LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- ஜி.ராஜேந்திரன்

வெந்நீர் கேட்ட மீன்

 

"வாங்க, வாங்க... நல்ல மீன் இங்கே இருக்கு, வாங்க வாங்க மீனு வாங்க வாங்க''  மீன்காரி, பாட்டியை கூப்பிட்டாள். பாட்டி மீன்களைப் பார்த்துகிட்டே நடந்தாங்க.மரப்பலகைகளுக்கு மேலே மீன்களை வரிசையாக வைத்திருந்தாங்க. பலவகையான மீன்கள்... 


பாட்டியின் பேத்தி ஆனந்தி. ஆனந்திக்கு மீன் குழம்புண்ணா ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் மீன் வாங்க வந்திருந்தார் பாட்டி. 
 


பாட்டி மீன்களைப் பார்த்துக்கிட்டே வந்தார். அதில் ஒரு மீன் பாட்டியையே பார்ப்பது போல் இருந்தது . பாட்டி அந்த மீனின் அருகில் சென்றார். அந்த மீனைப் பார்த்தார். அதோட பெரிய கண்கள் பாட்டியையே பாக்கிறமாதிரி இருந்தது. பாட்டி அந்த மீனை வாங்கினார். வீட்டுக்கு வந்தார். ஆனந்தி வருவதற்குள்  மீனைக் கழுவி வைக்கலாம் என்று  நினைத்து  மீனைக் கல்லில் வைத்து தேய்க்கப் போனார் "பாட்டி, பாட்டி என்னைத் தேய்க்காதே! என் உடம்பு வலிக்குது...''  என்று  மீன் பேசியது.
 


என்ன பேச்சுச் சத்தம். என்று  பாட்டி அங்கயும் இங்கயும் பார்த்தாங்க. ஆனா யாரும் இல்லை என்று  நினைத்து கொண்டார்கள். மறுபடியும் மீனை கல்லில் வைத்து  தேய்க்கப்போனாங்க.
 


"பாட்டி பாட்டி எம் ஒடம்பு வலிக்குது என்ன தேய்க்காதீங்க" மீனு சத்தமாக கத்தியது.


"ஓஹோ! நீ தான் பேசினாயா?'' என்று  பாட்டி கேட்டார்கள்.


"ஆனந்தி வருவதற்குள் குழம்பு வைக்கணும் உன்னை வெட்டித் துண்டு போடறப்போறேன்" என்று பாட்டி கத்தியை எடுத்தார்கள். 


"என்னை விட்டுவிடுங்க  பாட்டி. அந்தத் தண்ணீர்த் தொட்டியில் போடுங்க''என்று மீன் கெஞ்சிக் கேட்டது . பாட்டி மீனைப் பார்த்தர்கள் . பாவம என்று நினைத்து . தண்ணீர்த் தொட்டியில் விட்டுட்டார்கள்.

 

மாலையில்  வேலைக்குப் போன ஆனந்தி திரும்பி வந்தாள். மீனைப் பார்க்க வேகமாக ஓடினாள். ஓடும்போது வாழைப் பழத்தோலில்  மிதிச்சு. வழுக்கி விழுந்தாள். அவ கால் உடைந்து போனது .


"ஐயோ! அம்மா!!''  என்றபடி அங்கேயே உட்கர்ந்தாள். கண்களில் தண்ணீர் பொல பொலவென்று கொட்டியது. அதைப் பார்த்த பாட்டியும் அழுதாள். மருத்துவமனைக்குக் கூட்டிட்டு சென்றார் பாட்டி.


மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்தார். ஆனால் அவளால் முன் போல நடக்க முடியாது என்று மருத்துவர் கூறினார். வேலைக்கும்போக முடியல. வெளியிளையும்  போக முடியவில்லை .  மனம் உடைந்து போனால்.


நாட்கள் வாரங்களாகியது . வாரங்கள் மாதங்களாகியது . மாதங்கள் வருடங்களாகியது  ஆனந்திக்கு கல்யாணம் பண்ணனும் என்று பாட்டி நினைத்தார்கள் . பலபேருகிட்ட சொல்லிவைச்சாங்க.


