LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிதம்பரச் செய்யுட்கோவை

வெண்பா விகற்பம்

பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுக
ஆங்கொன்றைக் கண்ணி யவர்.     1
அறனன்று மாதவ னென்ப துலகெந்தை
தாள்காணா னாணுக் கொள.     2
கண்ணுதல் காட்சி கிடைத்த விழிக்கில்லை
வெல்கூற்றின் றோற்றங் கொளல்.    3
திருமுடியிற் கண்ணியு மாலையும் பாம்பு
திருமார்பி லாரமும் பாம்பு - பெருமான்
திருவரையிற் கட்டிய கச்சையும் பாம்பு
பொருபுயத்திற் கங்கணமும் பாம்பு.    4
கறையரவுக் கஞ்சுறா தஞ்சுறூஉந் திங்கள்
இறைவி நறுநுதலைக் கண்டு - பிறைமுடியோன்
கைம்மா னடமுவந்த காற்புலிக்கஞ் சாதஞ்சும்
அம்மான் விழிமானைக் கண்டு.    5
வணங்கு சிறுமருங்குற் பேரமர்க்கண் மாதர்
அணங்கு புரிவ தறமாற் - பிணங்கி
நிணங்காலு முத்தலைவே னீள்சடையெங் கோமாற்
கிணங்காது போலு மிரவு.     6
வரத்திற் பிறப்பொன் றருள்கெனினும் வள்ளல்
கரத்திற் கபாலத்தைக் காணூப் - புரத்தை
இரும்புண்ட ரீகபுரத் தெய்தினார்க் கீயான்
அரும்புணட ரீகத் தயன்.    7
கூற்றங் குமைத்த குரைகழற்கால் கும்பிட்டுத்
தோற்றந் துடைத்தேந் துடைத்தேமாற் - சீற்றஞ்செய்
ஏற்றினான் றில்லை யிடத்தினா னென்னினியாம்
போற்றினா னல்கும் பொருள்.    8
நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.    9
வாழி திருமன்றங் கண்ட மலர்க்கண்கள்
வாழி பெருமான் புகழ்கேட்ட வார்செவிகள்
வாழி யவனை வணங்கு முடிச்சென்னி
வாழியவன் சீர்பாடும் வாய்.     10
பூந்தண் பசுந்துழாய்ப் போது நறாவிரி
தேந்தண் டிரடிண்டோட் டேவற்குந் தேவிக்கும்
காந்தன் பதமலர்கள் காமுற்றார் காமுறார்
பாந்தண் முடிச்சூடும் பூ.     11
புனலழுவம் புக்குடைந்தோர் தாளூன்றி நின்று
வனசங்காள் செய்தவநீர் வாழியரோ வாழி
பொருவிடையோன் றெய்வப் புலியூரை யொப்பாள்
திருமுகத்துக் கொப்பச் செயின்.    12
ஆதி முதலுணர்ந்தியா மன்புசெயப் பெற்றவா
ஓஒ பெரிது மரிதே யௌிதேயோ
வேதந் துறைசெய்தான் மெய்துணியான் கைதுணிந்தான்
பேதுற்றும் வெஃகேம் பிற.     13
பொன்மன்றம் பொற்றா மரையொக்கு மம்மன்றிற்
செம்ம றிருமேனி தேனொக்கு மத்தேனை
உண்டு களிக்குங் களிவண்டை யொக்குமே
எம்பெரு மாட்டி விழி.     14
ஆடகச் செம்பொ னணிமன் றிடங்கொண்ட
பாடகச் சீறடியாள் பாகத்தான் - சூடகக்கைக்
கங்கையாள் கேள்வன் கழறொமூஉக் கைகூப்பி
நின்றிறைஞ்சச் சென்றிறைஞ்சுங் கூற்று.    15
காதன் மகளிர் கலக்கக் கலக்குண்டு
பேதுற்றார் நெஞ்சும் பிழைத்தகன்றார் நன்னெஞ்சும்
போதம் படரும் புலியூரே - தாதுண்டு
வண்டுறங்கு நீள்சடையோன் வைப்பு.    16
