன்றோ?

by C.Malarvizhi   on 22 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.