ஆனந்தியைப் பெண் பார்க்க பலபேர் வந்தார்கள். ஆனால் வேண்டாம் என்று  சொல்லிவிட்டு  போய்ட்டாங்க.


ஒருநாள் காலை நேரம். "ஆனந்தி, ஆனந்தி'' என்று யாரோ அன்பாக கூப்பிடற சத்தம் கேட்டது . ஆமா. தொட்டிலில்  இருக்கிற  மீன்தான் ஆனந்தியை கூப்பிட்டது . ஆனந்தி நொண்டி நொண்டி மெல்ல தொட்டிக்கருகே போனாள்


"ஆனந்தி நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ" அப்படீண்ணு மீன் சொல்லியது . ஆனந்தி யோசித்துப் பார்த்தாள். யாரும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறாங்க. இந்த மீனையாச்சும் கல்யாணம் செய்துக்குவோம் என்று முடிவு செய்தாள். மீனுக்கும் ஆனந்திக்கும் கல்யாணம் நடந்தது.


ஒருநாள் ஆனந்தி முல்லை பூ மாலை கட்டி கொண்டிருந்தாள். என் வாழ்க்கை இப்படியாகியது என்று நினைத்து அழுதாள். கடவுளை வேண்டிக்கிட்டு மனம் வருந்தி கை கூப்பி அழுதாள். அப்ப "ஆனந்தி ஆனந்தி''  என அன்பான குரல்ல மீன் கூப்பிட்டது.

"என்னங்க''  என்றபடி தொட்டியின் அருகே சென்றாள்.

 

"கொஞ்சம் வெந்நீர் வைச்சுத் தருவியா? குளிர்ந்த நீரில் குளிச்சுக் குளிச்சு போதும் போதும் என்று இருக்கிறது''  மீன் பேசியது. ஆனந்தியும் சரி என்று அடுப்பை மூட்டினாள். வெந்நீர் வைத்தாள். ஒரு பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி மீன் அருகே வைத்தாள். ஒரு குவளையில வெந்நீர் எடுத்து ஊற்றினாள். அவ்வளவுதான் வெந்நீர் பட்டதும் மீனோட உடம்பு கரைஞ்சு விழுந்தது. 



அங்கிருந்து பளிச்சென்று வெளிச்சம் வந்தது. ஆனந்தியோட கண்ணெல்லாம் கூசியது.



அவ கண்களை மூடிக்கிட்டாள். முல்லைப் பூ வாசம் அங்கே பரவியது. ஆனந்தியை யாரோ தொடர்வது போல் இருந்தது.. அவள் மெல்ல கண்களை திறந்தாள். அவளுக்குத் அவளோட கண்களை நம்பவே முடியவில்லை.


அங்க அந்தத் தொட்டிக்குப் பக்கத்தில் அழகான இளவரசன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் ஆனந்தியைப் பார்த்துச் அழகாச் சிரிச்சான். ஆனந்திக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. எம் புருஷன் ஒரு மீன் இல்லை. அவர் ஓர் இளவரசண்ணு நினைத்து மகிழ்ச்சி அடைந்தாள்.


இளவரசன் சிரித்து கொண்டே ஆனந்தியோட காலைத் தொட்டான். என்ன ஆச்சரியம்! கால் குணமாகியது. ஆனந்தியோட மகிழ்ச்சிக்கு ஆளவே இல்லை.


அவள் அப்படியே புருஷனோட தோள் மேல சாஞ்சுகிட்டாள். அப்புறம் இளவரசன் ஆனந்தியையும், பாட்டியையும் ஆழ்கடல் மாளிகைக்கு கூட்டி கொண்டு போனான். அங்கு அவங்க ரொம்பா காலம் சுகமாக வாழ்ந்தார்கள்.

by Swathi   on 11 Mar 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
01-Oct-2018 18:25:53 ஆனந்தி said : Report Abuse
கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. சிறு குழந்தைகள் வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் மூழ்கி இருப்பதைத் தடுத்து இது போன்ற கதைகள் கதை கேட்கும் திறனையும் ஆர்வத்தையும் வளரச்செய்கிறது.. நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.