LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

வெண்டைக்காய் புளிக்குழம்பு

தேவையானவை :

1. வெண்டைக்காய் - 12 (சிறியதாக நறுக்கியது)

2. சின்ன வெங்காயம் - 10

3. தக்காளி - 1 (நறுக்கியது)

4. பூண்டு - 6 பற்கள்

5. புளிச்சாறு - 1/4 கப்

6. உப்பு - தேவையான அளவு

7. சர்க்கரை - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு :


1. கடுகு - 1 டீஸ்பூன்

2. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
 
3. வரமிளகாய் - 2

4. கறிவேப்பிலை - சிறிது
 
5. நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு :

1. எண்ணெய் - 1 டீஸ்பூன்

2. மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

3. வரமிளகாய் - 8
 
4. தேங்காய் துருவல் - 1/2 கப்

செய்முறை :

1. அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

2. பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்து, பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

3. பின்பு அதில் வெண்டைக்காயை சேர்த்து பத்து நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் உப்பு, சர்க்கரை, அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் கிளறி விட வேண்டும். பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு ரெடி!!!

by Swathi   on 29 Jan 2016  0 Comments
Tags: Vendakkai   Vendakkai Puli Kulambu   வெண்டைக்காய் புளிக்குழம்பு   Ladies Finger Puli Kulambu           
 தொடர்புடையவை-Related Articles
வெண்டைக்காய் புளிக்குழம்பு வெண்டைக்காய் புளிக்குழம்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.