காம ருயிர்செகுக்குங் கண்ணொன்றே - காமருசீர்
மாதர் நலனழிக்குங் கண்ணொன்றே - மாதருக்
கின்னா விரவொழிக்குங் கண்ணொன்றே - இந்நிலத்தில்
தன்னே ரிலாதான் றனக்கு.    17
செக்கர்ச் சடையிற் பசுங்குழவி வெண்டிங்காள்
முக்க ணொருவற்கு நின்னோ டிருசுடரும்
ஒக்க விழித்தலா லுய்ந்தே மொருநீயே
அக்க ணொருமூன்று மாயின்மற் றுய்வுண்டே
மைக்கண் மடவா ருயிர்க்கு.    18
பொன்புரிந்த செஞ்சடைக்கு வெள்ளிப் புரிபுரிக்கும்
வெண்டிங்கட் கண்ணியான் வெல்கொடியு மானேறே
அங்கவன்ற னூர்தியுமற் றவ்வேறே யவ்வேற்றின்
கண்டத்திற் கட்டுங் கதிமணிக்கிங் கென்கொலோ
பைந்தொடியார் செய்த பகை.     19
கருந்தாது கொல்லுங் கருங்கைத்திண் கொல்லர்
வருந்தா தியன்றதொரு வல்விலங்கு பூண்டு
திருந்தாதார் முன்றிறொறுஞ் நென்றுசிலர் தூங்க
இருந்தேங் களிதூங்கி யாமேமற் றம்ம
அருந்தா தலர்தில்லை யம்பத்திற் றூங்கும்
பெருந்தேன் முகந்துண்ணப் பெற்று.     20
வின்மதனை வென்ற தலர்விழியே யொன்னார்தம்
பொன்னெயி றீமடுத்த தின்னகையே பூமிசையோன்
தார்முடி கொய்தது கூருகிரே யாருயிருண்
கூற்றுயி ருண்ட தடித்தலமே யேற்றான்
பரசும் பினாகமுஞ் சூலமு மென்னே
கரமலர் சேப்பக் கொளல்.     21
வானே நிலனே கனலே மறிபுனலே
ஊனேயவ் வூனி லுயிரே யுயிர்த்துணையே
ஆனேறு மேறே யரசே யருட்கடலே
தேனே யமுதே யளியோங்கள் செல்வமே
யானே புலனு நலனு மிலனன்றே
ஆனாலு மென்போன்மற் றார்பெற்றா ரம்பலத்துள்
மாநாட கங்காணும் வாழ்வு.     22
வண்டுஞ் சுரும்பு ஞீமிறுங் குடைந்தார்ப்பத்
தண்டே னிறைக்கு மிதழி நறுங்கண்ணி
எண்டோன்முக் கண்ணா னிமயம் புனைமன்றில்
அண்டர்கள் கண்களிப்பத் தொண்ட ரகங்குளிர்ப்ப
நின்றாடு மாடற் குருகா திருத்திரால்
வன்றிண் மறலி புடைத்துக் கொடிறுடைக்கும்
அன்று முருகீர்கொல் லாம்.    23
கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை
செங்குவளை பூத்தாள் செய்லென்னே - எங்கோமான்
பங்குற்றுந் தீரா பசப்பு.     24
கம்பக் கரடக் களிற்றின் கபாயணிந்த
அம்பொற் புயத்தாற் கமைந்ததால் - அம்பை
முலையானைக் கோடணிந்த மார்பு.     25
போற்றுமின் போற்றுமின் போற்றுமின் போற்றுமின்
கூற்றங் குமைக்க வருமுன் னமரங்காள்
ஏற்றுவந்தான் பொற்றா ளிணை.    26
உம்பர் பெருமாற் கொளிர்சடிலம் பொன்பூத்த
தன்பொற் புயம்வேட்டேந் தார்முலையும் பொன்பூத்த
பொன்பூத்த பூங்கொன்றை சூழ்ந்து.    27
கருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்ற னென்னும்
மழுவலத்தன் மானிடத்த னென்னும் - முழுவலத்த
மன்றுடையான் றார்வேட்ட மான்.     28
செம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத்
