தேவையானவை :
வெங்காயம் - 1 துருவிய வெள்ளரிக்காய் - 1 மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன் பாலேடு - 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 25 கிராம் மிளகுத்தூள் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு தண்ணீர் -சிறிதளவு
செய்முறை:
1.முதலில் வெங்காயத்தை 2 நிமிடம் வரை வெண்ணெய்யில் வதக்க வேண்டும்.
2.பின்பு வெள்ளரிக்காயை அதில் போட்டு 2 நிமிடம் வரை வதக்க வேண்டும். பாலையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
3.கடைசியாக தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
4.உப்பு, மிளகுத்தூள், சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
|