LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

வெஜிடபிள் கோப்தா (Vegetable Kofta)

தேவையானவை:


உருளைக்கிழங்கு -2

பச்சைப்பட்டாணி - அரை கப்

கேரட் -2

பெரிய வெங்காயம் - ஒன்று

கார்ன் ப்ளோர் மாவு : 2 டேபிள் ஸ்பூன்

பிரெட் துண்டுகள் - 2

மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன்

கரம்மசாலா -1 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை - அரை கப்

மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


கிரேவி தயாரிக்க தேவையானவை:


சின்ன வெங்காயம் -10

தக்காளி -5

இஞ்சி, பூண்டு, விழுது - 2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன்

கரம்மசாலா தூள் -1 டீஸ்பூன்

நெய் -1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:


1.உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பட்டாணியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

2.அதனுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதைத் தொடர்ந்து வெந்த காய்கறிகள் கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். இத்துடன் உதிர்த்த பிரெட், கார்ன்ப்ளார் சேர்த்து மசித்தாற்போல் கிளறி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


கிரேவி தயாரிக்க:


1.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளியை மிக்சியில் அரைத்து கூழாக்கி இதில் சேர்க்கவும். அதோடு தேவைக்கு உப்பு சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

2.ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும். பரிமாறும்போது கிரேவியை சற்று சூடாக்கி கோப்தாக்களை சேர்த்து பரிமாறுங்கள். அருமையான சுவையுடன் வெஜிடபிள் கோப்தா தயார்.

Vegetable Koptha

INGREDIENTS for Vegetable Koptha:

Potato-2

Green peas-1/2 cup

Carrot-2

Big Onion-1

Corn Flour -2tbsp

Bread slice-2

Chilly Powder-11/2tbsp

Garam Masala-1tsp

Ginger, Garlic Paste-1tsp

Coriander Leaves-1/2cup

Turmeric Powder-1/4tsp

Salt-Enough need

INGREDIENTS to make Gravy:

Small Onion-10

Tomato-5

Ginger, Garlic Paste-2tsp

Chilly Powder-11/2tsp

Garam Masala-1tsp

Ghee-1tbsp

PROCEDURE to make Vegetable Koptha:

1. Boil potato, carrot, peas and mash them well. Chop finely the onion, heat oil in a pan and add onion, ginger, garlic paste and stir well.

2. Then add chilly powder, garam masala, turmeric powder and fry until the fresh smell out. Then add boiled vegetables, coriander leaves, salt and stir them well. Then add bread crumbs, corn flour and stir them well. Then make small ping pong ball sized kopthas and deep fry them.

For Gravy:

1. Chop the onion, heat ghee in a pan and add chopped onion, ginger garlic paste, chilly powder and fry till the fresh smell out. Grind finely the tomatoes and add together with ingredients. Then add salt and boil them in low flame.

2. Turn off the stove after 5minutes.Add the kopthas in hot gravy just before serving.

by nandhini   on 17 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.