தம்பொன் மேருவுக் கடிமுடி யின்றே.    29
கம்பைமாநதி யின்கரைச்சிறு கன்னிபார முலைத்தழும்பணி
உம்பர்கோன்விடை யொன்றுல கேழு முண்டதுவே.    30
முன்புல கீன்ற முகிண்முலைக் கன்னியோ
டின்புறும் யோகி யெழுபுவிக் கரசே.    31
பின்றாழ் நறுங்கூந்தற் பிடிதழீஇ மால்யானைக்
கன்றீனு முக்கட் களிறு.     32
கனக மார் கவின்செய் மன்றில்
அனகநாட கற்கெம் மன்னை
மனைவிதாய் தங்கை மகள்.    33
அம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே
கொம்பே றுடையான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வம்பே யிறந்து விடல். ........(1)

வாணேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே
நீணாகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வீணே யிறந்து விடல். ........(2)

கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே
ஆளாக வாண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்
வாளா விறந்து விடல். ........(3)     34
பரசிருக்குந் தமிழ்மூவர் பாட்டிருக்குந் திருமன்றிற் பரசொன் றேந்தி
அரசிருக்கும் பெருமானார்க் காட்செய்யா ரென்செய்வார்
முரசிருக்கும் படைநமனார் முன்னாகு மந்நாளே.    35
படர்தரும்வெவ் வினைத்தொடர்பாற் பவத்தொடர்பப்
    பவத்தொடர்பாற் படரா நிற்கும்
    வடலரும்வெவ் வினைத்தொடர்பவ் வினைத்தொடர்புக்
    கொழிபுண்டே வினையேற் கம்மா
    இடர்பெரிது முடையேன்மற் றென்செய்கே
    னென்செய்கேன்
    அடலரவ மரைக்கசைத்த வடிகளோ
    வடிகளோ.     36
கூற்றிருக்கு மடலாழிக் குரிசின்முத லோரிறைஞ்சக் கொழுந்தேன் பில்கி
ஊற்றிருக்குந் தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்மன்றத் தொருதா ளூன்றி
வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத்
துண்டமா டப்புலித் தோலுமா டப்பகி
ரண்டமா டக்குலைந் தகிலமா டக்கருங்
கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக்
கண்டனா டுந்திறங் கான்மினோ காண்மினோ.     37
உருவல னருவல னொருவன்மற் றிருவருக்
கரியவ னெனவுணர்ந் தறைகுந ரறைகமற்
பரவைதன் மனைவயிற் பாவல னேவலின்
இருமுறை திரிதலி னௌியனென் றௌியனும்
பரவுவன் மன்றம் பணிந்து.     38
அங்கட் கமலத் தலர்கமல மேயீரு நீரேபோலும்
வெங்கட் சுடிகை விடவரவின் மேயீரு நீரேபோலும்
திங்கட் சடையீருந் தில்லைவனத் துள்ளீரு நீரெபோலும்    39
வெஞ்சம னஞ்ச வேலொ டெதிர்ந்தா னமரங்காள்
அஞ்ச லெனுஞ்சொல் லார்சொல வல்லார் நமரங்காள்
மஞ்சிவ ரிஞ்சி மன்ற மிறைஞ்சீர் நமரங்காள்
நஞ்சமயின்றார் நல்குவர் மாதோ நமரங்காள்.     40
பொற்றாது பொதிந்த சிற்சபை பொலியப்
பச்சிளங் கொடியொடு படரும்
