சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ள படம் வேதாளம். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
கடந்த தீபாவளி அன்று வெளியான இந்த படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் ரீதியிலும் சாதனை நிகழ்த்தியிருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படம், முதல் நாள் 15.3 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ச்சியாக மழை பெய்து வந்தாலும் வசூல் பெரியளவில் குறையவில்லை. இதனால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். இப்படத்தை வாங்கிய பல விநியோகஸ்தர்கள் தற்போதே லாபம் அடைந்திருக்கிறார்கள்.
முதல் 6 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ.60 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 8 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்ததாக கூறியுள்ளனர். இப்படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ் இதனை தெரிவித்து உள்ளார்.
|