வெனிசுலா நாட்டின் புரட்சி தலைவரும், அந்நாட்டின் அதிபருமான ஹுவே சவேஸ் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதி பட்டு வந்த அவருக்கு நான்கு முறை கியூபாவில் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த இரு நாட்களாக சவேசிற்கு மூச்சுவிடுவதில் கோளறு ஏற்பட்டதால், வெனிசுலாவில் உள்ள அவரது வீட்டில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அதிபர் சவேஸின் மறைவிற்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஹுவே சவேஸ் அவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக வெனிசுலாவின் அதிபராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
|