செக்கர் வார்சடைக் கற்பக தருவே.    41
பூஉந் தண்ண் புனமயி லகவ
மாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பக்
கோஒ டரங்கண் முசுவொடும் வெரீஇக்
காஅ றழீஇக் கவிழ்ந்ந் தொடுங்கச்
சூஉன் முதிர்ந்து காஅல் வீஇழ்
வாஅன் றாஅழ் மழைப்பெய றலைஇத்
தேஎன் றாஅழ் பூஉங் காஅ
வளங்ங் கனிந்த மணிமன்றுள்
விளங்ங் கொளியை யுளங்கொள றவமே.     42
தண்ணென் கடுக்கை கண்ணீர் கலுழ்தர
வெண்மதிக் கண்ணி சூடும்
கண்ணுதற் கடவுள்
புண்ணியப் பொதுவி லாடும் பூங்கழ லிறைஞ்சுதும்
விண்மிசைப் போகிய வீடுபெறற் பொருட்டே.    43
மாயிரு விசும்பிற் றூநிலாப் பரப்பிப்
பாயிருள் சீக்கும் பனிமதிக் கண்ணியும்
மின்செய் கொண்மூ வெள்ளிவீழ் வீழ்ப்பப்
பொசெய்மலர்ப் பூங்கொன்றையும்
புலியூர் மன்றி னொலிகழன் மிழற்றப் ........(5)
பரம நாடக மிருவரைக் காட்டும்
எரிநிறத் தைம்முகத் தெண்டோன் முக்கட்
கருமிடற் றொருவநின் செஞ்சடைப் பொலிதலின்
நோயு மருந்து மொருவழிக் கிடைத்தென
ஆருயிர் தரித்தன ளன்றே யதாஅன்று ........(10)
தெள்ளமு தன்னவ ருள்ளுயிர் குடிக்குமித்
திங்க ளொன்றே திருமுடிக் கணியின்
கங்கை யாளு முயிர்வா ழாளே.     44
தீர்தத மென்பது சிவகங் கையே
ஏத்த ருந்தல மெழிற்புலி யூரே
மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே.     45
சத்தமு மாகியச் சத்தத் தாற்பெறும்
அத்தமு மாகலி னனந்தன் கண்களே
உத்தம னைந்தெழுத் துருவங் காண்பன.    46
சிற்றம் பலத்து நடிக்குஞ் சிவபெருமான் ........(1)
கற்றைச் சடைக்கு முடிக்குஞ் சுடர்த்திங்கள்
மற்றப் புனன் மங்கை வாணுதலை யொக்குமால்.
பேரம் பலத்து நடிக்குஞ் சிவபெருமான்
வார்செஞ் சடைக்கு முடிக்குஞ் சுடர்திங்கள்
நீர்மங்கை கொங்கைக்கு நித்திலக்கச் சொக்குமால். ........(2)
பொன்னம் பலத்து நடிக்குஞ் சிவபெருமான்
மின்னுஞ் சடைக்கு முடிக்குஞ் சுடர்த்திங்கள்
அந்நங்கை செங்கைக் கணிவளையு மொக்குமால். ........(3)    47
நாகம் பொதிசடைமே னாண்மதியும் வாண்மதிபோ னங்கை கங்குல்
மேகஞ்செய் கூந்தன் மிலைச்சுந் தலைக்கலனும் விளங்குந் தோற்றம்
ஆகம் பகுந்தளித்த வந்நாளி லம்பலத்தான்
மாகம் பதியு மதியும் பகுந்தளித்த வண்ணம் போலும்.     48
மாயிரு ஞாலத்து மன்னுயிர்கள் கண்களிப்ப மன்று ளாடும்
நாயகன் கண்டங் கறுத்தன்றே பொன்னுலகை நல்கிற் றம்மா
நாயகன் கண்டங் கறாதேலந் நாட்டமரர்
சேயிழை மாதருக்குச் செங்கைகளுங் கொங்கைகளுஞ் சிவக்கும் போலும்.    49
உண்டாங் கெனினு மிலதென் றறிஞர்கள் பொய்யெனப் புகலவு மெய்யெனப் பெயர்பெற்
    றுன்னாமுன மின்னாமென வுளதாய் மாய்வது நிலையில் யாக்கை
