LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்லாடம்

வரும்புனம் கண்டு வருந்தல்

உள்ளிருந் தெழுந்து புறம்புநின் றெரியும்
அளவாத் திருமணி அளித்த லானும்
கொலைமுதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து
கொழுஞ்சினை மிடைந்து குளிரொடு பொதுளிய
நெடுமரத்து இளங்கா நிலைத்த லானும்     (5)

 

பாசடை உம்பர் நெடுஞ்சுனை விரிந்த
பேரிதழ்த் தாமரை பெருக லானும்
நெடுவிசும்பு அணவும் பெருமதி தாங்கி
உடையா அமுதம் உறைத லானும்
இளமையும் தொங்கலும் இன்பமும் ஒருகால்     (10)

 

வாடாத் தேவர்கள் மணத்த லானும்
நூறுடை மகத்தில் பேறுகெமண் டிருந்த
புரந்தரன் போலும் பொன்எயில் எறிந்த
மணிவேற் குமரன் திருவளர் குன்றம்
பேரணி உடுத்த பெருநகர்க் கூடல்     (15)

 

கோயில்கொண் டிருந்த குணப்பெருங் குன்றம்
அருந்தவக் கண்ணினோடு இருந்தமா முனிபால்
பேரிருள் மாயைப் பெண்மகவு இரக்க
உவர்முதல் கிடந்த சுவையேழ் அமைத்துக்
கொடுத்தமெய்ப் பிண்டம் குறியுடன் தோன்றிய     (20)

 

எழுநீர்ச் சகரர்கள் ஏழ்அணி நின்று
மண்புக மூழ்கிய வான்பரி பிணிக்க
பல்முக விளக்கின் பரிதியில் தோட்டிய
வேலைக் குண்டகழ் வயிறலைத் தெழுந்த
பெருங்கார்க் கருங்கடு அரும்பிய மிடற்றோன்     (25)

 

எறிந்துவீழ் அருவியும் எரிமணி ஈட்டமும்
உள்ளுதோறு உள்ளுதோறு உள்நா அமுதுறைக்கும்
திருமுத் தமிழும் பெருகுதென் மலையத்து
ஆரப் பொதும்பரி அடைகுளிர் சாரல்
சுரும்புடன் விரிந்த துணைமலர்க் கொடியே     (30)

 

விண்விரித்து ஒடுக்கும் இரவிவெண் கவிகைக்கு
இட்டுறை காம்பென விட்டெழு காம்பே
மரகதம் சினைத்த சிறைமயிற் குலமே!
நீலப் போதும் பேதையும் விழித்த
பொறிஉடல் உழையே! எறிபரல் மணியே!     (35)

 

பாசிழைப் பட்டு நூல்கழி பரப்பிய
கிளைவாய்க் கிளைத்த வளைவாய்க் கிளியே!
மைந்தர்கண் சென்று மாதர்உள் தழைத்த
பொழிமதுப் புதுமலர்ப் போர்க்குடைச் சுரும்பே!
வெறிமுதிர் செம்மலர் முறிமுகம் கொடுக்கும்     (40)

 

சந்தனப் பொதும்பர்த் தழைசினைப் பொழிலே
கொள்ளைஅம் சுகமும் குருவியும் கடிய
இருகால் கவணிற்கு எறிமணி சுமந்த
நெடுங்கால் குற்றுழி நிழல்வைப்பு இதணே!
நெருநல் கண்டஎற்கு உதவுழி இன்பம்     (45)

 

இற்றையின் கரந்த இருள்மனம் என்னை?
இவண்நிற்க வைத்த ஏலாக் கடுங்கண்
கொடுத்துண் டவர்பின் கரந்தமை கடுக்கும்
ஈங்கிவை கிடக்க என்நிழல் இரும்புனத்து
இருந்தொளிர் அருந்தேன் இலதால் நீரும்     (50)

 

நின்புனம் அல்லஎன்று என்புலம் வெளிப்பட
அறைதல் வேண்டும் அப்புனம் நீரேல்
முன்னம் கண்டவன் அன்றென்று
உன்னா உதவுதல் உயர்ந்தோர் கடனே.     (54)

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.