    கண்டாங் கிகழுங் கிழமுதி ரமையத் தைவளி பித்தென மெய்தரும் வித்திற்
    கடலிற் றிரையென வுடலிற் றிரையொடு கலியா நின்றன நலிவுசெய் நோய்கள்
    புண்டாங் கயின்முக் குடுமிப் படையொடு மெயிறலைத் தழல்விழித் துயிருணக் கனல்சேர்
    புகையாமென நிழலாமெனத் திரியா நின்றது கொலைசெய் கூற்றம்
    விண்டாங் ககலுபு மெய்ப்பொரு டுணிவோர் மின்பொலி பொன்புனை மன்றிலெம் முயிராம்
    விமலன் குஞ்சித கமலங் கும்பிட வேண்டுவர் வேண்டார் விண்மிசை யுலகே.     50

திங்கட் சடைக்கற்றைப் புத்தே டிருமார்பிற்
பைங்கட் டலைகள் பலவு நகுவ போலுமால்
பைங்கட் டலைகள் பலவு நகுவகண்
டங்கட் கமலத் தயனு மாலு மழுவரால்.     51
கனம ளித்தபைங் காவில்வெண் டரளமும்
    பவளமுங் கமுகீனப்
    புனம ளித்தபூங் கொன்றைபொன் சொரிதரப்
    புண்ணிய மலர்தில்லை
    வனம ளித்ததே யெனினுமோ ரானந்த
    மாக்கடற் றிளைத்தாடும்
    அனம ளித்தவேழ் பொழிற்குமோர் பலமென்ப
    தம்பொனம் பலந்தானே.     52
கோமுனி வருக்குமரி தாய்முதும றைப்பனுவல்
    கூறிய பரப்பிரமமாம்
    ஓமெனு மெழுத்தின்வடி வாய்நட நவிற்றுபுலி
    யூரன்மகு டச்சடிலமேல்
    மாமதி யினைத்தனது கோடென வெடுப்பமத
    மாமுகன் முகக்கை தொடரத்
    தூமதி பணிப்பகை யெனாவர நதிப்புகவொர்
    தோணியென விட்டகலுமே.     53
அருவருக்கு முலகவாழ் வடங்க நீத்தோர்க்
    கானந்தப் பெருவாழ்வா மாடல் காட்ட
    மருவருக்கன் மதிவளிவான் யமானன் றீநீர்
    மண்ணெனுமெண் வகையுறுப்பின் வடிவுகொண்ட
    ஒருவனுக்கு மொருத்திக்கு முருவொன் றாலவ்
    வுருவையிஃ தொருத்த னென்கோ வொருத்தி யென்கோ
    இருவருக்கு முரித்தாக வொருவ ரென்றோர்
    இயற்சொலில தெனின்யான்மற் றென்சொல் கேனே.     54
வளங்கு லாவரு மணங்க னார்விழி
    மயக்கி லேமுலை முயக்கி லேவிழு மாந்தர்காள்
    களங்கு லாமுட லிறந்து போயிடு
    காடு சேர்முனம் வீடு சேர்வகை கேண்மினோ
    துளங்கு நீள்கழ றழங்க வாடல்செய்
    சோதி யானணி பூதி யானுமை பாதியான்
    விளங்கு சேவடி யுளங்கொ ளீர்யமன்
    விடுத்த பாசமு மடுத்த பாசமும் விலக்குமே.    55
கைத்தலத்த ழற்க ணிச்சி வைத்திடப்பு றத்தொ ருத்தி
    கட்கடைப்ப டைக்கி ளைத்த திறலோராம்
    முத்தலைப்ப டைக்க ரத்தெ மத்தர்சிற்ச பைக்கு ணிற்கும்
    முக்கணக்க ருக்கொ ருத்தர் மொழியாரோ
    நித்திலத்தி னைப்ப தித்த கச்சறுத்த டிக்க னத்து
    நிற்குமற்பு தத்த னத்தி னிடையேவேள்
    அத்திரத்தி னைத்தொ டுத்து விட்டுநெட்ட யிற்க ணித்தி
    லக்கணுற்றி டச்செய் விக்கு மதுதானே.     56

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.